ஜாவா சுந்தரேஷனாக மாறும் மகர ராசியினர்.. ஜெட் வேகத்தில் வாழ்க்கை மாறப்போகுது.. அதிர்ஷ்டம் கொட்டும்

Subscribe to Oneindia Tamil

ஆடி மாத பலன் 2025: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் தொடங்கவுள்ளது. சந்திரன் வீட்டுக்கு சூரியன் வரும் இந்த அற்புதமான ஆடி மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றங்களால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களும் ஏற்படும். ஆனி மாதம் முடிந்து தற்போது ஆடி மாதம் பிறக்கப் போகிறது.

magaram-aadi-month-rasi-palan-what-kind-of-benefits-will-get-magaram-people-in-the-month-of-aadi

ஆடி மாதம் என்பது அம்மனுக்குரிய மாதமாகும். ஆடித் திருவிழா, குலதெய்வ வழிபாடு, நல்ல காரியங்கள், உணவு தானமாகக் கொடுப்பது, அனைத்து கோயில்களின் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். சூரியனின் நகர்வை வைத்தே ஒவ்வொரு மாதமும் கணிக்கப்படுகிறது. சந்திரன் வீட்டுக்கு சூரியன் வரும் மாதமே ஆடி மாதம். ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பானதாகும்.

மிதுன மனைவியில் குரு பகவான் இருக்கிறார். கன்னி மனையில் செவ்வாய் பகவான் ஆடி 12 ஆம் தேதி பெயர்ச்சி ஆகிறார். சுக்கிர பகவான் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்கு பெயர்ச்சியாகிறார். சூரிய பகவான் கடக மனையில் இந்த மாதம் முழுதும் அமர்ந்து கொண்டு பலனை கொடுக்கப் போகிறார். கேது பகவான் சிம்மத்திலும், ராகு கும்பத்திலும் உள்ளது. சனி பகவான் வக்கிரமடைந்து மீன மனையில் இருக்கப் போகிறது.

அந்த வகையில், இந்த ஆடி மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், மேன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மகர ராசி பலன்

மகர ராசிக்காரர்களுக்கு அனைத்து விஷயங்களிலும் ஏற்றம் மிகுந்த காலகட்டமாக இருக்கும். அண்மையில் உங்களுக்கு ஏழரை சனி முடிந்துள்ளது. 3 இல் சனி பகவான் இருக்கிறார். 7 இல் சூரியன், புதன் இணைந்துள்ளனர். 7இல் அமர்ந்து பாக்கியாதிபதி ராசியைப் பார்ப்பது யோக அமைப்பாகும். 6 ஆம் இடத்தில் சுக்கிரன் மறைந்துள்ளார். ஆனால் அங்கு ஏற்கனவே இருக்கும் குருவோடு தான் இணைகிறார்.

பாக்கியங்கள்

மாதத்தின் முதல் 10 நாட்கள் 5 ஆம் இடத்தில் குரு இருப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண யோக உண்டாகும். குழந்தை பாக்கியத்துக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும். தம்பதிகளுக்கு நிறைவான மாதமாக இருக்கும். 8 ஆம் இடத்தில் இருக்கும் கேது, அதன் அதிபதியான சூரியன் 7 ஆம் இடத்தில் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் மனைவி, கணவன், காதலன், காதலிக்கு செலவு செய்யும் காலகட்டமாக இருக்கும்.

கடன் வாங்காதீங்க

கணவன், மனைவி, காதலன், காதலி கேட்ட பொருளை கடன் வாங்கியாவது வாங்கி கொடுக்கும் அமைப்புள்ளதால் கவனமாக இருப்பது நல்லது. தகுதியை மீறி கடன் வாங்காமல் இருக்க வேண்டும். 3 இல் இருக்கும் சனி பகவான் உங்கள் முயற்சிகள் அனைத்தையும் பழிக்கச் செய்வார். வேலை மாற்றம், வேலை போனால் கூட கவலைப்படத் தேவையில்லை. அட்டகாசமான வேலைவாய்ப்புகள் வந்து சேரும்.

தொழில்

தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் மாற்றம், வியாபாரத்தில் சுணக்கம் இருந்த காலகட்டம் எல்லாம் மாறும். இனிமேல் உங்கள் வாழ்க்கையில் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. அனைத்து சூழ்நிலைகளிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆண், பெண் இருபாலரும் வயதிற்கேற்ப பலன்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும்.

யோகம்

கடன் தொல்லைகள் நீங்குவது, திருமண யோகம் உண்டாகும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பேரன் பேத்திகளால் மகிழ்ச்சி ஏற்படும். சொந்த வீடு , வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அதற்கான வருமானங்கள் வந்து சேரும். மொத்தத்தில் இந்த ஆடி மாதம் உங்களுக்கு யோகங்கள், பாக்கியங்கள் அனைத்தும் கிடைக்கும் மாதமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+