ஆனி மாத பலன் 2025: ஜென்ம சனியிலும் மீனத்துக்கு மிகப்பெரிய ஜாக்பாட்.. பொற்காலம் ஆரம்பம்.. என்ஜாய்
Aani Maadha palan: வைகாசி நிறைவடைந்து ஆனி மாதம் தொடங்கியுள்ளது. ஜூன் 15 முதல் ஜூலை 16 ஆம் தேதி வரையிலான இந்த காலகட்டத்தில் மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
மிதுனத்துக்கு சூரியன் வரும் மாதமே ஆனி. ஏற்கனவே மிதுனத்தில் குரு அமர்ந்திருக்கிறார். தற்போது குருவுடன் சூரியன் சேர்கிறார். இதனால், உலகத்தில் சில விஷயங்களில் நன்மைகளும், சில விஷயங்களில் பிரச்சனைகளும் ஏற்படும்.

பொதுவாக ஆனி மாதத்தில் பெருமாள், நரசிம்மர், தாயார் வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். கிருஷ்ணர், சிவன் வழிபாடு செய்வது நல்லது. சிவன் கோயில்களில் அன்னதானத்திற்கு பிரசாதம் வாங்கி கொடுப்பது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த ஆனி மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கான பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மீனம் ராசி பலன்
மீனம் ராசிக்காரர்கள் புதன்கிழமை தெய்வ வழிபாடுகளைத் தவறாமல் செய்வது நன்மையை ஏற்படுத்தும். பற்கள், தலைவலி, காது, மூக்கு, தொண்டை, கழுத்து முதல் தலை வரையிலான உறுப்புகளில் வரும் பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். வண்டி, வாகனங்களை இயக்கும்போது அதீத கவனம் தேவை. ரத்தத்தில் பரவக்கூடிய தொற்றுநோய் விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும்.
அனுகூலம்
உடற்பயிற்சியை விட்டு விடாமல் இருப்பது நல்லது. புதன்கிழமைகளில் தெய்வ வழிபாடு அனுகூலத்தை தரும். மரண பயம் படிப்படியாக நீங்கும். சுப விரைய பிராப்தம் அனுகூலத்தை ஏற்படுத்தும். மரண பயம் படிப்படியாக நீங்கிவிடும். வரவுக்கு மீறிய செலவுகள் காணப்பட்டாலும் அதற்கேற்ப பணம் கிடைப்பது ஆச்சரியத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
ஜென்ம சனி
சூரியனின் ஆதிக்கம் கண்டிப்பாக பத்தாம் இடத்தை பார்ப்பதால் அரசுத் துறை அரசியல்வாதிகள், தனிப்பட்ட துறை, உத்தியோகம், மேலதிகாரிகள், வழக்கு போன்ற பிரச்சனைகளில் எல்லாம் அனுகூலமான அமைப்பு ஜென்ம சனியிலும் ஏற்படும். புதிய தொழில் தொடங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த மீன ராசிக்காரர்களுக்கு புதிய தொழில் தொடங்கும் பிராப்தம் உண்டாகும்.
முன்னேற்றம்
எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கக்கூடிய அமைப்பு ஆச்சரியத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அனுகூலங்கள் காணப்படும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறுவதை கண்கூடாகப் பார்க்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும்.
ஏற்றம், லாபம்
தொழிலில் இருந்த சிக்கல்கள் தீர தீர மனதில் இருந்த கஷ்டங்கள் தீரும். உத்தியோகத்தில் அபரிமிதமான ஏற்றத்தையும், சந்தோஷத்தையும் பெறக்கூடிய ராசியினராக இருப்பீர்கள். தாய் வழி உறவு அனுகூலத்தைப் பெற்றுத் தந்தாலும், ரத்த பந்த உறவுகளுடன் எந்த வித மன வருத்தமும் இல்லாமல் பாதுகாத்துக் கொள்வது முக்கியம்.
சுபவிரையம்
குடும்பத்தில் பெற்றோர் பெரியோருக்கு சில தேக குறைபாடுகள் காணப்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. தொழில் ரீதியான அனுகூலம், சுப விரைய பிராப்தம், முதலீடுகளுக்கு குறைவில்லாமல் ஏற்றங்கள் உண்டாகும். விடுபட்ட தெய்வ வழிபாடுகளை நிவர்த்தி செய்வீர்கள். மகான்கள் தரிசனம், அவர்களுடைய ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.
-
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும்












Click it and Unblock the Notifications