சர்ப்ரைஸ்.. சர்ப்ரைஸ்.. மகர ராசிக்கு ஆகஸ்ட் மாதத்தில் ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

ஆகஸ்ட் மாத ராசி பலன் 2025: ஆகஸ்ட் மாதத்தில் முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆகஸ்ட் மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஆகஸ்ட் மாதத்தில் மிதுன ராசியில் குரு பகவானும், சுக்கிர பகவானும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி வரை இணைந்து இருக்கின்றனர். இந்த காலகட்டத்தில் மகாலட்சுமி வழிபாடு செய்வது அற்புதமான மாற்றங்களை கொடுக்கும். நாச்சியார் திருமொழி கேட்பது, படிப்பது வெற்றியைத் தரும். தற்போது கடக ராசியில் இருக்கும் புதன் பகவான் சிம்ம ராசிக்குள் பிரவேசமாகியிருக்கிறார். சுக்கிர பகவான் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு வருகிறார். கன்னியில் செவ்வாய், கும்பத்தில் ராகு, மீனத்தில் சனி பகவான் வக்கிரமாக இருக்கிறார். அந்த வகையில், இந்த ஆகஸ்ட் மாதத்தில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Magaram lucky zodiac signs

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதி அற்புதமாக இருக்கும். உங்களின் லாபாதிபதியான செவ்வாய் இந்த மாதம் முழுவதுமே, உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் அமர்ந்துள்ளார். இரண்டாம் அதிபதி சனி மூன்றாம் இடத்தில் இருக்கிறார். 11 ஆம் அதிபதியான செவ்வாய் ஒன்பதாம் இடத்தில் இருப்பது அற்புதமான அமைப்பாகும். 3, 9 நேரடியாக பார்வை விழுவதால் தன லாபம் உருவாகும்.

மாற்றங்கள்

பண வரவு சிறப்பாக இருக்கும். கடந்த சில வருடங்களாகவே பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவு, நம்பிக்கை துரோகம் என்று அதிக வலியை அனுபவத்திருப்பீர்கள். கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகி நல்ல மாற்றங்கள் நிகழும். பழைய பாக்கி வசூலாகும். கடன் நெருக்கடி குறையும்.

கிரகங்களின் பெயர்ச்சி

தற்போது ஆறாம் இடத்தில் உள்ள சுக்கிரன், 20 ஆம் தேதிக்கு பிறகு ஏழாம் இடத்துக்கு பெயர்ச்சியாகி ராசியை நேரடியாக பார்க்கவுள்ளார். முதல் 20 நாட்கள் சற்று போராட்டங்கள் இருந்தாலும், மாதத்தின் கடைசி 10 நாட்கள் அட்டகாசமாக இருக்கும். 15 ஆம் தேதிக்கு பிறகு ஏழாம் இடத்தில் உள்ள சூரியன் எட்டாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார்.

திடீர் அதிர்ஷ்டம்

எதிர்பாராத நேரத்தில் திடீர் அதிர்ஷ்டம், திடீர் லாபம், திடீர் பண வரவு போன்றவை இருக்கும். தந்தை - மகன் இடையே இருந்த பிரச்சனைகள் விலகும். தந்தை மூலம் ஆதாயம் ஏற்படும். தந்தை வழி சொத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வெளிநாடு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஏற்கனவே வெளிநாடு வேலைகளில் இருப்போருக்கு வீடு, நிலம், கார் உள்ளிட்ட அசையும், அசையா பொருட்கள் சொத்து சேர்க்கை இருக்கும்.

வெற்றி

கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பணி மாற்றத்துக்கு காத்திருப்போர், புதிதாக வேலை வாய்ப்பு தேடுவோருக்கு சிறப்பாக உத்யோகம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குதல் அல்லது தொழிலில் புதிய முயற்சிகளை செய்வீர்கள். மூன்றாம் இடத்தில் உள்ள சனி பகவான் உங்கள் முயற்சிகள் அனைத்திற்கும் வெற்றியை தேடி தருவார்.

பரிகாரம்

உத்யோகம், தொழிலில் புதிய பொறுப்புகள், பதவி உயர்வு, சம்பள உயர்வு, முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். ஏழரை சனியால் பாதிக்கப்பட்ட உங்களுக்கு, இப்போதிருந்து படிப்படியாக நற்பலன்களை பெறுவீர்கள். திருச்செந்தூர் முருகன் கோயில் சென்று வழிபடுவது அற்புதமான மாற்றங்களை கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+