Rasi Palan This Week: மகர ராசிக்கு புதிய நபர்களால் வரும் ஆபத்து.. பண விஷயத்தில் ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: செப்டம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான ஆவணி 30 முதல் புரட்டாசி 5 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

magaram-weekly-rasi-palan-what-kind-of-benefits-and-fortunes-will-get-magaram-capricorn-people-fr

ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் பிறக்கவுள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்குரியது. சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. அந்த வகையில், செப்டம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் தனிப்பட்ட முறையில் எந்தவொரு பதட்டமும் இல்லாமல் இருப்பது நல்லது. புதிய அறிமுகங்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தாய், தந்தை வழி உறவினர்களை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. முதலீடுகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது.

கவனம்

பயணங்களில் புதிதாக அறிமுகமாகும் நபர்களால் தேவையில்லாத ஏமாற்றம், சங்கடங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. செல்போனில் வரும் தேவையில்லாத லிங்குகளை தெரியாமல் கூட தொட்டுவிடாமல் இருப்பது முக்கியம். உறவு முறையில் கோபத்தை தவிர்த்து இணக்கமாகச் செல்வது நல்லது. சுப விரையங்களைச் செய்து மகிழ்வீர்கள்.

அனுகூலம்

தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நல்ல முன்னேற்றங்களைக் காண்பீர்கள். அக்கம்பத்தினரிடம் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். கொடுத்த வாக்கை வீட்டிலும், வெளிவட்டாரங்களிலும் காப்பாறக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். மனதில் உள்ள பாரங்கள் படிப்படியாக குறையும்.

கவனம்

பெரியவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். புதிய அறிமுகத்தில், வியாபாரத்தில் என அனைத்து விஷயத்திலும் சிறிது விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவது போன்றவற்றை குறிப்பாக புரட்டாசி மாதத்தில் தவிர்ப்பது நல்லது. உங்களுடைய வரம்புக்கு மீறி மற்றவர்களுக்கு உதவி செய்வது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அடுத்தடுத்து நல்ல விஷயம்

இதுவரை இழுபறியாக இருந்த விஷயங்கள் எல்லாம் நீங்கி இனி அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். முதலீடுகள், மற்றவர்களுக்கு உதவுவது போன்ற பணம் சார்ந்த விஷயத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நன்மை பயக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+