Guru Vakra Peyarchi: களம் எட்டில் தனுசு ராசிக்கு அடிக்கும் அதிர்ஷ்டம் - டபுள் ப்ரோமோஷன்
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரையிலான குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை, அதிர்ஷ்டம் தரும் விஷயங்கள் எவை என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவம்பர் 12 ஆம் தேதி முதல் மார்ச் 11 ஆம் தேதி வரை குரு பகவான் வக்கிரமாக இருக்கிறார். குரு வக்கிரம் என்பது எல்லாமே இருப்பது போல இருக்கும் ஆனால் இருக்காது. குரு ஒரு ஜாதகத்தில் வக்கிரமாக இருந்தால் அவர்களுடைய வளர்ச்சி மின்னல் வேகத்தில் இருக்கும். நிறைய அரசியல்வாதிகள், கலைஞர்கள் குரு வக்கிரமாகும் போது, சனி வக்கிரமாகும் போது உச்சத்தை தொடுவார்கள். நிறைய அரசியல் கட்சியினர் தொண்டர்களாக இருந்தவர்களுக்குப் பெரிய பதவி கிடைக்கும். முக்கிய புதிய முடிவுகளை எடுப்பீர்கள். முடிவுகள் மாற்றி எழுதப்படும்.

விதியை மாற்றி எழுதக்கூடிய சக்தி குரு வக்கிரப் பெயர்ச்சியாக இருக்கும்போது சிலருக்கு கிடைக்கும். சிலருக்கு திருமண யோகம், புதிய வேலை, புதிய முயற்சிகள் என நல்ல விஷயங்கள் அனைத்தும் குரு வக்கிரமாகும் போது நடக்கும். எந்த ஜாதகத்தில், குரு, சனி வக்கிரமாக இருக்கிறதோ அவர்கள் புரட்சி செய்து மேலே வருவார்கள். ஒரு இடத்தைக் காலி செய்துவிட்டு மேலே வருவார்கள். குரு என்பது பயங்கராமன புத்திக் கூர்மையைக் குறிக்கும். சாலையில் கிடப்பதை தங்கமாக மாற்றக்கூடிய யோகம் குரு வக்கிரமாக இருக்கக் கூடியவர்களுக்கு நடக்கும்.
இந்த குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசி அல்லது தனுசு லக்கினம் சார்ந்த நபர்களுக்கு உங்கள் ராசி அதிபதி ஏழாம் இடத்தில் வக்கிரமாக உள்ளார். சுப காரிய தடைகள் நிவர்த்தியாகும். திருமணம் முயற்சியில் இருப்போருக்கு மனதிற்கு பிடித்தபடியான வரன் கைக் கூடிவரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அடுத்தடுத்து நல்ல செய்திகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
வெற்றி
உத்யோகத்தில் இருக்கும் சிலர் நீண்ட காலமாக திட்டமிட்ட சுய தொழில் தொடர்பான முயற்சிகளில் இறங்குவார்கள். ஐ.டி, விற்பனை, பத்திரிகை ஊடகம் தொடர்பாக புதிய தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புள்ளது. அதற்கு நல்ல தொழில் கூட்டாளிகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற அங்கீகாரம் கிடைக்கும். உங்களின் பலத்தை நீங்களே அறியுமளவுக்கு பல சாதனைகளை படைக்க வாய்ப்புள்ளது. உங்களின் முயற்சிகள் ஒவ்வொன்றும் வெற்றியை பெறும்.
மரியாதை
சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை கூடும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். கடந்த காலங்களில் இழந்தவற்றை படிப்படியாக மீட்பீர்கள். பிரிந்த உறவுகள் ஒன்றிணைவார்கள். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. உங்களின் வைராக்கியத்தால் எதிர்பாராத உயரத்திற்கு செல்வீர்கள். பொருளாதாரம் மேம்படும். கடன் சுமை குறையும்.
கவனம்
உணர்ச்சிவசப்பட்டு யாரையும் நம்பி விட வேண்டாம். உறவுகள், நண்பர்களிடம் பணம் சார்ந்த விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கழுத்து, வயிறு சம்பந்தப்பட்ட பகுதிகளில் அதிக எச்சரிக்கை தேவை. ராமேஸ்வரம் ராமநாதர், சேது மாதவன் கோயில் சென்று வழிபடுவது அற்புதமான மாற்றங்களை கொடுக்கும்.


Click it and Unblock the Notifications
