Rasi Palan This Week: கடக ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசப் போகுது.. இனி உங்களுக்கு ஜெயம் மட்டும்தான்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: செப்டம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான ஆவணி 16 முதல் ஆவணி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

Weekly rasi palan Kadagam Lucky zodiac signs

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும்.

அந்த வகையில், செப்டம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். தேவையில்லாத வார்த்தைகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. பண வரவு நன்றாக இருக்கும். அனுகூலம் கிடைக்கும். பழைய கடன்களை தீர்த்து முடிப்பீர்கள். கடனை அடைப்பதற்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். இதுவரை இருந்து வந்த தேவையில்லாத பயம், மரண பயண் போன்றவை நீங்கும்.

ஆரோக்கியம்

மன அழுத்தம் தீரும். ஆரோக்கியத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனையை மருத்துவமனைக்குச் சென்று அதனை சரிசெய்யும் அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் பெரிய அளவில் மகிழ்ச்சி ஏற்படும். மருந்து, மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொள்ளும் கடக ராசிக்காரர்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாது. ரத்த பந்த உறவுகளிடம் வாக்குவாதம் எதுவும் செய்து கொள்ளாமல் மிக மிக கவனமாக இருப்பது நல்லது.

சாப்பாடு தானம்

கடக ராசியினருக்கு மே மாதம் வரை புதன்கிழமைகளில் மதிய வேளைகளில் ஏழைகளுக்கு சாதம் மற்றம் எலுமிச்சை ஊறுகாய் தானமாகக் கொடுப்பது அதீதமான மேன்மையைக் கொடுக்கும். இல்லையெனில் பொருள் விரையம், பண விரையம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தொழில் அமைப்பில் அனுகூலம் ஏற்படும். ஜெயமும், ஏற்றமும் காணப்படும்.

தடைகள் நீங்கும்

சுப காரியத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். வேற்று மொழி மனிதர்களால் அதிகமான ஆதாயம் ஏற்படும். அடுத்தடுத்து நினைத்த காரியங்களி் ஜெயம், நம்பிக்கை ஏற்படும். மிகப்பெரிய அனுகூலம் மகிழ்ச்சி சந்தோஷம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த பாதிப்புகள் பரிபூரணமாக நீங்கும். உத்தியோகத்தில் நிச்சயம் ஏற்றம் உண்டாகும்.

அனுகூலம்

பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். குடும்பத்திற்கான நேரத்தை ஒதுக்கி மனம் விட்டுப் பேசுவது நல்லது. எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்து தடைகள் அனைத்தும் நீங்கும்.

வழிபாடு

காது, மூக்கு, தொண்டை, சளி தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சிவாலய வழிபாடு, நந்தீஸ்வரர் வழிபாடு செய்வது சகல விதமான வெற்றிகளையும் ஏற்படுத்தும். நந்தீஸ்வரருக்கும், சிவனுக்கும் சங்கல்பம் செய்வது நல்ல பலன்களைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+