Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடகம் ராசி பலன்: குருவின் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. தொழிலில் ஏற்றம்

Subscribe to Oneindia Tamil

Kadagam Rasi Palan: பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

kadagam-rasi-palan-what-kind-of-benefits-will-get-kadagam-rasi-people-from-feb-16-to-22

மாசி மாதம் பிறந்துள்ளது. பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

கடகம் ராசி பலன் (Kadagam Rasi Palan)

கடகம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு எல்லா சிரமங்களும் நிவர்த்தியாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் மிகப்பெரிய வெற்றி ஏற்படும். தான தர்மங்களுக்கு உகந்த காலமாக இருக்கும். அஷ்டமத்தில் இத்தனை கிரகங்கள் சேருவது உங்களுக்கு நல்லதல்ல. மூத்தவர்களின் இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வேலையில் பிரச்சனைகள், குடைச்சல் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

பரிகாரம்

கடக ராசியினர் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பது நல்லது. எல்லா விஷயத்திற்கும் பயப்படத் தேவையில்லை. அஷ்டமத்தில் இருக்கும் கிரகங்கள் மன அழுத்தத்தை மட்டுமே ஏற்படுத்தும். பிரம்ம முகூர்த்தத்தில் குளித்து தீபம் போடுவது நன்மையைத் தரும். மாசி மாதம் எப்போது வந்தாலும் மன வருத்தமோ, கஷ்டங்களோ, அவப்பெயரோ ஏற்படும் என்பதால் அனுமன் சாலிஷா கேட்பது நல்லது. ராகு கேதுவுக்கு இந்த வாரத்தில் தீபமேற்றுவது நன்மையைத் தரும்.

குரு பார்வை

வாகனங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் கவனமாக இருப்பது நல்லது. குரு பார்வை இருப்பதால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. திடீர் பெயர், புகழ் ஏற்படுவதற்கான அமைப்பு உள்ளது. தொழிலில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் எல்லாம் நடக்கும். தொழிலில் இருந்த சிக்கல் பரிபூரணமாக நீங்கும்.

வேலையில் கவனம்

உத்தியோகத்தில் அற்புதமான ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். இழுபறியாக இருந்த நிலைமைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். சட்டத்திற்குப் புறம்பானவர்களுடன் பழகுவதைத் தவிர்ப்பது நல்லது. யாரிடமும் தர்க்கம் செய்வது, வாக்குவாதம் செய்வது, உத்தியோகத்தில் இருப்பவர்கள் உணர்ச்சிவசப்பட்டு பேப்பர் போடுவது போன்றவற்றைத் தவிர்ப்பது நன்மைய.

தொழிலில் முன்னேற்றம்

தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்றம். முக்கியமான மாற்றங்கள் அனைத்தும் நடக்கும் காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். முக்கியமான விஷயங்கள் வாரத்தின் இறுதிப் பகுதியில் நடக்கும். ஆலய வழிபாடுகள், தட்சிணாமூர்த்தி வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷம் 80 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 90 சதவீதமும் உண்டாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+