Guru Vakra Peyarchi: சிம்ம ராசிக்கு குருவின் அருளால் வரிசை கட்டி நிற்கும் அதிர்ஷ்டம்.. என்ஜாய்
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரையிலான குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை, அதிர்ஷ்டம் தரும் விஷயங்கள் எவை என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவம்பர் 12 ஆம் தேதி முதல் மார்ச் 11 ஆம் தேதி வரை குரு பகவான் வக்கிரமாக இருக்கிறார். குரு வக்கிரம் என்பது எல்லாமே இருப்பது போல இருக்கும் ஆனால் இருக்காது. குரு ஒரு ஜாதகத்தில் வக்கிரமாக இருந்தால் அவர்களுடைய வளர்ச்சி மின்னல் வேகத்தில் இருக்கும். நிறைய அரசியல்வாதிகள், கலைஞர்கள் குரு வக்கிரமாகும் போது, சனி வக்கிரமாகும் போது உச்சத்தை தொடுவார்கள். நிறைய அரசியல் கட்சியினர் தொண்டர்களாக இருந்தவர்களுக்குப் பெரிய பதவி கிடைக்கும். முக்கிய புதிய முடிவுகளை எடுப்பீர்கள். முடிவுகள் மாற்றி எழுதப்படும்.

விதியை மாற்றி எழுதக்கூடிய சக்தி குரு வக்கிரப் பெயர்ச்சியாக இருக்கும்போது சிலருக்கு கிடைக்கும். சிலருக்கு திருமண யோகம், புதிய வேலை, புதிய முயற்சிகள் என நல்ல விஷயங்கள் அனைத்தும் குரு வக்கிரமாகும் போது நடக்கும். எந்த ஜாதகத்தில், குரு, சனி வக்கிரமாக இருக்கிறதோ அவர்கள் புரட்சி செய்து மேலே வருவார்கள். ஒரு இடத்தைக் காலி செய்துவிட்டு மேலே வருவார்கள். குரு என்பது பயங்கராமன புத்திக் கூர்மையைக் குறிக்கும். சாலையில் கிடப்பதை தங்கமாக மாற்றக்கூடிய யோகம் குரு வக்கிரமாக இருக்கக் கூடியவர்களுக்கு நடக்கும்.
இந்த குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு குரு வக்கிரமாக இருக்கிறார். எந்த கோணத்தில் நீங்கள் நன்மைகள் நடக்க வேண்டும் என நினைக்கிறீர்களோ அந்த கோணத்தில் கண்டிப்பாக நன்மைகள் கிடைக்கும். திருமணமாகாமல் கஷ்டப்படுபவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். சகோதரர்கள், நண்பர்களின் ரெஃபரன்ஸ் மூலமாக நல்ல வரன்கள் அமையும்.
திருமண யோகம்
அப்பாவிடம் இருந்து நிறைய பத்திரங்கள் கிடைக்கும். எதிர்பார்க்காத வகையில் திருமண யோகம் உண்டாகும். வராத பதவி உயர்வுகள் வந்து சேரும். வராத நட்பு மீண்டும் வந்து சேரும். எதிரிகள் உங்கள் காலிலேயே விழும் அளவுக்கு யோகம் ஏற்படும். குரு வக்கிரமாகும் போது பல விஷயங்கள் தானாக வந்து அமையும். அரசியல் பதவிகள் தேடி வரும்.
பதவி உயர்வு
நாடாளக் கூடிய, அரசாளக் கூடிய, மாகாணத்தை ஆளக் கூடிய, உங்கள் துறை, பள்ளிகளில் பெரிய பதவி உயர்வு கிடைக்கும். பிஎச்டி, தீசிஸ் முடித்து காத்திருப்பவர்களுக்கு முனைவர் பட்டம் பெறும் யோகம் உண்டாகும். அடுத்த கட்டத்துக்குச் செல்லும் யோகம் ஏற்படும். நிறைய பேருக்கு பெரிய பதவிகள், பெரிய பரிசுகள் வந்து சேரும். உங்கள் டார்கெட்டுகளை சாதித்து முடிக்கும் பாக்கியம் உண்டாகும்.
லட்சியம் வெற்றி பெறும்
லட்சியத்தில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். பல நட்புகள் உங்களுக்கு சாதகமாக மாறும், பல நட்புகள் உங்களுக்கு சாதகமாக உருவாகும். அண்ணன், தம்பிகள் மீண்டும் ஒன்று சேருவீர்கள். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டமாக இருக்கும். வீட்டில் பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பது நல்லது. யாருமே வேண்டாம், தனிமையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். எண்ண நடக்கிறது என்றே தெரியாமல் மனதில் ஏதோ ஒரு எண்ணம் ஓடிக் கொண்டே இருக்கும்.
வழிபாடு
தினந்தோறும் கோயிலுக்குச் செல்வது, விபூதி, சந்தனம் வைத்துக் கொள்வது அற்புதத்தை ஏற்படுத்தும். இறைவனிடம் சரணாகதி அடைவது உங்களுக்கு மேன்மைத் தரும். நல்ல மாற்றங்கள் தேடிக் கொண்டிருக்கும் சிம்ம ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் நன்றாக இருக்கும்.












Click it and Unblock the Notifications