செவ்வாய் பெயர்ச்சி பலன்: கடக ராசியின் ஆட்டம் ஆரம்பம்.. தொட்டதெல்லாம் தங்கமாக மாறப் போகுது.. என்ஜாய்
செவ்வாய் பெயர்ச்சி பலன்: ஜூலை 28 முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் செவ்வாய்ப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த செவ்வாய் பெயர்ச்சியின்போது கடக ராசிக்காரர்களுக்கு ஏற்படப் போகும் மாற்றங்கள், பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
செவ்வாய் பகவான் சகோதரக்காரகன். நிலம், பூமிக்கு அதிபதியானவர். ரத்தத்துக்கும், ஆக்ரோஷத்துக்கும், கோபத்துக்கும் காரணமானவர். கட்டிடம், நெருப்பு, சிவப்பு நிறம், உடற்பயிற்சி, விளையாட்டுத் துறைக்கு தொடர்பானது செவ்வாய் கிரகம். இந்த செவ்வாய் பகவான் ஜூலை 28 ஆம் தேதி சிம்மத்தில் இருந்து கன்னி மனைக்கு பெயர்ச்சி ஆகப்போகிறார். செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி வரையிலான 48 நாட்கள் கன்னியில் இருந்து செவ்வாய் பகவான் பலனைக் கொடுக்கப் போகிறார்.

இந்த காலகட்டத்தில் உத்திர நட்சத்திரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை சூரிய பகவானின் நடசத்திரத்தில் பயணம் செய்கிறார். ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை அஸ்தம் எனும் சந்திரனின் நட்சத்திரத்திலும், செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தனது சொந்த நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில் பயணம் செய்யப் போகிறார்.
இந்த செவ்வாய்ப் பெயர்ச்சி காலகட்டத்தின்போது கடக ராசிக்காரர்களுக்கு என்ன விதமான பலன்கள், மாற்றங்கள் நமக்கு கிடைக்கும். எந்த தெய்வ வழிபாடு உகந்தது என்பது குறித்து பார்க்கலாம்.
கடகம் ராசி பலன்
கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவான் 5 க்கு உரியவர். பூர்வ புண்ணிய ஸ்தானம், பஞ்சம ஸ்தானம், காதல், குழந்தை ஸ்தானத்தின் அதிபதியாக உள்ளார். தொழில் ஸ்தானத்தின் அதிபதியாகவும் உள்ளார். உங்கள் ராசியின் 3 ஆம் இடத்துக்கு செவ்வாய் பகவான் வந்து அமர்ந்து பலனை தரப் போகிறார். கடந்த சில மாதங்களாக செவ்வாய் நீச்ச தன்மையிலும், கேதுவுடன் சேர்ந்திருந்ததால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்திருப்பீர்கள்.
தடைகள் நீங்கும்
செவ்வாய் உங்களுக்கு யோகத்தை கொடுக்கக்கூடிய கிரகம். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம், அதிர்ஷ்டம் கிடைக்கும். தொழில் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். தொழிலில் இருந்து வந்த பளு, மனஅழுத்தம் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். நீங்கள் எடுத்த காரியங்களில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். வீரம், விவேகம், சுறுசுறுப்பு உண்டாகும்.
முயற்சிகளில் வெற்றி
3ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். தொட்டது துலங்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் ஜெயமாகும். மனது சுறுசுறுப்பாக மாறி தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில் ரீதியாக பயணங்களை மேற்கொள்வீர்கள். அந்த பயணங்களின் மூலமாக அனுகூலம், ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய உத்திகளைப் புகுத்தி அதில் ஜெயிப்பீர்கள்.
தொழிலில் வெற்றி
தொழில், வியாபாரத்தில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். செவ்வாய் உங்களுக்கு கெடாமல் இருந்தால் அற்புதமான மாற்றங்கள் கி
டைக்கும். உங்களுக்கு ராஜயோகத்தை தரக்கூடியது செவ்வாய் பகவான். புதிய ஒப்பந்தங்கள் உங்களைத் தேடி வரும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். தொழில் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த குழப்பங்கள், தடைகளைத் தகர்த்தெறிவீர்கள். நல்ல தொழிலாளர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலமாக கூடுதல் வருமானம் கிடைக்கும்.
வேலை
வேலை நன்றாக அமையும் வாய்ப்புள்ளது. மேலதிகாரிகள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். எடுத்த வேலையை திறம்படச் செய்து அதில் வெற்றி காண்பீர்கள். உழைப்பிற்கான அங்கீகாரம், கூடுதல் பொறுப்பு, பதவி உயர்வுகள் கிடைக்கும். கடந்த இரண்டரை வருடங்களாக குடும்பம், ஆரோக்கியம், தொழில், கடன் என பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வந்த கடக ராசியினருக்கு இனி விடிவுகாலம் பிறக்கும். இந்த செவ்வாய் பெயர்ச்சியில் எழுச்சி பெறுவீர்கள்.
குழந்தைகள்
குழந்தையின் நலனில் அக்கறை காண்பீர்கள். குழந்தையைப் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு நல்ல படிப்பு, வேலை கிடைக்கும். அரசு தொடர்பான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அரியர் வைத்துள்ள மாணவிகள் இந்த காலத்தில் தேர்ச்சி பெறுவீர்கள். செவ்வாய் சூரியனின் நட்சத்திர சாரத்தில் பயணிக்கும்போது குடும்பம், தனத்தைப் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும்.
சிந்தனைகள் ஓங்கும்
தந்தை, தொழில், பாக்கியங்கள், அரசு, அரசு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அஸ்தம் நட்சத்திரத்தல் ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை உங்கள் ராசிநாதனின் நட்சத்திரத்தில் பயணிக்கும்போது நீங்கள் நினைத்ததை சாதிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். மனம், எண்ணம், செயல் எல்லாமே தொழில், பிள்ளைகள், மதிப்பு, மரியாதை குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும்.
தொட்டது துலங்கும்
செப்டம்பர் 3 முதல் 13 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் செவ்வாய் சித்திரை நட்சத்திரத்தில் பயணிக்கும்போது திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்டங்கள், கெளரவங்கள், பதவிகள் தேடி வரும். அதிரடி மாற்றங்கள், ஏற்றங்கள் நிகழக்கூடிய காலகட்டமாக இருக்கும். தொட்ட காரியங்கள் அனைத்திலும் ஜெயம் ஏற்படும்.












Click it and Unblock the Notifications