Rasi Palan This Week: கடக ராசிக்கு தொட்டதெல்லாம் துலங்கும்.. இந்த வாரத்தில் கிடைக்கும் பலன்கள்
Kadagam Rasi Palan: ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை, சித்திரை 14 ஆம் தேதி முதல் சித்திரை 20 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடகம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சித்திரை மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்பது சூரியன் மேஷத்திற்கு வரக்கூடிய மாதமாகும். அந்த வகையில், ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை, சித்திரை 14 ஆம் தேதி முதல் சித்திரை 20 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கடகம் ராசி பலன் (Kadagam Rasi Palan)
கடக ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு எல்லா விஷயங்களிலும் நன்மைகள் ஏற்படும் நல்ல காலகட்டம். மன அழுத்தம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நன்மைகள் கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் கிடைக்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். நிறைய இடங்களில் நன்மைகள் கிடைக்கும்.
புதிய பொறுப்புகள்
புதிதாக சேர்ந்திருக்கும் வேலையில் நல்ல பெயர், புகழ் கிடைக்கும் யோகம் உண்டு. கெளரவம் ஏற்படும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். புதிய பொறுப்புகளுக்கு வரும் வாய்ப்பு ஏற்படும். சமூகத்தில் உள்ள பெரிய மனிதர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். பெயர், புகழ் கிடைக்கும். சூரியன் 10 இல் இருப்பது 11 க்கு செல்வது என வைகாசி மாதத்திற்குள் நிறைய முன்னேற்றங்கள் ஏற்படும்.
தொழிலில் முன்னேற்றம்
தொழில் ரீதியாக பெரிய முன்னேற்றம், நிம்மதி ஏற்படும். வண்டி, வாகனங்களில் அனுகூலம் காணப்படும். நிம்மதியாக தூங்குவீர்கள். நல்ல ஓய்வு கிடைக்கும். மலை வாழ் ஸ்தலங்களுக்குச் சென்று வரும் யோகம் உண்டாகும். கோயிலுக்குச் செல்வது, உறவினர்கள், நண்பர்கள் வீட்டுக்குச் செல்வது, கடல் கடந்து செல்வது, ஓய்வு கிடைப்பது, மகிழ்ச்சியாக இருப்பது என வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும்.
வழிபாடு
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். மகிழ்ச்சி நிறைந்த காலகட்டமாக இருக்கும். கடக ராசி பெண்களுக்கு ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் காணப்பட்டிருந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். சிவனை வழிபாடு செய்வது, வில்வம் கொடுத்து மனதார வழிபாடு செய்வது, விநாயகர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். கோளார் பதிகத்தை சொல்லி வருவது மேன்மையை ஏற்படுத்தும்.
-
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தொழில் மூலம் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது -
Mithunam Rasi Palan: கொடிகட்டி பறக்கப்போகும் மிதுன ராசி.. தொட்டது துலங்கும் யோகம் -
Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு இந்த வாரம் காத்திருக்கும் மாற்றம்.. எந்ததெந்த விஷயங்களில் கவனம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications