ஜூலையில் மேஷத்துக்கு கிடைக்கும் ராஜயோகம்.. முதல் பாதி சூப்பர், 2ம் பாதியில் காத்திருக்கும் ட்விஸ்ட்
ஜூலை மாத பலன்: 2025 ஆம் ஆண்டிற்கான ஜூலை மாதம் பிறந்துள்ளது. இந்த ஜூலை மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் நன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களில் உள்ள ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த இடப்பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனையும் ஏற்படுத்தும். அந்த வகையில், ஜூலை மாதத்தில் மேஷ ராசிக்கு கிரக நிலைகள் எப்படி இருக்கின்றன, அதன் மூலம் கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேஷ ராசி பலன்
ஜூலை மாதத்தில் மிகுந்த தன்னம்பிக்கை உருவாகும் காலகட்டமாக இருக்கும். முதல் 15 நாட்கள் ஒருவிதமான பலன்களும், இரண்டாம் பகுதியிலான 15 நாட்களில் வேறு விதமான பலன்களும் கிடைக்கப் போகிறது. மிதுனத்தில் குரு அமர்ந்து 11 ஆம் பார்வையாக லாபத்தைப் பார்க்கிறார். ராகுவும் உடன் உள்ளது. உங்களுடைய தொழிலில் அபரிமிதமான வளர்ச்சிகள் ஏற்படும். 5 விஷயங்கள் உங்களுக்கு இந்த மாதத்தில் கட்டாயமாக நடக்கும்.
தன்னம்பிக்கை உயரும்
உங்கள் மீதான தன்னம்பிக்கை, தைரியம் அபரிமிதமாக உயரும் காலகட்டமாக இருக்கும். தடைகள், முட்டுக்கட்டைகள் அனைத்தும் நீங்கி வீறு கொண்டு எழும் நேரமாக இருக்கும். 3 ஆம் இடத்தில் முதல் 15 நாட்கள் சூரியன், குரு ஆகியோர் இணைந்துள்ளதால் அற்புதமான மாற்றங்கள் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். ராஜயோகம் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். ஜூலை 15 ஆம் தேதிக்குப் பிறகு கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாக இருக்கும்.
புகழ்
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேஷ ராசியினர் பலரும் தொழில் முனைவோராக மாறப் போகிறீர்கள். பெயர், புகழ், அந்தஸ்து, கெளரவம் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். முதலீடுகளை செய்து மகிழும் காலகட்டமாக இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்களைச் செய்ய வேண்டும் என்ற எண்ணமும், அதில் வெற்றியையும் காண்பீர்கள்.
முயற்சிகளில் வெற்றி
முயற்சி ஸ்தானத்தில் மூன்று கிரகங்கள் உள்ளன. அருமையான காலகட்டமாக உள்ளதால் இதனைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. இதுவரை இல்லாத அளவிற்கு தகவல் தொடர்பு அதிகரிக்கும். ஆன்லைன் மூலமாக ஆதாயம் கிடைக்கும். ராஜாவைப் போல உணரும் தருணம் ஏற்படும். ராகுவிற்கும் குருவின் பார்வை இருப்பதால் அனைத்துவிதமான பாக்கியங்களும் கிடைக்கும். மாணவர்களின் படிப்பு விஷயங்களில் முன்னேற்றம் காண்பீர்கள்.
கவனம்
மாதத்தின் இரண்டாம் பகுதியான ஜூலை 15 ஆம் தேதிக்குப் பிறகு ஒவ்வொரு விஷயங்களிலும் கவனமாக இருப்பது நல்லது. ராசிநாதன் கேதுவுடன் அமர்ந்துள்ளதால் இழுபறியான நிலைமை ஏற்படும். குடும்ப விஷயத்தில் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. யாரிடமும் நம்பி பணம் கொடுக்காமல் இருப்பது நன்மை பயக்கும்.
கணவன், மனைவி
செவ்வாய் கேதுவுடன் இணைந்திருப்பதால் தேவையில்லாத சண்டை, சச்சரவுகள் கணவன், மனைவிக்கிடையே வருவதற்கான வாய்ப்புள்ளது. எதிர்பார்த்த விஷயங்கள் நடக்காமல் ஏமாற்றம் ஏற்படுவதற்கான சூழல் உண்டாகும். 5 ஆம் இடத்தில் கேது அமர்வதால் நினைத்த காரியங்கள் நடக்காமல் போவதற்கும், இழுபறியாகி நடக்கும் சூழலும் ஏற்படும்.
உறவுகளில் கவனம்
ஜூலை மாதத்தின் முதல் 15 நாட்கள் தொழில் அருமையாக இருக்கும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். சொல்வாக்கு, செல்வாக்கு, பெயர், புகழ் அதிகரிக்கும். ஆனால், இரண்டாம் பகுதியில் உறவுகள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். முதலீடுகளில், ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. வண்டி, வாகனங்களில் இயக்கும்போது கவனம் தேவை. கால் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பெண்களுக்கு வயிறு, பிசிஓடி, கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. உரிய மருத்துவம் பெறுவது நல்லது.
பங்குச் சந்தை வேண்டாம்
பங்குச் சந்தையில் இறங்காமல் இருப்பது நல்லது. ஜாமீன் கொடுத்தால் பாதிப்புகளில் சிக்க நேரிடும். மிகப்பெரிய ராஜயோகம் காத்திருக்கிறது. ராகு குரு இணைவதால் நண்பர்கள் வட்டாரம் அதிகரிக்கும். பெண்களின் தொடர்பு, அதன் மூலமாக முன்னேற்றமும், ஆதாயமும் ஏற்படும். மாணவர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். புகழ், கீர்த்தி கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். பேசுகிற வார்த்தை, பழகும் நண்பர்களிடம் ஜூலை 15 க்குப் பிறகு கவனம் தேவை.
வழிபாடு
துர்க்கை, முருகர், நரசிம்மர் வழிபாடு அற்புதத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் தனது வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் அற்புமான காலகட்டமாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும். மஞ்சள் நிற வண்ணத்தைப் பயன்படுத்துவது நல்ல மாற்றத்தை தரும்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications