கோவை களைகட்டப் போகுது.. இசைஞானி இளையராஜாவின் இசைக் கச்சேரியின் மறுதேதி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக் கச்சேரி கோவை கொடிசியா மைதானத்தில் மே 18 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இசைக் கச்சேரியின் தேதி, இடம் ஆகியவற்றை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திடீரென மாற்றி இருக்கிறார்கள். மே 18ஆம் தேதிக்கு பதிலாக 17 ஆம் தேதி கோவைப்புதூர் ஜி ஸ்கொயர் 7 ஹில்ஸ் மைதானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது இசைக் கச்சேரியின் மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணம், சந்தோஷம், சோகம் என அனைத்து தருணங்களிலும் நாம் தேடுவது இளையராஜா பாடல்களாகத்தான். ஆயிரமாயிரம் பாடல்களை இசையமைத்தும், தன் காந்தக் குரலாலும் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருந்தவர். சமீபகாலமாக இசை கச்சேரிகள் நடத்துவதில் இளையராஜா ஆர்வம் காட்டி வருகிறார். சென்னை போன்ற பெருநகரங்களில் இசை கச்சேரி நடத்தி வந்த நிலையில், தற்போது பல்வேறு மாவட்டங்களிலும் இசைக் கச்சேரியை நடத்த முடிவு செய்திருந்தார்.

ilayaraja-concert-announcement-of-the-rescheduled-date-of-the-concert-of-the-musician-ilayaraja-in

இளையராஜாவின் இசைநிகழ்ச்சியை கண்டிப்பாக நேரில் கண்டு ரசிக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு ரசிகரின் கனவாகவும் இருக்கும். அந்த வகையில் தற்போது கோவையில் இசைக் கச்சேரி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது கோவை ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், கச்சேரியின் தேதியை மீண்டும் மீண்டும் மாற்றி வருவது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜாவின் கச்சேரி கோவை கொடிசியா மைதானத்தில் மே 18 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் அந்த நிகழ்வு, இடம், தேதி ஆகியவற்றையை திடீரென மாற்றி இருக்கிறார்கள். மே 18 ஆம் தேதிக்குப் பதிலாக 17ஆம் தேதி கோவைப்புதூர் ஜி ஸ்கொயர் 7 ஹில்ஸ் மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்று கூறப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மே 17ஆம் தேதி கோவை புதூரில் இளையராஜாவின் நிகழ்ச்சி தொடர்ந்து நான்கு மணி நேரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு டிக்கெட்டுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வந்தனர்.

பல்வேறு மாவட்டங்களில் இளையராஜா இசைக் கச்சேரி நடத்தி வரும் நிலையில், இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் மற்றும் வேறு சில காரணங்களுக்காக இந்த நிகழ்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டது. அதே நேரத்தில் கச்சேரி நடைபெறும் நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது இசைக் கச்சேரியின் மறு தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அந்த வகையில், இந்த இசைக் கச்சேரி வரும் மே 31 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+