Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூரிய கிரகணம் நேரத்தில் குழந்தை பிறந்தால் யோகமா? தோஷமா? ஹீரோவா?வில்லனா? ஜோதிடம் சொல்வதென்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூரிய கிரகண நேரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கிரகண தோஷம் ஏற்படுகிறது என்பது ஜோதிட கணிப்பாக இருக்கிறது. கிரகணத்தில் பிறந்த நபர்கள் தெய்வ சக்திகளை அடைவதில் வல்லவர்கள்,சோதிடம் சொல்வது போன்ற நிலைகளில் வல்லவர்கள் என்று நூல்கள் சொல்கிறது. மாந்திரீக நபர்கள் இப்படி கிரகணத்தில் பிறந்தவர்களை தான் தேர்வு செய்து பலி பூஜை போட அல்லது இப்படி பிறந்த உயிர்களை பலி இட்டு தனக்கு அதீத சக்திகளை பெறுவார்கள் என்று சொல்லபடுகிறது.

பொதுவாக நிழல் கிரகங்கள் எனப்படும் ராகு, கேதுவுடன் மற்ற கிரகங்கள் ஒரே ராசியில் இருந்தால் அது கிரகண தோஷம் என்று சொல்லப்படுகிறது. கிரகணம் என்பது அணுசக்தி போன்றது நல்லதற்கும் பயன்படுத்தலாம். தீய விசயங்களுக்கும் பயன்படுத்தலாம்.

Is it yoga if a child is born during a solar eclipse? Dosha? What does astrology say?

சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்றாலே பொதுவாகவே எல்லோருக்கும் பயம்தான் இந்த நேரத்தில் தீயவைகளுக்கு சக்தி அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதே போல ராகு காலம் எம கண்ட நேரங்களும் ஒதுக்கி வைக்கப்படுகின்றன. நாளைய தினம் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழப்போகிறது. மேஷம் ராசியில் 4 கிரக சேர்க்கையும் நிகழும் இந்த நேரத்தில் கிரகண நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் அதீத சக்தியுடன் இருப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

கிரகணங்கள் ஏற்படுவது வானியல் நிகழ்வுதான் என்றாலும் ஜோதிடத்திலும் புராண கதைகளிலும் ராகு கேது எனப்படும் பாம்பு கிரகங்கள் சூரியனையோ சந்திரனையோ விழுங்கும் நிகழ்வு என்று சொல்லப்படுகிறது. இது நல்ல காலம் இல்லை. இந்த நேரத்தில் பிறக்கும் குழந்தைக்கு கிரகண தோஷம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிரகண தோஷத்தை யோகமாக மாற்றலாம்.

கிரகண காலத்தில் பிறக்கின்ற குழந்தைகளுக்கு ஜாதகத்தில் ராகு, கேது, சனி போன்ற பாவ கிரகங்கள் வலிமை பெற்றிருக்கும். இந்த நேரங்களில் பிறக்கும் குழந்தைகள் எப்படி இருக்கும் என்று கேள்வி வரலாம். அந்த குழந்தைகள் அதிக வலிமையோடும் ஆற்றலோடும் இருப்பார்களாம். இது அந்த குழந்தையை தலைவனாகவும் மாற்றும் தேவையற்ற சகவாசங்கள் ஏற்பட்டால் பயங்கர வில்லனாக அந்த குழந்தை மாறும் என்கின்றனர். ராவணன், ஜராசந்தன் போன்ற மிகப்பெரிய அரக்கர்கள் எல்லாம் கிரகண தோஷத்தில் பிறந்துள்ளதாக புராண கதைகள் சொல்கின்றன.

Is it yoga if a child is born during a solar eclipse? Dosha? What does astrology say?

சந்திர கிரகணத்தின்போது சந்திரன் மீது விழுவது பூமியின் நிழல். சூரிய கிரகணத்தின் போது பூமியின் மீது விழுவது சந்திரனின் நிழல். இப்படிப்பட்ட நிழல்வுகளால் பூமியில் இருக்கக்கூடிய ஜீவராசிகளுக்கு உடலிலும், மனதிலும் பல மாற்றங்கள் உருவாகின்றன. இந்த மாற்றங்களால் பாதிப்பு ஏற்படுவதையே தோஷம் என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. கர்ப்பிணிகள் கிரகண சமயத்தில் வெளியில் செல்லக்கூடாது என்றும் சொல்வார்கள்.

கிரகண நேரத்தில் பிறந்த ஒருவரது ஜாதகத்தில், சூரியன், சந்திரன், நிழல்கிரகங்கள் மிக நெருக்கமான பாதையில் அமைந்திருக்கும். சந்திரகிரகணத்தின் போது சூரியனும் சந்திரனும் நிழல் கிரகங்களுடன் இணைந்து சமசப்தமமாக இருக்கும். சூரிய கிரகணத்தின் போது சூரியன், சந்திரன், ராகு அல்லது கேது இம்மூவரும் மிக நெருக்கமான பாதையில் இருப்பர்.

சூரியன் சந்திரன் ராகு ஒரே வீட்டில் இருக்கும் போது கேது நேர் எதிர் வீட்டில் இருப்பது முழு சூரிய கிரகணம். அதே போல சூரியன் கேது ஒரு வீட்டிலும் நேர் எதிர் வீட்டில் ராகு சந்திரன் இருப்பது சந்திர கிரகண தோஷத்தை ஏற்படுத்தும்
வியாழக்கிழமையன்று மேஷம் ராசியில் ராகு, சூரியன்,புதன், சந்திரன் ஆகிய 4 கிரகங்கள் இணைந்திருக்கும் போது சூரிய கிரகணம் நிகழ்கிறது.

கிரகண தோஷம் அந்த குழந்தையை விட குழந்தையின் பெற்றோரைத்தான் பாதிக்கும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. சூரிய கிரகணத்தில் குழந்தை பிறந்தால் எதிர்காலத்தில் தந்தையின் வளர்ச்சி மற்றும் பொருளாதார நிலைகளை அது பாதிக்க வாய்ப்பு உள்ளது. அப்பாவிற்கும் மகனுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தந்தைவழி பூர்வீக சொத்துக்களை பெறுவதில் கூட சிக்கல் வரலாம்.

கிரகண காலத்தில் பிறந்தவர்கள் சிலருக்கு எந்த காரியத்திலும் தடையும் தாமதங்களும் ஏற்படும். ஏதோ ஒரு பதற்றத்திலேயே இருப்பார்கள். சிலருக்கு நோய் பாதிப்புகளும் ஏற்படும். இதற்கு ராகு கேது பரிகார சாந்தி செய்வதன் மூலம் காரியத் தடை ஏற்படுவதை தடுக்கலாம்.

Is it yoga if a child is born during a solar eclipse? Dosha? What does astrology say?

கிரகண நேரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் பலன்கள் கிடைக்கும் என்று சித்தரிகளின் குரல் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. சோதிட நூல்களில் சூரிய /சந்திர தேவர்களுடன் ராகு அல்லது கேது சேர்த்து பிறப்பது கிரகணத்தில் பிறந்தவர்கள் என்று குறிபிடுவார்கள். இப்படி சேர்கை உள்ள பொழுது பிறந்தவர்கள் மனதால் மிகவும் பலமானவர்கள். சந்திர கிரகணத்தில் பிறந்த நபர்களுக்கு அவர்கள் தாய் அதீத பாசமாகவும் சூரிய கிரகணத்தில் பிறத்தவர் மீது தந்தை பாசமாகவும் இருப்பார்கள் என்று நூல்கள் சொல்கிறது.

கிரகணத்தில் பிறந்த நபர்கள் தெய்வ சக்திகளை அடைவதில் வல்லவர்கள், குற்றம் கண்டு பிடிப்பது, மருந்து தயாரிப்பது, சோதிடம் சொல்வது போன்ற நிலைகளில் வல்லவர்கள் என்று நூல்கள் சொல்கிறது. மாந்திரீக நபர்கள் இப்படி கிரகணத்தில் பிறந்தவர்களை தான் தேர்வு செய்து பலி பூசை போட அல்லது இப்படி பிறந்த உயிர்களை பலி இட்டு தனக்கு அதீத சக்திகளை பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இவர்களுடைய கர்மத்தின் பயனால் 36 வயது வரை (அதாவது 18+18 - ராகு கேது ஒரு சுழற்சி) துன்பம் அனுபவித்தாலும் 40 வயதிற்கு மேல் நல்ல நிலைக்கு வருவார்கள்.

உலகில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒரே நட்சத்திர ராசிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு வாழ்க்கை முறை ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்று பலரும் கேட்கலாம். என்னதான் ஜாதகத்தில் கிரகங்கள் ஒரே மாதிரியாக அமைந்திருந்தாலும் அவரவர்களின் பூர்வ ஜென்ம கர்ம வினைப்படி வாழ்க்கைத்தரம் அமையும்.

கிரகண நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் அதிக ஆற்றலை பெற்றிருக்கும், அணுசக்தியை ஆக்க வழியிலும் பயன்படுத்தலாம், அழிவுக்கும் பயன்படுத்தலாம். உங்கள் குழந்தையிடம் உள்ள நல்ல ஆற்றலை நல்ல வழியில் பயன்படுத்தி ஹீரோவாகவோ, வில்லனாகவோ மாற்றுவது பெற்றோர்கள் கைகளில்தான் உள்ளது. எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர்கள் நல்லவர்கள் ஆவதும் தீயவர்கள் ஆவதும் பெற்றோர்கள் வளர்ப்பில்தான் இருக்கிறது.

அமாவாசையில் பிறந்தவர்கள் பற்றியும் சித்தர்களின் குரல் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. முன்னோர்களின் ஆசிகளை பெற்றவர்கள். இவர்களை பெற்றவர்கள் அவர்களுடைய பெற்றோர்களுக்கு (தாத்தா-பாட்டி) திதி கொடுக்காமல் இருந்தால் அந்த சாப வேதனை இவர்களை தாக்கும். இதனால் இவர்களுக்கு முன்னோர்களின் ஆசிகள் கிடைக்காமல் போகும். எத்தனை முயற்சி நல்ல படிப்பு அறிவு பலம் இருந்தாலும் நன்மைகள் நடக்காது.

இங்கே ஒரு கேள்வி அவர்களுக்கு என் பெற்றோர்கள் திதி கொடுக்க வில்லை என்றால் நான் ஏன் தரித்திரம் அனுபவிக்க வேண்டும் என்ற கேள்வி ஒரு ஒரு நபர்களுக்கும் வரும். இதற்கு நூல்கள் சொல்லும் பதில் தாத்தா/பாட்டனார் தான் சுழற்சியாக பேரனாக பிறக்கிறார் என்று சொல்லபடுகிறது. இந்த கருத்தை வைத்து தாத்தா சொத்து பேரனுக்கு என்று சொல்லப்படுகிறது.

இவ்வாறாக வேதனை அனுபவிக்கும் நபர்கள் ஆன்மாக்கள் சாந்திக்காக பல உயிர்கள் வழிபாடு செய்த சிவன் கோவில்களை வழிபட்டு வர ஆன்மாக்கள் சாந்தி பெற்று ஆசிகளை தருவார்கள். ராமேஸ்வரம், திருகனாப்போர் (காளையார் கோவில்), திருபஞ்சலி, திருவையாறு, சதுரகிரி ஆகிய ஆன்ம சாந்தி கோவில்களுக்கு வருடத்திற்கு ஒரு முறையாவது சென்று வழிபட்டு வந்தால் அமாவாசை பிறப்புகள் மேன்மை தரும் எனவும் சித்தர்களின் குரல் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+