கடக ராசிக்கு நல்ல நேரம் ஆரம்பம்.. பிரச்சனைகளுக்கு எல்லாம் எண்டு கார்டு.. இனி வேற மாதிரி
Guru rahu ketu peyarchi: 2025 ஆம் ஆண்டில் முக்கிய கிரகங்களான சனி, குரு, ராகு கேது பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ராகு மே மாதம் 18 ஆம் தேதியில் கும்பத்தில் இருந்து மீனத்துக்குப் பெயர்ச்சியாகி உள்ளார். கேது பகவான் அதே நாளில் கன்னியில் இருந்து சிம்மத்துக்குப் பெயர்ச்சியாகிறார். மே 14 ஆம் தேதி குரு பெயர்ச்சியாகி உள்ளார். குரு அதிசாரப் பெயர்ச்சியாகவுள்ளார். அக்டோபர் மாதம் கடகத்துக்குச் சென்றுவிட்டு டிசம்பரில் மீண்டும் மிதுனத்துக்கு வருகிறார்.

ராகு அகோர காரகர் என்றும், கேது ஞானக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். தன் நிலையில் இருந்து மாறுபட்ட நிலையில் இருப்பது தான் ராகு திசை. கோபத்தால் மற்றவர்களை அடக்கும் முறையை கையாளுவார்கள். கேது என்பவர் அரசனையும் ஆண்டியாக்கும் தன்மையைக் கொண்டவர். அந்த வகையில், குரு ராகு கேதுவால் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கடக ராசி பலன்
கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனியில் படாதபாடு பட்டிருப்பீர்கள். பதவி கிடைத்திருக்கும். ஆனால் அந்தப் பதவியினாலேயே பிரச்சனைகளைச் சந்தித்திருப்பீர்கள். வீடு வாங்கியிருப்பீர்கள். ஆனால், கிரகப்பிரவேஷம் செய்வதற்கு, கடன் பெறுவதற்கே படாத பாடு பட்டிருப்பீர்கள். இப்போது கொஞ்சம் நிம்மதி பெருமூச்சுவிடும் காலகட்டமாக இருக்கும். யாரைப் பார்த்தாலும் அறிவுரை, ஆலோசனை செய்வதை கடந்து வந்திருப்பீர்கள்.
சுபவிரையம்
சனிப்பெயர்ச்சியிலேயே உங்களுக்கு பாதி பிரச்சனை சரியாகி இருக்கும். தற்போது, குரு அருமையான இடத்துக்கு வருகிறார். ஏற்கனவே 11 ஆம் இடத்தில் இருந்து காப்பாற்றியிருக்கிறார். தற்போது 12 ஆம் இடத்துக்கு வருவதால் விரைய குரு. தங்கம் வாங்குவதற்கு, படிப்புக்கு செலவு செய்வது, கோயில் காரியங்களுக்கு செலவு செய்வது, குழந்தை வரம், திருமணம் என பல்வேறு சுப விரையங்களைச் செய்து மகிழ்வீர்கள்.
ராஜயோகம்
ராகு கேதுவால் எடுத்த காரியங்கள் அனைத்திலும் ஏதாவதொரு தடையைச் சந்திக்கும் நிலை உண்டாகும். ஒருத்தரிடம் பேச வேண்டியதை நேரடியாகப் பேச முடியாத நிலை ஏற்படும். உங்களிடம் இருக்கும் விஷயங்களை சொல்வதில் சிரமத்தை சந்திப்பீர்கள். தடங்கல்கள் உண்டாகும். 8 இல் ராகு மறைவது ராஜ யோகத்தை தரும். 2 இல் கேது வருவதால் பண வரவு சூப்பராக இருக்கும். வியாபாரம், தொழிலில் லாபம் உண்டாகும். பயணங்கள் ஆதாயத்தை உண்டாக்கும்.
சுபச்செலவு
பண வரவு அதிகமிருந்தாலும் அதனை சேமித்து வைக்க முடியாத நிலை உண்டாகும். சுப செலவுகளாகச் செய்துவிட்டு சேமிப்பதில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் மூன்றாவது நபரை தலையிடச் செய்வது பிரச்சனையை உண்டாக்கும். விரக்தி மனப்பான்மையைக் கைவிடுவது நல்லது. குருப்பெயர்ச்சி அமோகமான பலன்களைத் தரப் போகிறது. ராகு கேது பெயர்ச்சி 50 சதவீதம் நன்மையையும், குருப்பெயர்ச்சி 50 சதவீத நன்மையையும் தரப் போகிறது.
வழிபட வேண்டிய தெய்வம்
பிள்ளையார் வழிபாடு உங்களுக்கு அபரிமிதமான நன்மையைத் தரும். ராகு காலத்தில் துர்கை கோயில்களுக்குச் சென்று அர்ச்சனை செய்து கொள்வது உங்களுக்கு வரும் அனைத்துப் பிரச்சனைகளையும் பனிபோல விலகச் செய்யும்.












Click it and Unblock the Notifications