அதிர்வேட்டு முழங்க அழகர்கோவிலுக்கு சென்ற கள்ளழகர்... லட்சக்கணக்கான மக்கள் மலர்தூவி பிரியாவிடை
வைகையில் இறங்க மதுரை வந்த கள்ளழகர் மூன்று நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்து விட்டு அழகர் மலைக்கு திரும்பி சென்ற போது பக்தர்கள் மலர்தூவி பிரியாவிடை அளித்து அனுப்பி வைத்தனர்.
மதுரை: கண்டாங்கி புடவை கட்டி தங்கப்பல்லாக்கில் அதிர்வேட்டு முழங்க அழகர் மலைக்கு திரும்பிய கள்ளழகரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீபம் ஏற்றியும் மலர்கள் தூவியும் வழியனுப்பி வைத்தனர். வழியெங்கும் மண்டகப்படிகளில் எழுந்தருளி அழகர் மலைக்கு திரும்பினார் கள்ளழகர்.
சித்திரை திருவிழாவுக்காக எப்ரல் 14 ஆம் தேதி மாலை அழகர் கோவிலிலிருந்து கள்ளழகர் மதுரையை நோக்கி புறப்பட்டார். அழகர் கோவில் வழக்கப்படி வெள்ளியங்குன்றம் ஜமீன் அழகரை வழியனுப்பி வைக்க, அழகர் கோவில் நிலைக் கதவில் குடியிருக்கும், அவரது தளபதி பதினெட்டாம் படி கருப்பணசாமியிடம் உத்தரவு பெற்று மதுரை நோக்கி புறப்பட்டார்.
ஒரு கையில் வளரித்தடி, மற்றொரு கையில் சாட்டைக்கம்பு, ஆண்கள் இடுகின்ற ஒரு வகையான கொண்டை, உருமால், காதுகளில் கடுக்கன், 'காங்கு' எனப்படும் கருப்பு புடவை ஆகியவை அணிந்து கள்ளழகர் கோலத்தில் மக்கள் வெள்ளத்தில் மதுரைக்கு வந்தார் கள்ளழகர்.

வைகையில் இறங்கிய கள்ளழகர்
15 ஆம் தேதி எதிர்சேவை நடைபெற்றது. தல்லாக்குளம் பெருமாள் கோவிலில் இளைப்பாறிய அழகருக்கு அன்று இரவு நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு திருமஞ்சனம் நடைபெற்றது. இதனையடுத்து சுந்தரராஜ பெருமாளாக அலங்கரித்துக்கொண்டு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து 16 ஆம் தேதி வைகையாற்றில் எழுந்தருளினார்.

பூப்பல்லக்கில் அழகர்
17 ஆம் தேதி வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார், 18 ஆம் தேதி தசாவதாரம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்வு நேற்று அதிகாலை 2.30 மணிக்கு நடைபெற்றது. மல்லிகை, சம்பங்கி, ரோஜா, கனகாம்பரம், செவ்வந்தி, பச்சை ஆகிய பூக்களை கொண்டு பூப்பல்லக்கில் கள்ளழகர் இராமநாதபுரம் சேதுபதி மகாராஜா சமஸ்தான மண்டகப்படியில் இருந்து புறப்பட்டார்.

லட்சக்கணக்கான பக்தர்கள்
தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோவிலில் உத்தரவு பெற்ற கள்ளழகர், அழகர் மலையை நோக்கி புறப்பட்டார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடு இரவிலும் உற்சாக பெருக்கோடு கள்ளழகரை தரிசனம் செய்தனர்.அழகர் ஊர்வலத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட உண்டியல் வண்டிகள், அவருடைய உடை, ஆபரணங்கள், அலங்கரிக்கப்பட்ட பேருந்து ரதம் வேடமிட்ட பக்தர்களுடன் லட்சக்கணக்கான மக்களும் பங்கேற்றனர்.
மதுரையிலிருந்து அழகர்கோயில் வரை அமைக்கப்பட்ட மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளியும் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தார். மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார் கள்ளழகர். மதுரையில் புதூர், ரிசர்வ் லைன், அவுட் போஸ்ட் ஆகிய வழிகளில் உள்ள மண்டக படிகளில் எழுந்தருளி மாலையில் மதுரை மாநகரின் எல்லையான மூன்று மாவடிக்கு வந்த கள்ளழகரை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கையில் தீபம் ஏந்தியும் மலர் தூவியும் வழி அனுப்பி வைத்தனர்.

வையாழி நிகழ்ச்சி
காதக்கிணறு கடச்சனேந்தல், அப்பன் திருப்பதி, கள்ளந்திரி, பொய்கைக்கரைப்பட்டி உள்ளிட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளினார். அப்பன்திருப்பதியில் விடிய, விடிய திருவிழா நடைபெற்றது. நாளைய தினம் அழகர்கோவில் கோட்டைவாசல் பகுதிக்கு கள்ளழகர் தங்கப்பல்லக்கில் திரும்பிய உடன் அங்கு 18ஆம்படி கருப்பணசாமி கோவில் முன்பு அழகருக்கு சிறப்பு பூஜைகளுடன் வையாழி நிகழ்ச்சியும் தீபாராதனையும் நடைபெறும்.

அழகருக்கு திருஷ்டி
மதுரைக்கு சென்று விட்டு மலைக்கு திரும்பி அழகரை கோவிந்தா முழக்கமிட்டு பக்தர்கள் பூக்கள் தூவி வரவேற்பு அளித்தனர். அதிர்வேட்டு முழக்கம் விண்ணை எட்டியது. வானவேடிக்கைகள் மேளதாளங்களுடன் தீவட்டி பரிவாரங்களும் முன்னே செல்ல தங்கப்பல்லாக்கில் மலைக்கு திரும்பிய அழகரை 21 பூசணிக்காய்களில் கற்பூரம் ஏற்றி சுற்றி வந்து திருஷ்டி கழிப்பது வழக்கம். உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவடைகிறது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications