Rasi Palan This Week: கடக ராசிக்கான இந்த வார பலன்கள்.. அதிர்ஷ்டமா, துரதிர்ஷ்டமா?

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: அக்டோபர் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 20 முதல் 26 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

kadagam-rasi-palan-what-kind-of-benefits-that-kadagam-cancer-signs-will-get-from-october-6-to-12

சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நவராத்திரி ஆரம்பித்து நிறைவடைந்துள்ளது. அக்டோபர் 6 முதல் 12 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் ஏதாவதொரு மனக் கஷ்டம், மனக்குமுறல், சங்கடம் போன்றவை இருக்கும். அவை எல்லாமே படிப்படியாகத் தீரும். பெரிய இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து சந்தோஷம் உண்டாகும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து ஆசிர்வாதம் கிடைக்கும். குருமார்களின் அனுகூலம் கிடைக்கும். தாயார் சொல்வதை கேட்கக் கூடிய கடக ராசியினருக்கு பெரிய வெற்றிகள் உண்டாகும்.

ஆரோக்கியம்

முதுகு வலி, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சாதாரணமாக இருந்தால் கூட மருத்துவ ஆலோசனைப் பெற்றுக் கொள்வது நல்லது. குரு அதிசாரத்தில் இருப்பதால் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். எதிரிகள் பலமாக இருப்பார்கள் என்பதால் சத்ரு சம்ஹாரத்தின் அதிபதியாக இருக்கக்கூடிய திருச்செந்தூர் முருகனை மனதார பிரார்த்தனை செய்வது நல்லது. இதன் மூலம் எதிரிகள் பிரச்சனையில் இருந்து வெளிவரும் அனுகூலம் ஏற்படும்.

கடன்கள் தீரும்

தாய் வழி உறவு, தந்தை வழி உறவுகள் மேன்மை அடையும். மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். அதற்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும். எதிரிகள் எல்லா பக்கத்தில் இருந்தும் உங்களை கார்னர் செய்தாலும் வெற்றியைப் பெறக்கூடிய யோகம் உண்டாகும். பெரிய அளவிலான முன்னேற்றங்கள் ஏற்படும். அரசு அதிகாரங்கள், கெளரவங்கள் உண்டாகும்.

சிக்கல் தீரும்

அரசுத் துறை, அரசியல்வாதிகளுக்கு இருந்த சிக்கல்கள் படிப்படியாகத் தீரும். புதிய பொறுப்புகள் வரக்கூடிய அற்புதமான காலகட்டம். இழுபறியாக இருந்த விஷயங்கள் எல்லாம் இனி அடுத்தடுத்து நடக்கும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். சந்திரன் ஆட்சி பெற்று இருப்பதால் மனம் அலைபாயாமல் இருக்க வேண்டும். கோளார் பதிகத்தை தொடர்ந்து படிப்பது சிறந்த பரிகாரமாக அமையும்.

வழிபாடு

தினந்தோறும் கோளார் பதிகத்தை கேட்க கேட்க எத்தனை பாதிப்புகள் இருந்தாலும் அவை பனி போல விலகும். சனிக்கிழமையில் பெருமாள் வழிபாடு விஷேசத்தை தரும். அற்புதமான காலகட்டமாக உங்களுக்கு அமையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+