Rasi Palan This Week: கன்னி ராசிக்கு வீசும் அதிர்ஷ்ட காற்று.. ராஜா மாதிரி வாழும் யோகம்
வார ராசி பலன்: டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம். தற்போது கார்த்திகை மாதம் முடிந்து இந்த மாதம் மார்கழி பிறக்கப் போகிறது. மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும்.
மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். புதன் சுக்கிரன் 3 ஆம் இடத்தில் இருப்பது வெற்றியைக் கொடுக்கும். வண்டி, வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ் கேட்ஜட்டுகள் வாங்குவது, இன்பச் சுற்றுலா செல்வது, பயணங்கள் மேற்கொள்வது என மகிழ்ச்சியாக இருப்பீர்கள். காதல் அமைப்பு சூப்பராக இருக்கும். மிகுந்த ஏற்றத்தையும், மன மகிழ்ச்சியையும் பெறுவீர்கள்.
அதிர்ஷ்டம்
தெய்வ அனுக்கிரகம், நண்பர்களால் அதிர்ஷ்டம், பெண்களால் அதிர்ஷ்டம், காதலினால், சகோதரனால் என எல்லா விஷயங்களிலும் அதிர்ஷ்டம் பெறுவீர்கள். அம்மாவுடைய ஆரோக்கியத்தை மிகுந்த கவனத்துடன் பார்த்துக் கொள்வது நல்லது. அரசு வேலையில் இருப்பவர்கள், ஆசிரியராக இருப்பவர்கள், வங்கியில் வேலை செய்பவர்கள் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.
கவனம்
மருத்துவராக இருப்பவர்கள், கார்டியாலஜிஸ்டுகள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நிறைய பேருக்கு பெரிய வெற்றிகள், மேன்மைகள் உண்டாகும். நிறைய புத்தகங்கள் படிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். விட்டுக் கொடுக்கக் கூடிய மனப்பான்மை, மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களுக்கு அதிர்ஷ்டம் கூடும் வாய்ப்பு கிடைக்கும் வாரமாக இருக்கும். கலையுலகில் இருப்பவர்களுக்கு அற்புதமாக இருக்கும்.
யோக பலன்
உறவுகள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். துணை விஷயத்தில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. யோக பலத்தை அதிகளவில் பெறும் பாக்கியம் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும் நல்ல காலகட்டமாக இருக்கும்.
வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். எல்லா விஷயத்திலும் ஏற்றம் உண்டாகும் காலகட்டமாக இருக்கும். குலதெய்வ வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
சிக்ஸர் அடிக்கப்போகும் கன்னி ராசி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications