Kumbam Rasi Palan: லக்கி பாஸ்கராக மாறும் கும்ப ராசி.. தொட்டதெல்லாம் ஜெயம் ஆகும் காலம்
வார ராசி பலன்: ஆகஸ்ட் 19 முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு
அந்த வகையில், ஆகஸ்ட் 19 முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் குடும்பத்தில் அந்நியோன்ய குறைபாடில்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. துணையுடன் இணக்கமாகவும், அன்பாகவும் இருப்பது நன்மையை ஏற்படுத்தும். தடையாகவும், இழுபறியாகவும் இருந்த விஷயங்கள் எல்லாம் இனி படிப்படியாக மாறும். தொழில் ரீதியான முடிவுகள் அனைத்தும் சந்தோஷத்தை ஏற்படுத்தும். எடுத்த காரியங்களிலும், முடிவுகளிலும் வெற்றி பெறுவீர்கள்.
முடிவுகளால் முன்னேற்றம்
குடும்பத்தில் தேவையில்லாத குழப்பங்கள் ஏதாவது இருந்தால் அதனை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் இனி லாபங்கள் கிடைக்கும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் டக்கென்று எடுக்கும் முடிவுகள் பெரிய முன்னேற்றத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும். தொழில், வியாபாரம், உத்தியோகம் போன்றவற்றில் நல்ல முன்னற்றங்களும், லாபமும் ஏற்படும்.
மனதில் தெளிவு
நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல விஷயங்கள் அனைத்தும் நடைபெறும். மனதில் தெளிவு ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். இனி குடும்பத்தில் அடுத்தடுத்து சுப காரியங்கள் நடக்கும். நன்மைகள் பெறும் காலகட்டமாக இருக்கும். பிள்ளைகளுடைய படிப்பு, உத்தியோகம், வியாபாரம் போன்றவற்றில் நல்ல அனுகூலம் காணப்படும். அவர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உருவாகும்.
நிம்மதி
பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும். முதலீடுகளில் கவனம் செலுத்த தொடங்குவீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும் நன்மை நிறைந்த காலகட்டம். பெண் தெய்வ வழிபாடு குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்தும். வயிறு, கீழ் முதுகுத் தண்டுவட பிரச்சனை, தோல்பட்டை வலி போன்றவற்றில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. கோளார் பதிகத்தை படித்து வருவது அனைத்து விதமான விஷயங்களிலும் உங்களுக்கு ஏற்றத்தை தரும்.












Click it and Unblock the Notifications