Rasi Palan This Week: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. திடீர் அதிர்ஷ்டம் கன்ஃபார்ம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 13 முதல் 19 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

kadagam-weekly-rasi-palan-what-kind-of-benefits-that-cancer-kadagam-signs-will-get-from-september

சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நவராத்திரி ஆரம்பித்துள்ளது. அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமி வரை நவராத்திரி விசேஷம் நடைபெறும். செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு உறவுகள் மேம்படும் காலகட்டம். ரத்த பந்த உறவுகளிசம் வாக்கு வாதம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். முதுகுத் தண்டுவடத்தில் இருந்த பாதிப்புகள் படிப்படியாக நீங்கும். பதவி உயர்வில் இருந்த தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டாகும்.

திடீர் அதிர்ஷ்டம்

திடீர் அதிர்ஷ்டங்களால் முன்னேறும் காலகட்டமாக இருக்கும். தொழில் முறையாக இருந்த பாதிப்புகள் பரிபூரணமாக நீங்கும். மன அழுத்தங்கள் தீரும் அமைப்பு ஏற்படும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு, நிலம், வீடு, விவசாயம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் ஏற்றம் பெறும். எதிர்பாத்த பண வரவுகள் ஏற்படும். பழைய கடன்கள் தீரும் அமைப்பு உண்டாகும்.

கடன்கள் கிடைக்கும்

புதிய கடன்கள் கிடைக்கும் யோகம் உண்டாகும். கண்டிப்பாக முதுகுத் தண்டுவடம், கழுத்து, தோள் பட்டை வலி அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். மனதில் இருந்த பாரங்கள் நீங்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கட்டாயம் கிடைக்கும். அரசுத் துறை, அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரிய கெளரவம், செல்வாக்கு உயரும் காலகட்டம்.

சிக்கல்கள் தீரும்

இழுபறியாக இருந்த எல்லா விஷயங்களும் இனி அடுத்தடுத்து நடக்கும். சிக்கல்கள் அனைத்தும் தீரும். பழைய கடன்கள், அடகுவைத்த நகைகளை எல்லாம் மீட்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கும். நீண்ட நாட்களாக இருந்த தடைகள் தவிடு பொடியாகும். யோக பலன்கள் அதிக அளவில் கிடைக்கும்.

வழிபாடு

நிலம், வீடு, பூர்வீக சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். பிள்ளைகள் விஷயத்தில் தடைகள் எல்லாம் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலமும், சந்தோஷமும் ஏற்படும். வியாழக்கிழமை தோறும் பெருமாள் தாயார் வழிபாடு செய்வது நன்மை பயக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+