கடக ராசிக்கு Sure Shot வெற்றி.. நவம்பர் மாதத்தில் வரிசை கட்டும் யோகங்கள்

Subscribe to Oneindia Tamil

நவம்பர் மாத ராசி பலன்: 2025 ஆம் வருடம் இப்போதுதான் பிறந்தது போல உள்ளது. அதற்குள் 11வது மாதமான நவம்பர் மாதம் பிறக்க போகிறது. இந்த வருடத்தில் ஏற்கனவே கிரக நிலைகளில் ஏராளமான மாற்றங்களை சந்தித்துவிட்டோம். நவம்பர் மாதத்திலும் கிரக நிலைகளில் மாற்றங்கள் காணப்படும். இது சில ராசிகளுக்கு நற்பலன்களை கொடுக்கும். சில ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலையும் வரலாம். நவம்பர் மாதம் கடக ராசிக்கு எப்படிப்பட்ட பலன்களை கொடுக்கும் என்று பார்க்கலாம்.

குரு பகவான் கடக ராசியில் உச்ச பலத்தில் இருக்கிறார். அவர் நவம்பர் 11 ஆம் தேதி வக்ர கதி அடைகிறார். பொதுவாக சில ராசிகள் குரு பகவான் உச்சமடைந்தாலே நல்ல பலன்களை பெறுவார்கள். சில ராசிகள் குரு பகவான் உச்சத்தில் இருந்து வக்ரமானால் நல்ல பலன்களை பெறுவார்கள். மேலும் இந்த நவம்பர் 28 ஆம் தேதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

kadagam-november-month-rasi-palan-what-kind-of-benefits-kadagam-rasi-people-will-get-during-this-mo

நவம்பர் மாத பலன்கள்

சூரியன், சுக்கிரன் இணைந்து மூல திரிகோண வீட்டில் இருக்கிறார்கள். இதில் சூரியன் நீசமடைந்தாலும் நீட்ச பங்க ராஜயோகம் கிடைக்கப் போகிறது. மேலும் சுக்ரன், புதன் இணைந்து லட்சுமி நாராயண யோகம் தரப்போகிறார்கள். சூரிய பகவான் 16 ஆம் தேதிக்கு பிறகு செவ்வாயின் வீடான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதே வீட்டில் 26 ஆம் தேதிக்கு பிறகு சுக்கிரன் பெயர்ச்சி ஆகிறார். ஏற்கனவே அங்கு செவ்வாய் ஆட்சி பலத்துடன் இருக்கிறார். தவிர குருவின் பார்வையும் உள்ளது.

சூரியனும், செவ்வாயும் இணைவது மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கும். இதனால் அரசு, அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் மிகப்பெரிய ஏற்றம் காண்பார்கள். இந்த மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல யோகம் கிடைக்கும். இந்த கிரக நிலை மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் கடகம் ராசிக்கு கிடைக்கும் பலன்களை காணலாம்.

கடகம்

கடகம் ராசி மற்றும் மிதுனம் லக்னத்தினருக்கு ராசிக்குள்ளேயே குரு பகவான் இருப்பது மிகுந்த யோகத்தை கொடுக்கும். சாட்சாத் அந்த கடவுளே உங்களுடன் இருந்து வழிநடத்தும் அமைப்பு இது. முதலில் மனதில் நல்ல தெளிவை தரும். இறங்கிய அனைத்து காரியங்களிலும் சிறப்பான வெற்றியை பெறுவீர்கள். தானங்கள், சேவைகள் அதிகளவு செய்வீர்கள். இதுவரை இருந்த தடைகள் மொத்தமாக விலகும்.

ராஜயோகம்

நீங்கள் திட்டமிட்டபடி உயர்கல்வியில் சேர்வதற்கான வாய்ப்பு உருவாகும். உத்யோகம், தொழிலில் ஏற்றம் உண்டு. உத்யோகத்தில் இருந்த சிக்கல்கள் விலகும். வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடு வேலைகளில் முயற்சி செய்வோருக்கு வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்த சிக்கல்களும் விலகும். பண வரவுக்கு குறைவு இருக்காது. கையிருப்பு அதிகரிக்கும். நீட்ச பங்க ராஜ யோகத்தால் பெயர், புகழ் அதிகரிக்கும்.

மரியாதை

உங்கள் பேச்சுக்கு தனி மரியாதை கிடைக்கும். உங்கள் குழந்தைகள் கல்வி, வேலை வாய்ப்பு தொடர்பான அற்புதமான பலன்கள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குல தெய்வத்தின் பரிபூரண அருள் இருப்பதால் நல்ல அதிர்ஷ்டம் உண்டு. சொந்த வீடு கனவு நனவாகும். வீடு, நிலம், வண்டி, வாகனம், ஆபரணம் என்று அசையும், அசையா பொருட்களின் சொத்து சேர்க்கை இருக்கும். திருமண தடை நிவர்த்தியாகும்.

பரிகாரம்

தடைபட்ட காரியங்கள் விலகி, நீங்கள் மனதில் நினைத்த அனைத்து காரியங்களும் வெற்றி பெறும். வாழ்க்கை துணையுடன் அந்யோநியம், புரிதல் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சனைகள் விலகி லாபம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். முக்கிய முடிவு எடுக்கும் முன்பு மட்டும் சற்று ஆலோசனை நடத்திவிட்டு எடுங்கள். உங்கள் வீடு அருகே உள்ள சிவன் கோயில் சென்று வழிபடுவது நற்பலன்களை தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+