Rasi palan this week: மாஸ் காட்டும் மகர ராசி.. ஆவணி மாதம் வரை ஒரு விஷயத்தில் அதீத ஜாக்கிரதை
வார ராசி பலன்: அம்மனுக்குரிய மாதமான இந்த ஆடி மாதத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு விஷேசமான மாதமாக ஆடி மாதம் உள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

அந்த வகையில், ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மகரம்
மகரம் ராசிக்காரர்கள் காது, மூக்கு, தொண்டை, சைனஸ், ஒற்றை தலைவலி தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தொழில், வியாபாரம், உத்தியோகம், படிப்பு ரீதியாக அனைத்து விதமான ஏற்றங்களும் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றமும், லாபமும் காணப்படும்.
தடைகள் நீங்கும்
வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் பனிபோல விலகும். சுப விரையங்கள் செய்து மகிழ்வீர்கள். உங்களுக்குத் தேவையான பொருள்கள், வீட்டுக்குத் தேவையான பொருள்கள், கார், வண்டி, வாகனம், நிலம் வீடு போன்ற சுபச் செலவுகளைச் செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அசையும் மற்றும் அசையா பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.
குட் நியூஸ் நிச்சயம்
எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இழுபறியாக இருந்து வந்த விஷயங்கள் அனைத்தும் அடுத்தடுத்து நடக்கும் வாய்ப்புள்ளது. யோக பலன்கள், நன்மைகள் அதிக அளவில் கிடைக்கும். பிள்ளைகள் விஷயத்தில் விரைவில் அனுகூலம் காணப்படும். குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும் அற்புதமான நேரமாக இருக்கும்.
கவனம்
அரசுத் துறை, அரசியல்வாதிகளுக்கு அனுகூலம் ஏற்படும். பதவி உயர்வுகள் கிடைக்கும். மனைவியாக இருந்தால் கணவரின் உடல்நிலையிலும், கணவராக இருப்பின் மனைவியின் உடல்நிலையில் அதிகமான கவனத்தை செலுத்த வேண்டும். நரம்பு தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். சரியான நேரத்தில் தூங்குவது, உரிய மருந்துகளை பயன்படுத்துவதிலும் கவனம் தேவை.
வழிபாடு
வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். வேகமாக ஓட்டுவது, ஸ்டண்ட் செய்வது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. ஆவணி மாதம் முடியும் வரை வாகனத்தில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஞாயிற்றுக்கிதோறும் அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுவது பெரிய நம்பிக்கையையும், முன்னேற்றத்தையும் கொடுக்கும். பசு நெய் தீபம் ஏற்றுவது அஷ்டலட்சுமி கடாட்சத்தையும், மன அழுத்தத்தையும் நீக்கும்.












Click it and Unblock the Notifications