Guru Vakra Peyarchi: ஜாவா சுந்தரேஷனாக மாறும் மீன ராசி.. இழந்தவை எல்லாம் மீண்டும் பெறும் யோகம்
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரையிலான குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை, அதிர்ஷ்டம் தரும் விஷயங்கள் எவை என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவம்பர் 12 ஆம் தேதி முதல் மார்ச் 11 ஆம் தேதி வரை குரு பகவான் வக்கிரமாக இருக்கிறார். குரு வக்கிரம் என்பது எல்லாமே இருப்பது போல இருக்கும் ஆனால் இருக்காது. குரு ஒரு ஜாதகத்தில் வக்கிரமாக இருந்தால் அவர்களுடைய வளர்ச்சி மின்னல் வேகத்தில் இருக்கும். நிறைய அரசியல்வாதிகள், கலைஞர்கள் குரு வக்கிரமாகும் போது, சனி வக்கிரமாகும் போது உச்சத்தை தொடுவார்கள். நிறைய அரசியல் கட்சியினர் தொண்டர்களாக இருந்தவர்களுக்குப் பெரிய பதவி கிடைக்கும். முக்கிய புதிய முடிவுகளை எடுப்பீர்கள். முடிவுகள் மாற்றி எழுதப்படும்.

விதியை மாற்றி எழுதக்கூடிய சக்தி குரு வக்கிரப் பெயர்ச்சியாக இருக்கும்போது சிலருக்கு கிடைக்கும். சிலருக்கு திருமண யோகம், புதிய வேலை, புதிய முயற்சிகள் என நல்ல விஷயங்கள் அனைத்தும் குரு வக்கிரமாகும் போது நடக்கும். எந்த ஜாதகத்தில், குரு, சனி வக்கிரமாக இருக்கிறதோ அவர்கள் புரட்சி செய்து மேலே வருவார்கள். ஒரு இடத்தைக் காலி செய்துவிட்டு மேலே வருவார்கள். குரு என்பது பயங்கராமன புத்திக் கூர்மையைக் குறிக்கும். சாலையில் கிடப்பதை தங்கமாக மாற்றக்கூடிய யோகம் குரு வக்கிரமாக இருக்கக் கூடியவர்களுக்கு நடக்கும்.
இந்த குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மீனம்
மீனம் ராசி அல்லது மீனம் லக்கினம் சார்ந்த நபர்களுக்கு சுக ஸ்தானத்தில் குரு வக்கிரமாக அமர்ந்திருக்கிறார். வீடு, வண்டி, வாசல், சொத்துக்கள், காளை மாடு, பசு மாடு, இயற்கையான விஷயங்கள், விவசாயம், நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாமே நன்றாக இருக்கும். ஜாதகத்தில் குரு அல்லது செவ்வாய், சுக்கிரன், செவ்வாய், புதன் ஏதாவது ஒரு கிரகம் கும்பம், துலாமில் வக்கிரமாக இருந்தால் வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.
யோகம்
பசு மாடுகளை வாங்கி தானமாகக் கொடுப்பீர்கள். காளை மாடு வாங்கும் யோகம் உண்டாகும். விவசாயம் செழிக்கும். உங்கள் வீட்டில் மட்டும் நல்ல காரியங்கள் நடக்கும் யோகம் உண்டாகும். உங்கள் வீட்டில் 10 பேருக்கு சமைத்து போட்டு சாப்பிட்ட சந்தோஷமாக வாழ்த்தக் கூடிய யோகம் ஏற்படும். தை மாதம் உங்கள் வீட்டில் திருமண யோகம் உண்டாகும்.
படிப்பு
படிக்கவே முடியவில்லை, படிப்பு மோசமாக இருக்கிறது என்பவர்களுக்கு படிப்பு நன்றாக இருக்கும். படிக்காத உங்கள் குழந்தை இனி படிக்க ஆரம்பிப்பார்கள். நல்ல படிப்புகள், நல்ல ஆசிரியர்கள் கிடைப்பார்கள். வங்கிகளில் வேலை கிடைக்கும். கணக்கர், ஆடிட்டர் போன்ற துறைகளில் வேலை கிடைக்கும் யோகம் உண்டாகும். புதிதாக உற்பத்தி யூனிட்டுகளை அமைக்கும் யோகம் உண்டாகும்.
ஆரோக்கியம்
மார்பு, இதயப் பகுதி, நுரையீரலில் இருந்து வந்த பெரிய பிரச்சனைகள் சிறிதாக முடியும். குழந்தைகளைப் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. விரய ஸ்தானம் என்பது 4 ஆம் இடம். மிகவும் கட்டுப்பாட்டுடன், ஒழுக்கத்துடன் குழந்தைகளை வளர்க்க முயற்சி செய்வீர்கள். அன்பாக முயற்சிப்பது நல்லது. அடித்தோ மிரட்டி செய்வதை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
இடமாற்றம்
இடம் விட்டு இடம் மாறுவது, ஊர் மாறுவது, வீடு மாறுவது போன்ற சூழல் ஏற்படும். சிலருக்கு நல்ல வீடுகள் அமையும். பக்கத்தில் நூலகம் இருக்கும். கணினி தொடர்பான நிறுவனங்கள் அல்லது பெருமாள், கிருஷ்ணர் கோயில் இருக்கும் பகுதியில் வீடு அமையும். பத்திரப் பதிவு துறை இருக்கும் பகுதிகளில் வீடு அமையும். குரு வக்கிரமாக இருப்பதால் கட் அண்ட் ரைட்டாக லாஜிக் பார்ப்பீர்கள். அதனை தவிர்த்து உணர்ச்சிகளுக்கு மதிப்பளிப்பது நல்லது.
இழந்தது மீண்டும் கிடைக்கும்
அன்பு, பாசம் கொடுப்பது, தான தர்மங்களை செய்வது நன்மை பயக்கும். குழந்தைகள் நன்றாக இருப்பார்கள். பெரியவர்கள், முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த காலகட்டமாக இருக்கும். பல சங்கடங்கள், சர்ச்சைகள், பிரச்சனைகளில் சிக்கினாலும் அதில் இருந்து விடுதலையாகக் கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். இழந்த வீடு கிடைக்கும். இழந்த சொந்தம் இப்போது உங்களை மதிக்கும். உங்கள் வீட்டில் வைத்து சுப காரியங்கள் நடக்கும். தாய்க்கு இருக்கும் மனக் கவலைகள் நீங்கும்.
வழிபாடு
சந்தோஷம் ரீதியாக 75 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 90 சதவீதமும் நன்றாக இருப்பீர்கள். குருவாயூர் கிருஷ்ணரை வழிபாடு செய்வது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். பசு மாட்டுக்கு அகத்திக்கீரை கொடுப்பது நன்மை பயக்கும்.
-
Simmam Rasi Palan: "குறி வச்சா இரை விழும்".. சிம்ம ராசிக்கு தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு வீடு, நிலம்னு செட்டிலாகும் யோகம்.. கவர்ன்மென்ட் வேலை கன்ஃபார்ம் -
Mithunam Rasi Palan: மிதுன ராசிக்கு பிரகாசமான மாற்றம்.. தொழிலில் அடிக்கும் ஜாக்பாட் -
Rishabam Rasi Palan: லக்கி பாஸ்கராக மாறும் ரிஷப ராசி.. திடீர் அதிர்ஷ்டத்தால் அற்புதமான முன்னேற்றம் -
Mesham Rasi Palan: மேஷம் ராசிக்கு சொந்த வீடு வாங்கும் யோகம்.. இந்த வார பலன்கள்.. முழு விவரம் -
Kumbam: கும்ப ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டதெல்லாம் ஹிட்டாகப் போகுது -
Dhanusu: தனுசு ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளும் நேரம்.. அள்ளிக் கொடுக்கும் குரு பகவான் -
Viruchigam: ஆட்டத்தை ஆரம்பிக்கும் விருச்சிக ராசி... குருவின் பார்வையில் கொட்டும் அதிர்ஷ்டம் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications