Rasi Palan This Week: பாலுக்கு பால் சிக்ஸர்.. கன்னி ராசியை திக்குமுக்காட வைக்கும் அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: செப்டம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான ஆவணி 16 முதல் ஆவணி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

kanni-weekly-rasi-palan-what-kind-of-benefits-kanni-virgo-people-will-get-from-septemer-1-to-7th

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும்.

அந்த வகையில், செப்டம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான இருக்கும். சமூகத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். உங்களின் வாக்கு ஸ்தானம் பலமடைந்து பேச்சுக்கு மதிப்பு, மரியாதை கூடும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற ஏற்றங்கள் கிடைக்கும். தொழிலில் அடுத்தடுத்து அற்புதமான முன்னேற்றம் உண்டாகும். உத்யோகம், தொழிலில் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.

தன்னம்பிக்கை

உத்யோகத்தில் உங்கள் உயரதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். பயணங்கள் அதிகரிக்கும், உள்ளூர், வெளியூர், வெளிநாடு பயணங்களினால் ஆதாயம் ஏற்படும். தொழிலில் கடந்த காலங்களில் இருந்த பிரச்சனைகள் விலகும். பிரச்சனைகள் விலகுவதால் மனதில் இருந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

வெற்றி

உத்யோகம், தொழிலில் உங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி பெருமையை தேடி கொள்வீர்கள். தாய், தந்தை உறவு மூலம் அதிக்களவு ஆதாயம் கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த காரியங்கள் படிப்படியாக நிறைவேறும்.

கவனம்

குடும்பத்தில் மூன்றாம் நபர்களின் தலையீடு இல்லாமல் பார்த்து கொள்ளவும். பிறர் குடும்ப விவகாரத்தில் நீங்கள் தலையிடாமல் இருப்பது மிகவும் முக்கியம். வாழ்க்கை துணை மற்றும் ரத்த பந்த உறவுகளிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும். விட்டுக் கொடுத்து செல்வதும், பொறுமையை கடைபிடிப்பதும் மிகவும் முக்கியம்.

பரிகாரம்

ஒவ்வாமை, முதுகு தண்டு விஷயத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். உத்யோகம், தொழிலில் தடைகள் நீங்கி நல்ல பலன்கள் கிடைப்பதற்கு உங்கள் வீட்டின் அருகில் உள்ள பெருமாள் கோயில் சென்று வழிபடுவது வழிவகை செய்யும். விஷ்ணு பெருமாள், பள்ளி கொண்ட பெருமாள் வழிபாடு செய்வது கூடுதல் நன்மையை கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+