Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தடைகளை தகர்த்தெறியும் காலகட்டம்.. குருவின் அருளால் வரும் அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

செப்டம்பர் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. அந்த வகையில், செப்டம்பர் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான இந்த காலகட்டத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

நவக்கிரகங்களில் உள்ள ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது ஒரு சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், ஒரு சில ராசியினருக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய் மற்றும் சூரியன் ஆகிய 4 கிரகங்களும் தங்கள் நிலையை அடுத்தடுத்து மாற்றுகின்றன.

kadagam-september-month-rasi-palan-kadagam-rasi-people-will-get-good-benefits-during-this-month

செப்டம்பர் 13 ஆம் தேதி துலாம் ராசியில் செவ்வாய் பெயர்ச்சியாகிறார். செப்டம்பர் 14-ஆம் தேதி சிம்ம ராசியில் சுக்கிரனுன் பெயர்ச்சியாகி புதனுடன் இணைகிறார். இந்த இரண்டு கிரகங்களும் லட்சுமி நாராயண யோகத்தை உண்டாக்குகின்றன. செப்டம்பர் 15 ஆம் தேதி கன்னி ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். பல்வேறு முக்கிய கிரக மாற்றங்களும் நிகழ்கின்றனர். செப்டம்பர் மாதம் நிகழும் இந்த கிரக மாற்றங்களால் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். மன அழுத்தங்களை உண்டாக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. அசிடிட்டி பிரச்சனைகளில் கவனம் தேவை. சாப்பிடும் விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. காது, மூக்கு, தொண்டை, சளி தொந்தரவு, அலர்ஜி போன்றவற்றால் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அனுகூலம்

தாய் வழி, தந்தை வழி உறவு அனுகூலத்தை தரும். பழைய கடன்கள் செட்டிலாகும் அற்புதமான காலகட்டம். மன அழுத்தம் தீர்வதற்கான முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட நாட்களாக தேக ஆரோக்கியத்தில் பிரச்சனை கொடுத்துக் கொண்டிருந்த விஷயங்கள் தீர்வது கண்கூடாகப் பார்பீர்கள். தொழில், உத்தியோகம் வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் அனுகூலம், ஏற்றத்தை ஏற்படுத்தும்.

கடன் கிடைக்கும்

எதிர்பார்த்த விஷயங்கள் எல்லாம் நடக்கும் காலகட்டம். இதுவரை தடைபட்டுக் கொண்டு இழுபறியாக இருந்த விஷயங்கள் எல்லாம் இனி படிப்படியாக மாறி நம்பிக்கையையும், யோகத்தையும் ஏற்படுத்தும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள், வங்கிகள் கடன் எல்லாம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இனி கிடைக்க ஆரம்பிக்கும்.

சங்கடங்கள் தீரும்

நிலம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்த சங்கடங்களில் நிவர்த்தி ஏற்படும். குருவின் பார்வை இருப்பதால் வியாபாரம், வேலை, தொழிலில் சிறு சிறு பிரச்சனைகள் வந்தாலும் அவை அனைத்தும் நிவர்த்தியாகும் நல்ல அமைப்புகள் ஏற்படும். வேலையில் இருந்து வேறு வேலைக்கு மாறுவது, புதிய தொழில் தொடங்குவது போன்றவற்றிற்கு அற்புதமான நேரமாக இருக்கும்.

முன்னேற்றம்

வாழ்க்கையில் எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியம் பிறக்கும். செவ்வாய் குருவின் பார்வையில் வருவதால் தொழில் ரீதியிலான முடிவுகள் அனைத்தும் நன்றாக இருக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் அனைத்தும் நீங்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். மாற்றமும், ஏற்றமும் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+