Rasi Palan This Week: கன்னி ராசிக்கு பிரகாசமான மாற்றம் காத்திருக்கு.. வரப்போகும் சூப்பர் குட்நியூஸ்
வார ராசி பலன்: நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம் என அனைத்திலும் நல்ல அபிவிருத்திகள் ஏற்படும். சுப விரயங்கள் கைகொடுக்கும் காலகட்டமாக இருக்கும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் நல்ல காலகட்டமாக இருக்கும்.
தொழிலில் யோகம்
தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்களும், லாபமும் ஏற்படுத்திக் கொடுக்கும். பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் மாற்றங்களை எதிர்பார்க்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் கண்டிப்பாக பலன்கள் கிடைக்கும். கார்த்திகை மாதத்தில் வேலை தேடுவது, அப்ளிகேஷன் போடுவது, வேலை நாட்டில் வேலை தேடுவது என எல்லாமே அடுத்தடுத்து நடக்கும்.
அடுத்தடுத்து குட் நியூஸ்
சுபச் செய்திகள் அடுத்தடுத்து வரும். பிரிந்த தம்பதி ஒன்று சேரக்கூடிய அமைப்பு ஏற்படும். குழந்தைகளை விட்டு, துணைவியை விட்டு பிரிந்து தொழில், வியாபாரம் காணத்திற்காகச் சென்றவர்கள் மீண்டும் குடும்பத்தினருடன் ஒன்று சேரக்கூடிய யோகம் ஏற்படும். காது, மூக்கு, தொண்டை, பற்கள், அலர்ஜி, சைனஸ், ஒற்றை தலைவலி தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
புதிய வேலைவாய்ப்பு
ஞாயிற்றுக்கிழமைகளில் சாப்பாடு, எலுமிச்சை ஊறுகாய் தானமாகக் கொடுப்பது அனுகூலத்தை ஏற்படுத்தும். பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். புதிய வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு கட்டாயமாக நல்ல வேலைகள் கிடைக்கும். படிப்பில் இருந்த தடைகள் நீங்கி நல்ல மதிப்பெண்கள் கூடும் சாத்தியக்கூறுகள் உண்டு.
வெற்றி வாய்ப்பு
தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடக் கூடிய அமைப்பு உள்ளது. குடும்பத்தில் துணையின் ஆரோக்கியத்தில் சிறிது கவனமாக இருப்பது நல்லது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபங்கள் காணப்படும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டு. நீண்ட நாட்களாக காத்திருந்த விஷயங்கள் இனி அடுத்தடுத்து நடக்கும்.
வழிபாடு
நரசிம்மரை கும்பிடுவது, பெருமாள் அவதாரங்களை வழிபாடு செய்வது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். கோவிந்த நாமங்களை சொல்லி வருவது திவ்ய தேசம் சென்று வந்ததற்கான அனுகூலத்தை ஏற்படுத்தும். திவ்ய தேசத்தில் ஏதாவதொரு தேசத்தை வழிபாடு செய்யக்கூடிய பாக்கியம் ஏற்படும். மனதில் தெளிவும், சந்தோஷத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications