Magaram Rasi Palan: மகர ராசிக்கு தலைக்கு மேல் சுத்தும் கத்தி... பெரிய அதிர்ஷ்டமும் வரப்போகுது

Subscribe to Oneindia Tamil

செப்டம்பர் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கியுள்ளது. இந்த செப்டம்பர் மாதத்தில் பல்வேறு முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறுகிறது. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

செப்டம்பர் மாதத்தில் மூன்று முக்கிய பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. முதலில் செப்டம்பர் 13, 14 ஆம் தேதி சுக்கிர பகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அதற்கு அடுத்ததாக செப்டம்பர் 17 ஆம் தேதி புரட்டாசி மாதம் ஆரம்பிப்பதால் சூரியனும், அதற்கு முன்தினம் புதனும் கன்னி ராசிக்குப் பெயர்ச்சி ஆகின்றனர். அங்கு சனி வக்கிரமாகி பார்வை பலத்தை கொடுக்கவுள்ளார்.

magaram-rasi-palan-what-kind-of-benefits-will-get-magaram-capricorn-rasi-people-during-this-month

இந்த கிரக மாற்றத்தின் காரணமாக செப்டம்பர் 14 ஆம் தேதிக்குப் பிறகு மூன்று ராசிகளுக்கு அதீத அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டாகும். வேலையில் பளு, அழுத்தம் வருவதற்கான வாய்ப்புள்ளது. சிறு சிறு அடிபடுதல், அரசுத் துறையில் அதிகாரிகளாக இருப்பவர்களுக்கு, கல்வி நிறுவனம், மருத்துவர்களுக்கு பாதிப்புகள், பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அதனால், செப்டம்பர் 14 ஆம் தேதிக்குப் பிறகு மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. செப்டம்பர் 16 ஆம் தேதிக்குப் பிறகு அரசுத் துறை அதிகாரிகளுக்கு, அரசாங்கத்துக்கு பெரும் பிரச்சனை வருவதாக வாய்ப்புள்ளது.

இந்த செப்டம்பர் மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்

மகரம்

மகர ராசி, லக்கினக்காரர்களுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதி வரை அஷ்டமத்தில் 4 கிரகங்கள் இருக்கின்றன. மகர லக்கினக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். தாங்க முடியாத பிரச்சனைகள் இருக்கும். பெரியவர்களால் பிரச்சனை ஏற்படும். பெயர் கெட்டுப் போகும் அளவுக்கு பாதிப்பு உண்டாகும். பெரிய டார்ச்சர்களுக்கு மத்தியில் மன அழுத்தம் ஏற்படும் சூழல் உண்டாகும்.

வெளிநாடு யோகம்

பாக்கிய ஸ்தானம் 9 ஆம் இடத்துக்கு சூரியன், புதன் போவதால் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். அரசு காரியங்களில் ஈடுபட ஆரம்பிப்பீர்கள். கோவில்கள் கட்டுவீர்கள். உங்கள் முன்னிலையில் சில விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். ஆனால், அழுத்தம், டென்ஷன் ஏற்படும்.

விடுதலை

அக்டோபர் 1 ஆம் தேதிக்குப் பிறகு எல்லா பிரச்சனைகளில் இருந்து விடுதலை அடைவீர்கள். அரசு சார்ந்த துறைகள், கெமிக்கல், கட்டுமானத் துறையில் இருப்பவர்களுக்கு பெரிய அளவில் ஏற்படும். விற்க முடியாத இடம், நிலங்களை விற்று முடிப்பீர்கள். பெரிய பணம் கண்டிப்பாக வரும். பண வரவு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். வளர்ச்சி மிகுந்த காலகட்டமாக இருக்கும்.

நிதானம் அவசியம்

உங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அனைத்து விஷயங்களிலும் நிதானம், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. இந்த காலகட்டத்தில் ரங்கநாதப் பெருமாளை வழிபாடு சகலவித ஏற்றங்களையும் ஏற்படுத்தும். பணம் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. பண விஷயங்களில் ஏமாறும் வாய்ப்பு உள்ளது.

ஆரோக்கியம்

4 கிரகங்கள் அஷ்டமத்தில் அமருவதால் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. எழும்பு சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. விபத்துகளில் சிக்கும் வாய்ப்புள்ளதால் வண்டி, வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத பிரச்சனைகளுக்குள் சிக்கிக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

மதிப்பெண்

மகிழ்ச்சி ரீதியாக 75 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 80 சதவீதமும் நன்மைகள் ஏற்படும். அனந்த பத்மநாபனை வழிபாடு செய்வது நல்ல மாற்றங்களையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+