Rasi Palan This Week: கன்னி ராசிக்கு நல்ல நேரம் ஆரம்பம்.. உங்க வாழ்க்கையே மாறப் போகுது
வார ராசி பலன்: நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு பிள்ளைகள் விஷயத்தில் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். திருமணத் தடைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். துணைக்கு நீண்ட நாட்களாக இருந்த கஷ்டங்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். காது, மூக்கு, தொண்டை, சைனஸ், ஒற்றை தலைவலி, பற்கள், தொண்டைப் பகுதியில் ஏற்படும் பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியம்
ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. குரல்வளையத்தில் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் நல்ல அனுகூலத்தை காண்பீர்கள். அசையும், அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். பண வரவு ஏற்படும். புதிய வீட்டிற்குச் செல்லும் யோகம் உண்டாகும். இருக்கும் வீட்டை மாற்றுவீர்கள். இன்டீரியர் டெக்கரேட் செய்வீர்கள். பெரிய அளவில் அனுகூலம் ஏற்படும்.
அனுகூலம்
பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த மனக் கஷ்டங்கள், ஆரோக்கிய குறைபாடுகள் அனைத்தும் நீங்கும். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் அனைத்தும் நீங்கும். தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் அனுகூலம் ஏற்படும். நரசிம்மரை வழிபாடு செய்வது, நரசிம்மர் காயத்ரியை ஜெபிப்பது அற்புதமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
பண வரவு
நல்ல லாபம் ஏற்படும். வீடு, நிலம் விற்பனை செய்வதற்காக காத்திருப்பவர்களுக்கு விற்பனை செய்யும் யோகம் உண்டாகும். பண வரவு ஏற்படும். தொலைதூரத்தில் குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்து வந்த கன்னி ராசிக்காரர்கள் குடும்பத்துடன் ஒன்று சேரும் பாக்கியம் உண்டாகும். பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும்.
மகிழ்ச்சி
எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தொட்ட காரியங்கள் துலங்கும் யோகம் ஏற்படும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். நகை, ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். தடைகளை தவிடுபொடியாக்கும் நல்ல காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications