Rasi Palan This Week: கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா.. மகர ராசிக்கு நிலம், வீட்டில் அடிக்கும் ஜாக்பாட்
Magaram Rasi Palan: மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை, பங்குனி 16 ஆம் தேதி முதல் பங்குனி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை, பங்குனி 16 ஆம் தேதி முதல் பங்குனி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மகரம் ராசி பலன் (Magaram Rasi Palan)
மகர ராசியினருக்கு 3 இல் சூரியன், செவ்வாய், சனி இருப்பதால் நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். புது அமைப்பு ஏற்படும். ஆரோக்கியத்தில் ஒருவிதமான பதட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
ஜெயம்
முதுகுத் தண்டுவடம், கழிவுப் பாதையில் வரும் பிரச்சனைகளில் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகம் ரீதியாக அனுகூலம் காணப்படும். வியாபாரத்தில் ஏற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொழில் ரீதியாக இருந்து வந்த கஷ்டங்கள் தீரும். யோக பலத்தை அதிகளவில் பெறக்கூடிய நல்ல காலகட்டம். படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினருக்கு நல்ல விஷயங்கள் நடக்கும்.
வெளிநாடு யோகம்
வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் யோகம் உண்டாகும். தொழில், வெளிநாட்டில் பிரச்சனைகள் வந்தாலும் ஏதாவது ஒரு வழியில் தப்பிக்கும் யோகம் உண்டாகும். யோசனை செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. 6 ஆம் இடத்தில் குரு, 4 ஆம் இடத்தில் சுக்கிரம் இருப்பதால் வீடு, நிலம், வாசல் தொடர்பான ஏற்றங்கள் ஏற்படும்.
வழிபாடு
சொந்த ஊரில் சந்தோஷம் ஏற்படும். உடம்பில் ஹார்மோன் குறைபாடுகள் நீங்கும். நிறைய நன்மைகள் ஏற்படும் காலகட்டம். பல், வாய், அலர்ஜி, சளி, காய்ச்சல் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இரவு நேரத்தில் குளிர்ந்த பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளையார் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். காரியசித்தி மாலை தினந்தோறும் படிப்பது, கேட்பது மேன்மையைத் தரும்.
பிரச்சனைகள்
நம்பி பணம் கொடுத்து ஏமாறாமல் இருப்பது நல்லது. இதுவரை எடுத்த முயற்சிகள் எல்லாம் கொஞ்சம் தடைபடுவதற்கான வாய்ப்பு ஏற்படும். சுக்கிரன் 4 ஆம் இடத்திலும், குரு அஷ்டமத்திலும் இருக்கின்றனர். பிள்ளைகளால் பிரச்சனைகள், பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். வண்டி, வாகனம், சைக்கிள் போன்றவற்றில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். புதிதாக எடுத்து செய்யும் விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
வழிபாடு
திருப்தியான நிலைமை இருக்காது. இளைய சகோதர, சகோதரிகளின் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சந்தோஷம் ரீதியாக 60 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 80 சதவீதம் நன்றாக இருக்கும். முருகர் வழிபாடு அற்புதமான ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications