Kanni: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. மே மாதத்தில் வரப்போகும் பிரகாசமான மாற்றம்
மே மாத ராசி பலன்: 2026 மே மாதம் பிறக்கவுள்ளது. இந்த மே மாதத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசியினருக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும். கிரக நிலைகள் ஒவ்வொரு ராசிக்கும் வேறுபட்ட பலன்களை தரும் நிலையில், கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எப்படி அமையும்? எந்த கிரகங்கள் சாதகமாக உள்ளன, எவற்றில் கவனம் தேவை? இதோ மே மாத ரிஷபம் ராசிக்கான கிரக பலன்கள்.

கன்னி
கன்னி ராசியினருக்கு மாற்றங்கள், திருப்பங்கள், முன்னேற்றங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். மே மாதம் 1 ஆம் தேதி ராசிநாதன் நீச்சை விட்டு வெளிவருகிறார். 8 ஆம் இடத்திற்கு மாறினாலும் நீசத்தில் இருந்து வெளிவருவது நல்ல அமைப்பாகும். தொழில் அமைப்புகளில் இருக்கும் மறைமுக எதிரிகளிடம் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.
வெற்றி
குரு, ராகு 6, 10 இடங்களில் இருப்பது தொழில் அமைப்பில் இருக்கும் மறைமுக எதிரிகளை வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பாக்கியாதிபதி சுக்கிரன் 9 ஆம் இடத்தில் இருப்பதால் தந்தை வழியில் நன்மைகள் கிடைக்கும். சொத்துகள் கிடைக்கும் யோகம் உண்டு. பாகப் பிரிவினையில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். உழைப்பிற்கேற்ற ஊதியம், அங்கீகாரம் கிடைக்கும் யோகம் உண்டு.
ஆரோக்கியம்
தந்தையின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தாய், தந்தை வண்டி வாகனம், காதலுக்கு ஒப்புக் கொள்ளாத நிலைமைகள் எல்லாம் மாறும். வெளிநாட்டுக்குச் சென்று படிப்பது, வேலைக்குச் செல்வதற்கு அனுமதி கிடைக்கும். இளைய பருவத்தினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 5, 9 வலுத்திருப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகள் பேசவில்லை, நடக்கவில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அந்த நிலைமைகள் மாறும்.
பணவரவு
வேற்று மொழி, இன, மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். அரபு நாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பண வரவிற்குப் பஞ்சம் இருக்காது. பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள்.
பொறுப்பு
பணியில் நிலைத்தன்மை இருக்கும். புதிய பொறுப்புகள் வரலாம். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் மெதுவாக வளர்ச்சி இருக்கும்.
பணவரவு சாதாரணமாக இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்தினால் சேமிப்பு சாத்தியம். பெரிய முதலீடுகளை தள்ளிப் போடுவது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். உறவுகளில் நல்ல புரிதல் இருக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக அமையும்.
-
Thulam Rasi Palan: துலாம் ராசியை வச்சு செய்யும் கிரகங்கள்.. மறந்தும் இந்த விஷயங்களை செய்திடாதீங்க -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
Magaram: அடித்தாடும் மகர ராசி.. ஜாக்பாட் யோகம்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Meenam: குரு சுக்கிரன் அருளால் மீன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு -
Kumbam: வெற்றியை குவிக்கும் கும்ப ராசி.. இந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்க..! -
Dhanusu: தனுசு ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு.. ராஜா வாழ்க்கை வாழ போறீங்க -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications