ஜூன் ராசி பலன்: மிதுன ராசிக்கு கொட்டிக் கொடுக்கும் சுக்கிரன்.. தொட்டதெல்லாம் துலங்கும் யோகம்
ஜூன் மாத ராசி பலன்கள்: 2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த 3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஜூன் மாதத்தை பொறுத்தவரை 29 ஆம் தேதி மேஷத்தில் உள்ள சுக்கிர பகவான் ரிஷப ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். ஆனி 15 ஆம் தேதி சூரியன் ரிஷபத்தில் இருந்து, மிதுன ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். அங்கு ஏற்கனவே குரு மற்றும் புதன் பகவான்கள் உள்ளனர். புதன் பகவான் 22 ஆம் தேதி கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். கேது பகவான் சிம்ம ராசியிலும், ராகு கும்ப ராசியிலும், சனி பகவான் மீன ராசியிலும் உள்ளனர்.

ஜூன் 7 ஆம் தேதி ஏகாதசி, 8, 23 தேதிகளில் பிரதோஷம் வருகிறது. 25 ஆம் தேதி அமாவாசை உள்ளது. மேலும் பஞ்சாங்கப்படி இந்த மாதத்தில் ஆந்திராவிலே புயல் மழை, நம் எல்லையில் பதற்றம் நிலவுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த மாதம் மிதுன ராசியினருக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் முன் நின்று உதவக்கூடிய, சாதனை படைக்கக் கூடியவர்கள். பஞ்சாயத்து பேசுவது, நல்ல தீர்ப்புகளில் சொல்வதில் வல்லவர்கள். இவர்கள் கூட ஒருவர் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். உங்களுக்கு இந்த ஜூன் மாதத்தில் தலைசிறந்த யோகங்கள் வந்து சேரப் போகின்றன.
கலைத் துறையினர்
மிதுன ராசிக்காரர்கள் பொதுவாக பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்களாக, கலைத் துறையை சேர்ந்தவர்களாக இருப்பீர்கள். உங்களுக்கு இந்த மாதத்தில் 11 ஆம் இடத்தில் சுக்கிரன் வருவதால் கலைத் துறையில் பெரிய பெரிய வெற்றியை அடையப் போகிறீர்கள். நல்ல நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். அந்த வாய்ப்புகளால் புகழின் உச்சத்துக்கு செல்லும் வாய்ப்பு உண்டாகும். மீடியாவின் வெளிச்சம், புகழ் உண்டாகும். ஏற்றம் தரக்கூடிய மாதமாக இருக்கும்.
பொருளாதாரம்
பிறருக்கு கொடுக்கும் பணம் திரும்ப வராது என்பதால் காசு, பணம் கொடுப்பதில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடந்த ஓராண்டாக மிகுந்த பாதிப்புகளைச் சந்தித்திருப்பீர்கள். 12 ஆம் இடத்தில் விரைய குருவாக இருந்ததால் பண விஷயத்தில் மிகுந்த பிரச்சனைகள் வந்திருக்கும். குடும்பத்தை சமாளிக்க முடியாத நிலை இருக்கும். இனிமேல் அந்த நிலைமைகள் எல்லாம் மாறும். ஜூன் மாதம் 15 ஆம் தேதிக்குப் பிறகு வரவுகள் அதிகரிக்கும், புதிய உறவுகள் வரும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். மனைவி, மக்களிடம் இணக்கமான சூழல் உருவாகும்.
குடும்ப வாழ்க்கை
சுக்கிரன் லாபத்தில் இருப்பதால் மனைவியின் பக்கபலம் இருக்கும். அவர்களுடைய உறுதுணையால் பல நன்மைகளைப் பெறுவீர்கள். 11 ஆம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் யோகமான குடும்ப வாழ்க்கையை ஏற்படுத்தப் போகிறார். உங்கள் மகள் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் கண்டிப்பாக திருமண செய்தி வந்து சேரும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.
தொழில்
மிதுன ராசிக்காரர்களுக்கு பத்தாம் இடத்துக்கு அதிபதி குரு பகவான். குரு தற்போது ராசியில் அமர்ந்துள்ளதால் நல்ல தொழில் அமையும். தொழிலில் புகழ்பெறக் கூடிய அமைப்பு உண்டாகும். தொழிலினால் நல்ல பண வரவு உண்டாகும் அமைப்பு கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும். தொழில் செய்பவர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கும். நல்ல செல்வ செழிப்பு, தொழிலில் உயர்வு ஏற்படும்.
வெளிநாடு
வெளிநாடு வேலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். பாஸ்போர்ட், விசா விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வதந்திகளை புறந்தள்ளிச் செல்வது நல்லது. வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு அதில் வெற்றி உண்டாகும் அற்புதமான நேரம். வேலை மாற்றத்துக்கும் அருமையான காலகட்டமாக இருக்கும்.
மாணவர்கள்
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வளர்ச்சி உண்டாகும். இதுவரை இருந்து வந்த தேக்கநிலை மாறும். பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் நன்றாக படிக்கும் காலகட்டமாக இருக்கும். கல்லூரி செல்லும் மாணவர்கள் உயர்கல்வியில் நினைத்த கல்லூரிகளில், நினைத்த துறையில் படிக்கும் யோகம் உண்டாகும். கணினி, வணிகவியல் படிப்பவர்களுக்கு வெற்றிகள் உண்டாகும்.
பரிகாரம்
மேல்மலையனூரில் அமர்ந்திருக்கும் அங்காள பரமேஸ்வரியை வழிபட்டு வருவது அற்புதமான பலன்களைத் தரும். அமாவாசைக்கு சென்று வழிபடுவது கூடுதல் நற்பலன்களை அள்ளித் தரும். பதவி உயர்வு, திருமணம், சந்தோஷம் உண்டாகும் காலகட்டமாக இருக்கும்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications