சிம்ம ராசிக்கு ஏப்ரல் மாதம் காத்திருக்கும் பெரிய ஆபத்து.. கவனமாக இருங்க!

Subscribe to Oneindia Tamil

ஏப்ரல் மாத பலன்: 2025 ஆம் ஆண்டில் சனி, ராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ஆகிய முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுகிறது. சனிப்பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. மே மாதத்தில் ராகு கேது பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில் சிம்மம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். கிரகங்களின் மாற்றம் 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ராசி மாற்றம், கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சிலருக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும்.

April month rasi palan Simmam Astrology

2025 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் நிறைவடைந்து ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சனிப்பெயர்ச்சியின் மூலமாக சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகிறது. மே மாதம் 12 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி, 14 ஆம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளதால் எந்தெந்த ராசியினருக்கு அனுகூலம் கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில், இந்த ஏப்ரல் மாதத்தில் சிம்மம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சிம்மம்: சிம்ம ராசிக்கு இந்த மாத தொடக்கம் அவ்வளவு சிறப்பாக இல்லை. முதல் 15 நாட்கள் மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும். உங்கள் ராசியில் இருந்து எட்டாம் இடத்தில் பல கிரகங்கள் ஒன்றிணைந்துள்ளன. இது உங்களுக்கு பேராசையை உண்டாக்கும். பேராசையால் பெரு நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே முதல் 15 நாட்களுக்கு உறவு, நட்பு என்று யாரையும் நம்ப வேண்டாம்.

முதலீடு நோ

யாரையும் நம்பி எந்த காரியங்களில் இறங்குவதோ, மற்றவர்களை நம்பி வேலையை விடுவதோ உங்களுக்கு பின்னடைவை கொடுக்கும். அதனால் உங்களின் பணியை முடிந்தவரை நீங்களே செய்யுங்கள். முதலீடு சார்ந்த விஷயங்களில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். பங்குச்சந்தை, ஆன்லைன் ரம்மி பக்கம் தெரியாமல் கூட சென்று விடாதீர்கள்.

15 நாட்கள்

உங்களுக்கு அஷ்டம சனி தொடங்கியுள்ளது. இருப்பினும் அதைப்பற்றி பெரிதாக கவலைப்பட வேண்டாம். ராகுவுடன் சனியும் இணைந்துள்ளது. மே மாதம் ராகு பெயர்ச்சி ஆகும் வரை உங்களுக்கு பெரியளவுக்கு பாதிப்பு இருக்காது. எனவே முதல் 15 நாட்கள் மட்டும் எல்லாவற்றிலும் நிதானமாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும்.

சிந்தனை

சற்றே அசந்தாலும் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். சமூகவலைதளங்களை மிகவும் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ள வேண்டாம். சிந்தனையில் தெளிவு இருக்காது. மனம் அலை பாய்ந்து கொண்டே இருக்கும். 15 நாட்களுக்கு பிறகு ராசி நாதன் சூரியன் உச்சத்துக்கு சென்றுவிடுவார். அதனால் உங்கள் சிந்தனை தெளிவடையும்.

சூரியன்

இரண்டாவது வாரத்துக்கு பிறகு சூரியன் உச்சமைடவதால் நன்றாக இருக்கும். உறவுகள் மற்றும் நண்பர்கள் மூலம் ஆதயமடைவீர்கள். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி பொங்கும். பண வரவு சீராக இருக்கும். உத்யோகம் மற்றும் தொழிலில் உயர்வு இருக்கும். பெரிய லாபத்தை பெற முடியாவிடினும் கடந்த காலங்களில் இருந்த சூழ்நிலையை விட முன்னேற்றம் இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+