Rasi Palan This Week: கும்ப ராசிக்கு அடிச்சது லாட்டரி.. செல்வாக்கு கூடப் போகுது

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: செப்டம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான ஆவணி 30 முதல் புரட்டாசி 5 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

kumbam-weekly-rasi-palan-what-kind-of-benefits-kumbam-aquarius-people-will-get-from-september-15

ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் பிறக்கவுள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்குரியது. சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. அந்த வகையில், செப்டம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு தனிப்பட்ட முறையில் செல்வாக்கு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் நீங்கும். சட்டத்திற்கு உட்பட்ட விஷயத்தில் அதிகமான கவனத்துடன் இருப்பது நன்மை பயக்கும். வேற்று மொழி மனிதர்களிடம் கோபத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும். சுப காரியத்தில் அனுகூலம் காணப்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும்.

பயணங்களால் அனுகூலம்

வாகனத்தில் குடும்பத்துடன் செல்லும்போது தேங்காய் உடைத்து வழிபட்டு செல்வது நல்லது. வண்டி, வாகன விஷயங்களில் அதீத கவனமாக இருக்க வேண்டும். இரவு நேரப் பயணங்கள் தேவையா என்பதை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது. தரைமார்க்கப் பயணம், தொலைதூர பயணம் போன்றவற்றை ஓட்டுநர் வைத்து ஓட்டினாலும் மிகுந்த கவனம் தேவை.

எச்சரிக்கை தேவை

மேலதிகாரிகள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. மற்றவர்களுக்காக கையெழுத்து போடுவதை தவிர்ப்பது நல்லது. அரசுத் துறையில் இருப்பவர்கள், அரசியல்வாதிகள் அதீத கவனமாக இருக்க வேண்டும். சட்ட சிக்கல்களில் இருக்கும் கும்ப ராசியினர் அதனைப் பெரிதாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. கையெழுத்து போடுவதற்கு முன்பு படித்துப் பார்த்துவிட்டு போடுவது நல்லது.

பண வரவு

தனிப்பட்ட முறையில் சுப காரியத்தில் இருந்த சிக்கல்கள் எல்லாம் நீங்கும். பண வரவுகள் உண்டாகும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். கையெழுத்து போடுவதற்கு முன்பு படித்து பார்த்துவிட்டு போடுவது நல்லது. தனிப்பட்ட முறையில் சுபகாரியத்தில் இருந்த சிக்கல்கள் எல்லாம் தீரும். ரத்தபந்த உறவுகள் தாய் வழி உறவுகள் மேன்மை அடையும்.

ஏற்றம்

மீடியா துறையில் இருப்பவர்களுக்கு, சினிமா துறையில் இருப்பவர்களுக்கு ஏற்றம் அதிகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். நியாபக மறதி அதிகமாக இருக்கும். ஏற்கனவே ரத்தத்தில் உபத்திரவம் உள்ள கும்ப ராசியினர் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் காணப்பட்டிருந்த சிக்கல்கள் தீர, சிறிது விட்டுக் கொடுப்பதையும், தர்க்கம் செய்வதையும் தவிர்ப்பது நன்மை பயக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+