Magaram Rasi Palan: மகர ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. அதிர்ஷ்டத்தை அள்ளும் நேரம்.. வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க
Magaram Rasi Palan: மார்ச் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 2 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். இந்த வாரத்தில் பங்குனி மாதம் பிறக்கவுள்ளது. பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 2 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மகரம் ராசி பலன் (Magaram Rasi Palan)
மகரம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு தொழில் ஏற்றம், உத்தியோக ஏற்றம், படிப்பு ஏற்றம், வியாபார ஏற்றம் உண்டாகும். சுபகாரியத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். அடுத்தடுத்து சுபகாரியம் நடக்கும் யோகம் உண்டு. பண வரவில் இருந்த தடைகள் நீங்கும். புதிய கடன்கள் கிடைக்கும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். கடன்களை அடைத்து முடிப்பதற்கான யோகம் உண்டாகும்.
வீடு வாங்கும் யோகம்
வீடு வாங்குவது, நிலம் வாங்குவது போன்ற யோகம் உண்டாகும். வேலையில்லை என்று புலம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும். 8 ஆம் இடத்தில் கேது இருப்பதால் கவனம் தேவை. உடம்பு, நரம்பு, தூக்கமின்மை, நண்பர்களுடன் வெளியில் சுற்றுவது, சினிமாவிற்கு செல்வது, செல்போனை நோண்டிக் கொண்டிருப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
இடமாற்றம்
எல்லா விஷயங்களிலும் நன்மை பெறும் காலகட்டம் என்பதால் இந்த காலகட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய காலகட்டம். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். வேறு தொழிலுக்கு மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் இப்போது மாறுவது நல்லது. ஊர்மாறுவது, இடமாற்றம், தொழில் மாற்றம், வியாபார மாற்றம், உத்தியோக மாற்றத்திற்கான நல்ல காலகட்டம்.
முன்னேற்றம்
எல்லா விதமான மாற்றங்களும், நல்ல முன்னேற்றங்களும் ஏற்படும். அடுத்த இரண்டரை ஆண்டுகள் உங்களுக்கு அற்புதமாக இருக்கும் என்பதால் இதனைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. வண்டிகளில் செல்வோர் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். படிக்கட்டுகளில் செல்லும்போது, உயரமான பகுதிகள், விஷ பூச்சிகள், ஜந்துக்கள், விலங்குகள், செல்லப் பிராணிகளிடம் கவனம் தேவை.
வழிபாடு
தேவையில்லாத செயல்களில் ஈடுபட்டால் கண்டிப்பாக சிக்கலில் சிக்குவது நல்லது. நீங்கள் இருக்கும் பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்வது நல்லது. அலர்ஜிகள் வருவதற்கான வாய்ப்புள்தால் கவனம் தேவை. நவக்கிரகத்தில் இருக்கும் புதன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். முதுகுத்தண்டுவடம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நன்மையைத் தரும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: ராஜாபகவத் போல மாறும் விருச்சிக ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கோடீஸ்வர யோகம் பெறும் சிம்ம ராசி.. அள்ளிக் கொடுக்கும் குரு, கேது பகவான் -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. இந்த விஷயத்தில் கவனம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது












Click it and Unblock the Notifications