குரு வக்ர நிவர்த்தி: கன்னி ராசிக்கு ராஜயோகம்.. அள்ளிக் கொடுக்கும் குரு.. பலன்கள், பரிகாரங்கள் என்ன?
குரு வக்ர நிவர்த்தி: 2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு கேது, சுக்கிரன், செவ்வாய், புதன் உள்ளிட்ட முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் உள்ளன. அந்த வகையில் பிப்ரவரி 4 ஆம் தேதி குரு வக்ர நிவர்த்தி நிகழ உள்ளது. கன்னி லக்னம், கன்னி ராசிக்கான குரு வக்ர நிவர்த்தி பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்..
குரு தற்போது ரிஷப ராசியில் வக்ரமாக வீற்றிருக்கிறார். பிப்ரவரி 4 ஆம் தேதி குரு வக்ர நிலையில் இருந்து நிவர்த்தி ஆகி இயல்பு நிலைக்கு திரும்புகிறார்.. குரு தனம், குடும்பத்துக்கு காரகனாக இருக்கிறார். நம் அன்றாட வாழ்க்கையில் குரு பயணிப்பதால் அவரது வக்ர நிவர்த்தி முக்கியத்துவம் வாய்ந்தது.

கன்னி ராசியினரின் லக்ன, ராசியில் ஒன்பதாவது இடத்தில் குரு பின்னோக்கி சென்று கொண்டிருந்தார். பிப்ரவரி 5 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார் குரு பகவான். ஒன்பதாம் இடம் உஷ்ண ஸ்தானம். குரு நல்ல நிலையில் உட்கார்ந்திருந்தாலும் இதுவரை நல்ல பலன்களைத் தராமல் இருந்துள்ளார். ஆனால், இந்த குரு வக்ர நிவர்த்தியால் நல்ல பலன்களைத் தரப்போகிறார்.
ராஜயோகம் கிடைக்கப் பெறும் காலமாக உங்களுக்கு இருக்கும். உங்களுடைய ராசியில் குரு பார்ப்பதால் நல்ல பலனை காணப் போகிறீர்கள். நில தத்துவத்தில் குரு அமர்ந்துள்ளார். குரு ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியைப் பார்க்கிறார். ஐந்து என்றால் அதிர்ஷ்டம், லட்சுமி என்று பொருள். ஐந்து, ஒன்பது தொடர்பு பண வரவுக்கான வாய்ப்பை ஏற்படுத்தும்.
இதுநாள் வரை பட்ட கஷ்டத்துக்கெல்லாம் பலனை அனுபவிக்கப் போகிறீர்கள். உங்களைத் தேடி வரும் வாய்ப்புகளால் நீங்களே உங்களை வளர்த்துக் கொள்ளப் போகிறீர்கள். உங்கள் குழந்தையின் வாழ்க்கைத் தரம் உயரும். உங்களுடைய பேச்சைக் கேட்டு நடப்பார்கள். அவர்களுடைய படிப்பு தொடர்பான கவலைகளில் இருந்து விடுதலை அடைவீர்கள்.
வழக்குகளில் உங்களுக்கு நல்ல சாதகமான தீர்ப்பு வரும். உற்றார் உறவினர்கள் உங்களுடன் இணக்கமாக மாறுவார்கள். உங்களைப் பார்த்து கேலி செய்தவர்கள் உங்களை அண்ணாந்து பார்க்ககூடிய சூழல் அமையும். சித்திரை நட்சத்திரக்காரர்கள் அபரிமிதமான பலனைப் பெறுவீர்கள். அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு மனக் குழப்பத்தில் இருந்து விடுபடுவீரகள்.
உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு வேலைகளில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். வாழ்க்கைத் தரம் உயரும். சிறிய சிறிய மாற்றங்களால் நல்ல பலனைப் பெறுவீர்கள். பண வரவு உண்டாகும். பண வரவினால் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். அருகில் இருக்கும் முருகன் ஆலயத்துக்குச் சென்று வழிபடுவது, அபிஷேகம் செய்வது நல்ல பலன்களைத் தரும். செவ்வாய், வியாழன் வழிபாடு செய்வது கூடுதல் சிறப்பு.
நீங்கள் செய்யக்கூடிய இந்த பரிகாரங்கள் உங்களுக்கு தொடர்ந்து வளரக் கூடிய வளர்ச்சிகளாக மாற்றிக் கொடுக்கும். குடும்பத்தில் தனம் பெருகும். குழந்தைப் பேறு உண்டாகும். திருமணத் தடைகள் நீங்கும். சொந்த ஊர்களுக்கு இடமாறுதல் பெறுவதற்கான வாய்ப்பு உண்டாகும். வீடு வாங்குவதற்கான லோன் கிடைக்கும். குழந்தைகளுக்கான கல்வி செலவுகளைச் செய்வீர்கள்.
பண வரவு உண்டாகும். வருமானத்திற்கான ஆதாரங்களைக் கண்டறிவீர்கள். சொத்து வாங்குவதற்காக லோனை எதிர்பார்த்தவர்களுக்கு வங்கிக் கடன்கள் கிடைக்கும். வேலையினால் ஏற்பட்டு வந்த மன குழப்பங்கள் தீரும். உங்களுக்கான அங்கீகாரங்கள் கிடைக்கும். இருட்டில் இருந்த உங்களுக்கு வாழ்க்கை பிரகாசமாக மாறும்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications