Rasi Palan This Week: கன்னி ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. ஆனா வாயில தான் கண்டம்.. கவனம்
வார ராசி பலன்: அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 27 முதல் ஐப்பசி 2 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 27 முதல் ஐப்பசி 2 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண அமைப்பு உண்டாகும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரும் பிராப்தம் உண்டாகும். எல்லா விஷயத்தையும் சமாளிக்கலாம் என்கிற எண்ணம் ஏற்படும். ஆரோக்கியத்தில் மன அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்த விஷயங்களுக்கு எல்லாம் நல்ல மருந்துகள், நல்ல மருத்துவர்கள் கிடைப்பார்கள்.
ஆரோக்கியம்
நீச்சம் பெற்றிருக்கக்கூடிய சுக்கிரன் முகம், வயிற்றில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பல், கண், தலை பிரச்சனைகள் வந்து நிவர்த்தியாகும். வீட்டில் கணவனாக இருந்தால் மனைவிக்கும்., மனைவியாக இருந்தால் கணவனுக்கும் பெரிய வெற்றி உண்டாகும். பெரிய பண வரவு உண்டாகும்.
வார்த்தைகளில் கவனம்
அரசு, அரசாங்கம், நண்பர்கள், உறவினர்கள் மூலமாக பணம் வந்து சேரும். வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக வரும் பயணங்களை எடுத்துக் கொள்வது நல்லது. நிம்மதியும், அனுகூலமும் ஏற்படும். வார்த்தைகளில் மட்டும் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் காணப்பட்டிருந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொழிலில் இருந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தி ஏற்படும்.
யோக பலம்
இதுவரை தடைபட்டு வந்த அனைத்துக் காரியங்களும் நடக்கும் காலகட்டம். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு போன்ற அனைத்திலும் அபிவிருத்தி ஏற்படுத்திக் கொடுக்கும். பெரிய அளவுக்கு சந்தோஷம் ஏற்படும். தொழில் ரீதியாக இருந்து வந்த மனத் தாங்கல்கள் நீங்கும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய வாய்ப்புள்ளது.
வழிபாடு
குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சண்டை, சச்சரவுகளால் இருந்த பாதிப்புகள் நிவர்த்தியாகும். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணத் தட்டுப்பாடுகள் நீங்கும். வியாபாரத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். ராதாகிருஷ்ணரை வழிபாடு செய்வது உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications