லக்கி பாஸ்கராக மாறும் கன்னி ராசி.. கால் வைக்கும் இடமெல்லாம் சும்மா கரன்ஸி கொட்டும்
January matha palan: 2026 புத்தாண்டு ஜனவரி மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்கள் உள்ளன. கும்பத்தில் ராகு பகவானும், மீனத்தில் சனி பகவானும் இருக்கின்றனர். இந்த கிரகங்களின் அடிப்படையில் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதம் எப்படி இருக்கும். என்ன பலன்கள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாக இருக்கும். பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் இருக்கிறார். குடும்ப ஸ்தானத்தை குரு பார்க்கிறார். குரு 10 இல் இருப்பதால் நல்ல வருமானம் கிடைக்கும். நிறைய பிரச்சனைகள் இருந்தாலும் பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. வீடு, மனை, அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவதற்கான யோகம் உண்டாகும். பிள்ளைகளுக்கு படிப்பில் அற்புதம் ஏற்படும்.
படிப்பு
மாணவர்கள் வடக்கு, கிழக்கு திசை பார்த்து படிப்பது நன்மை பயக்கும், மந்தம் விலகும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சுக்கிரனை குரு பார்ப்பதால் நல்ல வருமானம், வீட்டினால் வரும் வருமானம், சொத்துகளால் வருமானம் வரும் யோகம் உண்டாகும். 3 ஆம் இடத்துக்கு அதிபதியாக இருக்கும் செவ்வாயும் அமர்ந்திருப்பதால் பழைய வீடு, சொத்துகளை விற்றுவிட்டு புதிய சொத்துகளை வாங்கும் யோகம் ஏற்படும்.
காதல், திருமணம்
இளைய சகோதரனுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். திருமண விஷயங்கள் கைகூடி வரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கும். வீட்டில் குட்நியூஸ் வரும், பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். காதலில் ஏதோ ஒரு ஊடல், தடுமாற்றம் வந்து கொண்டே இருக்கும். காதல், திருமணம் கைகூடும். உடல்நலனில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.
குலதெய்வ வழிபாடு
சுக்கிரன், செவ்வாயை குரு பார்ப்பதால் கணவன், மனைவிக்குள் இருக்கும் சண்டைகள் குறையும். வெளிநாட்டில் வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 10 ஆம் இடத்தில் குரு இருப்பதால் பெரியவர்களின் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நன்மை பயக்கும். வெளிநாடு செல்வதில் தடை ஏற்படும் வாய்ப்புள்ளதால் குலதெய்வத்தை வழிபாடு செய்வது நல்லது.
கவனம்
வண்டி, வாகனங்களில் செல்லும்போதும், நெருப்பு விஷயங்களிலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சகோதரர்களுடன் சொத்து தொடர்பான வாக்குவாதங்கள் வரும். நெஞ்சக நோய் வருவதற்கான வாய்ப்புகள் கவனம் தேவை. வெளிநாட்டு வாய்ப்புகள் வந்து சேரும். பூர்வீக சொத்துகள் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கும் யோகம், வெளிநாட்டில் வீடு கட்டும், வாங்கும் யோகம் உண்டாகும்.
வழிபாடு
வழக்கறிஞர்கள், பேச்சாளர்கள், ஆசிரியர்களுக்கு அற்புதமான காலகட்டம் இருக்கும். சிலருக்கு அரசு வேலை கிடைக்கும். தந்தையினால் நன்மை ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும் நேரமாக இருக்கும். வீடு மாற்றங்கள் உண்டாகும். மறைமுக ஸ்தானங்களில் கவனம் தேவை. நல்ல வீடுகள், வாகனங்கள் வாங்கும் யோகம் உள்ளது. வேலூர், ஸ்ரீபுரம் நாராயணியை வழிபாடு செய்வது சகல விதமான நன்மையையும் ஏற்படுத்தும்.
-
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி: கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு முன்னேற்றம், மகிழ்ச்சி, புதிய வாய்ப்புகள்! -
சிக்ஸர் அடிக்கப்போகும் கன்னி ராசி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications