காதல் ஜோதிடம்.. நீரா? நெருப்பா? நீங்க எந்தராசி..மண வாழ்க்கை இனிக்குமா? கசக்குமா? சின்ன டெஸ்ட்
சென்னை: காதல் ராசி பார்த்து வருவதில்லை. ராசியை கேட்டு காதலிக்க முடியாதுதான் என்றாலும் நமக்கு பொருத்தமான ராசியில் பிறந்த ஜோடியை பார்த்து காதலித்தால் அந்த லவ் சக்சஸ் ஆவதோடு அந்த திருமண பந்தமும் பல ஆண்டுகள் நிலைத்து நிறும். நெருப்பு ராசிகள், நீர் ராசிகள், காற்று ராசிகள், நில ராசிகள் என நான்கு வகை தத்துவத்தில் ராசிகள் இருக்கின்றன. இந்த ராசிகள் சரியான ராசி பார்த்து இணைய வேண்டும். 12 ராசிகளில் எந்த ராசிக்காரர்கள் யாருடன் ஜோடி சேர்ந்தால் வெற்றிகரமான திருமண வாழ்க்கை அமையும் வாழ்க்கை இனிக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்: மேஷ ராசி அதிபதி செவ்வாய் பகவான். நெருப்பு ராசிக்காரர்கள் துணிச்சலும், நம்பிக்கையும் மிக்கவர்கள். கடக ராசிக்கு அதிபதி சந்திரன் மனோகாரகன். நெருப்பான மேஷ ராசியினாரை கடக ராசியினர் திருமணம் செய்து கொண்டால் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு சந்தோஷமாக வாழ்க்கை நடத்துவார்களாம்.

செவ்வாயும் சனியும்: மேஷ ராசி அதிபதி செவ்வாய். ரத்தத்தின் அதிபதி எப்போதும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கும் இவர்கள் போர் குணம் கொண்டவர்கள். உணர்ச்சி வசப்படுபவர்களாக இருப்பார்கள். காதலில் வெற்றி பெற தைரியமும் சுறுசுறுப்பும் அவசியம். கும்ப ராசியின் அதிபதி சனிபகவான். பொறுமைசாலிகள். ஒருவரின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு எப்படி கையாள்வது என்பதை நன்கு அறிந்து கொண்டவர்கள். இந்த இரண்டு ராசிக்காரர்களும் இணைந்தால் மண வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது.
காதல் ராசிகள்: காதல் நாயகன் சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்டவர் ரிஷபம் ராசிக்காரர்கள். ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு விருச்சிக ராசிகாரர்களுடன் திருமண வாழ்க்கை அமையும். ரிஷபம் நில ராசி, விருச்சிகம் நீர் ராசி எனவே நீரும் நிலமும் இணைந்து இல்லறத்தில் காதல் கெமிஸ்ட்ரி அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு அன்போடு காதல் வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.
ருசிக்கும் வாழ்க்கை: ரிஷப ராசி அதிபதி சுக்கிரன், மகர ராசி அதிபதி சனி. சுக்கிரனும் சனியும் நட்பானவர்கள் நில ராசிக்காரர்கள் இருவரின் குணாதிசயங்களும் ஒன்றாக இருப்பதால் காதல் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, திருமண வாழ்க்கையாக இருந்தாலும் சரி இருவரிடையே நம்பிக்கையும், புரிதலும் இருக்கும் கல்யாண வாழ்க்கை ருசிக்கும்.
மண வாழ்க்கை வெற்றி: மிதுன ராசிக்கு அதிபதி புதன் பகவான். கல்வி, ஞானம், தனம் ஆகியவற்றை தரக் கூடியவர். மிதுன ராசியினரின் மற்றவரின் உணர்வுகளைப் புரிந்து நடக்கக் கூடிய மன நிலையைக் கொண்டிருப்பார்கள். துலாம் ராசிக்கு சுக்கிரன் அதிபதி துலாம் ராசியினர் எதை ஏற்றுக் கொள்ளக் கூடிய சமாதானத்தை விரும்பக்கூடிய மனநிலை கொண்டவர்கள். இதனால் ராசிக்காரர்கள் காதல் திருமணத்தில் இணைவதால் வெற்றிகரமான மண வாழ்க்கையாக அமையும்.
ஒற்றுமை: சிம்ம ராசிக்கார அதிபதி சூரியன். நெருப்பு ராசியான சிம்மத்தில் பிறந்தவர்கள் ஆளுமை மிக்கவர்கள். தன்னம்பிக்கையும், ஆதிக்கமும் செலுத்தக்கூடியவர்கள். துலாம் ராசியினர் காற்று ராசிக்காரர்கள். சமாதானத்தை விரும்புபவர். காதலை விரும்புபவர்கள். இந்த இரண்டு ராசிகள் இணைந்தால் மனம் ஒத்த தம்பதிகளாக ஒற்றுமையாக வாழ்க்கை நடத்துவார்கள்.
காதல் வாழ்க்கை: புதனை ராசி அதிபதியாகக் கொண்டவர்கள் மிதுன ராசிக்காரர்கள். இவர்கள் தங்களுடைய துணையை அளவுக்கு அதிகமாக விரும்புவார்கள். மிதுன ராசிக்காரர்கள் மிகவும் பொறுமையானவர்கள். மிதுன ராசிக்காரர்களுக்கும் கடகம் ராசிக்காரர்களுக்கும் காதல் புரிந்துணர்வு அபரிமிதமாக இருக்கும். கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு மகரம், விருச்சிகம் ராசி உள்ள வாழ்க்கை துணைகள் பொருத்தமாக இருப்பார்கள். கன்னி ராசி நில ராசி மகரம் ராசி நில ராசி, விருச்சிகம் நீர் ராசி. இவர்களுடைய வாரிசு அறிவாளியாக இருக்கும்.

நீர் ராசிகள்: மீன ராசி அதிபதி குரு. கடக ராசி அதிபதி சந்திரன். இந்த இரண்டு ராசிகளும் நீர் ராசிகள். இதனால் இரு ராசிகளிடம் ஒத்த குணங்கள் அதிகம் இருப்பதால் காதல், அன்பு என எதுவாக இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் நன்றாக ஒத்துப்போகும். திருமணம் செய்து கொண்டால் ஒற்றுமையாக இருப்பார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications