கும்ப ராசிக்கு வக்ர சனி வச்சு செய்யப் போகுது.. கால் வைக்கும் இடமெல்லாம் கரண்ட் ஷாக் அடிக்கப் போகுது
சனி வக்ர பெயர்ச்சி: ஜூலை 2 முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சனி வக்கிரப் பெயர்ச்சி அடைவதால் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சனி வக்கிரம்
ஜூலை 2 முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சனி வக்கிரம் அடைகிறார். வக்கிரம் என்பது தன்னுடைய இழத்தல் என்பது பொருளாகும். இந்த காலகட்டத்தில் சனி செயலிழந்து போகும். வருடகிரகங்களான குருவும், சனியும் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து 5 ஆம் இடத்துக்குப் போகும்போது வக்கிரமாகும். 9 ஆம் இடத்துக்குப் போகும்போது வக்கிர நிவர்த்தியாவதும் வழக்கம். சனி ஒரு ராசியில் இரண்டரை வருடம் இருக்கும் காலகட்டம் என்று பார்க்கும்போது இரண்டு முதல் மூன்று வரை வக்கிரமாகும்.

காயத்ரி மந்திரம்
சனி வக்கிரமாவதால் அதனுடைய செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்படும். சனி ஆயுள் காரகன், கர்மகாரகன் என்று அழைக்கப்படுகிறார். வக்கிர கதியில் சனி இருக்கும்போது சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். சனியிடமிருந்து தப்பிக்க சனி காயத்ரி மந்திரத்தை கூறுவது, கேட்பது அற்புதமான பலன்களைத் தரும். ஒருநாளைக்கு இந்த மந்திரத்தை 8 முறை ஜெபிப்பது பல்வேறு பாதிப்புகளில் இருந்து உங்களைக் காக்கும்.
இந்த சனி வக்கிரமானது பூரட்டாதி மூன்றாம் பாதத்தில் வக்கிரகதி ஆரம்பிக்கிறது. கார்த்திகை மாதம் 1 ஆம் தேதி வக்கிர நிவர்த்தியடைகிறார். இந்த சனி வக்கிரப் பெயர்ச்சியாகும் போது கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
கும்பம் ராசி பலன்
அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆகிய 3 நட்சத்திரம் 9 பாதங்களைக் கொண்டது கும்பம் ராசி. ராசியின் அதிபதி சனி பகவான். உங்கள் ராசிக்கு உங்கள் ராசியிலேயே இருக்கிறார். ஜென்ம சனி நடந்து கொண்டிருக்கிறது. சனி வக்கிர நிலையில் போவதால், ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். மனதளவில் மிகப்பெரிய அழுத்தங்கள் ஏற்படும். உடல் நிலையில் தொய்வு ஏற்படும்.
முயற்சிகளில் தடை
முயற்சிகளில் சிறு சிறு தடை ஏற்படும். எதிர்பாலினத்தவரிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ராசியிலேயே ராகுவும், சமசப்தமத்தில் கேதுவும் இருப்பதால் ஆண்கள் பெண்கள் விஷயத்தில், பெண்கள் ஆண்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்களால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
குழந்தைகள்
முதல் ஒன்றரை மாதத்தில் உங்கள் ராசிக்கு குழந்தைகள் மூலமாக சிறு சிறு தொந்தரவுகள் வரும். பதவி, பெயர், புகழ், அந்தஸ்து, கெளரவத்துக்கு கலங்கம் வருவதற்கான வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் தடைபடும். வேலையில் மாற்றங்கள் வந்து சேரும். சுகங்கள் கெடுவதற்கான வாய்ப்புள்ளது.
அலைச்சல், வேலைப் பளு
இரண்டாவது ஒன்றரை மாதத்தில் அலைச்சல்கள் உங்களுக்கு அதிகமாக இருக்கும். செய்யக்கூடிய வேலையில் பளு அதிகாரிக்கும். அதற்கான பலன்கள் குறைவாகவே இருக்கும். படிக்கும் மாணவர்களுக்கு மறதி உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடைகளைச் சந்திப்பீர்கள். இன்ஜினியர், ஆயில், வானூர்தி தொர்பான துறையில் இருப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மன அழுத்தம் அதிகளவில் இருக்கும்.
ஆரோக்கியம்
ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. மன அழுத்தம், வேலைப் பளு ஏற்படும். குருவின் பார்வை இருப்பதால் ஓரளவு ஏற்றம் பெறுவீர்கள். சனி ராசியிலேயே இருப்பதாலும், வக்கிரகதி அடைவதாலும் குழந்தைகள் விஷயங்களில் பிரச்சனைகள் வரும். வீடு வாங்க வேண்டும் என்று விருப்பம் உள்ளவர்கள் ஆவணங்களை சரிபார்த்து வாங்குவது நல்லது.
வழிபாடு, பரிகாரம்
திருக்கொல்லிக்காடு சனீஸ்வர பகவானைச் சென்று வழிபட்டு வருவது அற்புதமான மாற்றத்தை ஏற்படுத்தும். சரபேஸ்வரரை வணங்குவது நற்பலன்களை அள்ளிக் கொடுக்கும். அருகில் இருக்கும் கோயில்களுக்கு நல்லெண்ணெய் தானமாக அளிப்பது நன்மையை ஏற்படுத்தும். வரும் பாதிப்புகளை எல்லாம் பனிபோல நீங்கச் செய்யும்
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications