குரோதி தமிழ் புத்தாண்டு பலன்: சுகத்தை அள்ளித்தரும் குரு.. குரோதி ஆண்டில் யாருக்கு அதிரடி மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிகழும் மங்களகரமான குரோதி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி பிறக்கப்போகிறது. சித்திரை மாதத்தில் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். குரோதி ஆண்டில் கிரகங்களின் மாற்றங்களால் கும்பம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

குரோதி கும்பம் ராசி: மே 1ஆம் தேதி சித்திரை மாதம் 18ஆம் நாள் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு சென்று அமரப்போகிறார். கும்பம் ராசிக்காரர்களுக்கு நான்காம் வீட்டில் அமர்ந்து சுகஸ்தான குருவாக பயணம் செய்யப்போகிறார் குரு பகவான். குரோதி ஆண்டில் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 8,10,12ஆம் வீடுகளின் மீது விழுவதால் யோகங்கள் தேடி வரப்போகிறது.

 Krodhi Tamil New year palan 2024-2025 prediction for Kumbam Rasi

குருவின் பயணம்: குரோதி ஆண்டு முழுவதும் குரு பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். சுக ஸ்தான குருவினால் சுகமும் சந்தோஷமும் அதிகரிக்கும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலையில் புதிய உற்சாகம் பிறகும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதை கூடும். பாதகாதிபதி கேந்திரத்தில் வரும் பொழுது மாற்றங்களையும் முன்னேற்றத்தையும் தரும். வீடு வாகனம் வாங்கும் கூடி வரும்.

8 ஆம் பாவத்தை குரு பார்ப்பதால் உங்களை அவதூறு செய்தவர்கள், உங்களை வைத்து பணமோசடி செய்தவர்கள் எல்லாம் உங்களை நாடி வரும் காலம் வரும். கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். நலிவுற்ற தொழில் வளர்ச்சி அடையும். இதுவரை முடங்கிய லாபம் எல்லாம் வரும். நிரந்தர வேலை கிடைக்கும். பதவி யோகம் தேடி வரும். உயர்பதவி உற்சாகத்தை கொடுக்கும்.

பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தை குரு பகவான் பார்வையிடுவதால் நல்ல வேலை கிடைக்கும். புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். 12 ஆம் பாவத்தை குரு பார்ப்பதால் இதுவரை தூக்கம் இல்லாமல் தவித்தவர்கள் இனி நிம்மதியாக உறங்குவார்கள். இதுவரை தடைப்பட்ட சுபகாரியம் எல்லாம் இனிதே நடைபெறும். வண்டி வாகன விரைய செலவுகள் வரும்.

ஜென்ம சனி: குரோதி ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் பயணம் செய்யும் சனிபகவான் ஏழரை சனியில் ஜென்ம சனியாக பயணம் செய்யப்போகிறார். எத்தனையோ சங்கடங்கள் வரலாம். சுப காரியங்கள் நடைபெறுவதில் தடைகளும் தாமதங்களும் உண்டாகும். எங்கும் எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. அதே நேரத்தில் சனி பகவான் சச மகா யோகத்தையும் கொடுக்கப்போகிறார்.

பண வருமானம் அதிகரிக்கும். பதவி யோகமும் தேடி வரும். சொத்து சேர்க்கைகள் ஏற்படும். வேலையில் இருப்பவர்களுக்கு சிலருக்கு விரும்பிய இடங்களுக்கு இடமாற்றம் கிடைக்கும். எவ்வளவு பெரிய பிரச்னைகள் வந்தாலும் நீங்கள் அதிலிருந்து மீண்டு வரமுடியும். குரோதி ஆண்டின் இறுதியில் சனிபகவான் இரண்டாம் வீட்டிற்கு செல்லப்போவதால் தலைமேல் இருந்த பாரம் இறங்கிவிடும்.

ராகு கேது பயணம்: குரோதி ஆண்டு முழுவதும் ராகு உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானத்திலும் கேது உங்க ராசிக்கு ஆயுள் ஸ்தானத்திலும் பயணம் செய்வது சிறப்பு. விபரீத ராஜயோக காலம். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் பணவருமானம் வரும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் வீடு தேடி வரும். எந்த அளவிற்கு பண வருமானம் வந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள்.

குரோதி ஆண்டு முழுவதும் பண விசயத்தில் யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள் அதை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும் கவனமாக இருக்க வேண்டிய கால கட்டம். பணவரவு பொருளாதார வரவு அதிகரிக்கும் அதே நேரத்தில் செலவும் கூடும் சேமிக்கத் தொடங்குங்கள். வாக்கு கொடுக்காதீர்கள் மாட்டிக்கொள்வீர்கள். பேசும் வார்த்தைகளில் கடுமையை வெளிப்படுத்த வேண்டாம் கனிவை வெளிப்படுத்துங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+