சொந்த வீடு, வாகனம் வாங்கும் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிக்காரர்கள்.. அள்ளிக் கொடுக்கும் சனி பகவான்
சனிப்பெயர்ச்சி பலன்கள்: சனிப்பெயர்ச்சி வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில் சனியின் தாக்கத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகம் பெறும் ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
நீதிக்காரகன், நீதிமான், தர்மகாரகன் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். பொதுவாக அனைத்து கிரகங்களையும் விட சனி பகவான் மிக மெதுவாக நகரக்கூடிய கிரகமாகும். அதனால் அவரின் நகர்வு அனைத்து ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். பிப்ரவரி மாதத்தில் சனியின் நட்சத்திரப் பெயர்ச்சியும், மார்ச் மாதத்தில் சனிப்பெயர்ச்சியும் நடைபெறவுள்ளது. சனி பகவானின் இந்த மாற்றத்தால் அதிர்ஷ்டமான பலன்களைப் பெறும் ராசிகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

அனைத்து கிரகங்களிலும் வலிமை மிக்க கிரகமாக கருதப்படும் சனி பகவான் தனது சொந்த கிரகமான கும்பத்தில் தற்போது உள்ளார். மார்ச் மாதத்தில் பெயரச்சி அடைந்து மீன ராசிக்கு செல்லவுள்ளார். மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. முன்னதாக பிப்ரவரி 2 ஆம் தேதி குருவின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகிறார். குருவின் நட்சத்திரத்தில் சனியின் பெயர்ச்சி மங்களகரமானதாக கருதப்படுகிறது.
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி, மீன ராசியில் நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி ஆகியவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இதனால் சில ராசிக்காரர்களுக்கு பல்வேறு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றன. இதனால், சில ராசிக்காரர்களுக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். அதிர்ஷ்டங்களை அள்ளப் போகும் அந்த ராசிகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவான் எண்ணற்ற மகிழ்ச்சிகளை அள்ளித் தரப் போகிறார். சனி மற்றும் குரு ஜாதகத்தில் இருக்கும் நல்ல நிலை காரணமாக உங்களுக்கு சொந்த வீடு கார் போன்ற வாகனங்கள் வாங்குவதற்கான சாதகமான சூழல் ஏற்படும். வீடு வாங்கும் முயற்சிகள், சொத்து பரிவர்த்தனைகள் போன்றவை உங்களுக்கு கைகூடி வரும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
கடகம்: பிப்ரவரி மாதத்தில் சனியின் நட்சத்திரப் பெயர்ச்சியும், மார்ச் மாதத்தில் நடக்கக்கூடிய சனிப்பெயர்ச்சியும் கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கப் போகின்றன. சனியின் தாக்கத்தால் சொந்த வீடு, மனை, நிலம், வாகனங்கள் வாங்குவது தொடர்பான உங்களுடைய ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு அனைத்துப் பலன்களையும் வழங்கும் மங்களகரமான காலமாக இருக்கும். நீங்கள் செய்யும் வேலையில் கூடுதல் பண வரவு உண்டாகும். செல்வ வளம் பெருகும். சேமிப்பு முதலீட்டில் லாபத்தைக் காண்பீர்கள். செல்வமும், புகழும் உங்களை நோக்கி வரும் காலமாக இருக்கும்.
கன்னி: குருவின் நட்சத்திரப் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு அமோகமாக பலன்கள் கிடைக்கப் போகின்றன. சனியின் அருளால் நீங்கள் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சொந்த வீடு, வாகனம் வாங்குவதற்கான யோகங்கள் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். தொழிலில் முதலீடு செய்வது உங்களுக்கு நல்ல பலனைத் தரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். லாபம் அதிகரிக்கும்.
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சி மற்றும் சனி பெயர்ச்சி நற்பலன்களை அள்ளித் தரும். குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் பெருகும். எடுத்த காரியங்களை செவ்வனே செய்து முடித்து அதில் வெற்றியை காண்பீர்கள். மனதில் இருந்து வந்த பாரங்கள், பிரச்சனைகள் அனைத்தும் உங்களை விட்டு விலகும். பல்வேறு நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
மகரம்: மார்ச் மாதத்தில் நடக்கும் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு மகர ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் ஆரம்பமாகும். நீண்ட நாட்களாக வாகனங்கள் வாங்க வேண்டும் என்று எண்ணியவர்களுக்கு வாகனங்கள் வாங்கும் யோகம் உருவாகும். சொத்து சேர்ப்பதில் வெற்றி பெறுவீர்கள். வீடு, மனை, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி, முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வாழ்க்கையில் இன்பமான காலமாக இருக்கும்.
சனியின் தாக்கத்தை குறைக்க சனி சாலிசா, அனுமான் சாலிசா, கோளறு பதிகம் போன்றவற்றை பாராயணம் செய்வது நல்ல பலன்களை அள்ளித் தரும். சனீஸ்வரரின் கோயில்களுக்கு சென்று வழிபடுவது நல்லது. ஆதரவற்றவர்கள், ஏழை எளியவர்களுக்கு தான தர்மம் அளிப்பது ஏழரை சனி பாதிப்பை குறைக்கும்.












Click it and Unblock the Notifications