Rasi Palan This Week: மகரத்துக்கு குருவின் பார்வை.. குறி வச்சதெல்லாம் விழும் யோகம்.. ஒரே குஷிதான்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: செப்டம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான ஆவணி 16 முதல் ஆவணி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

magaram-weekly-rasi-palan-what-kind-of-benefits-magaram-capricorn-people-will-get-from-septemer-1

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும்.

அந்த வகையில், செப்டம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்த தடைகளை தவிடு பொடியாக்கும் காலகட்டமாக இருxக்கும். யோக பலத்தை அதிக அளவில் பெறக்கூடிய காலகட்டம். பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த பதற்றம் படிப்படியாகத் தீரும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கும் சாத்தியக் கூறுகள் உண்டு. யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் நல்ல அமைப்பு உள்ளது.

கவனம்

கையெழுத்து போடும் விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. எந்தவொரு ஆவணமாக இருந்தாலும் அதனை ஒருமுறைக்கு இருமுறை படித்துப் பார்த்துவிட்டு கையெழுத்துப் போடுவது நன்மை பயக்கும். சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து விஷயங்களிலும் ஈடுபடுவது ஏற்றத்தை தரும். தொழில் ஸ்தானத்தை குரு பார்ப்பதால் அனுகூலம் காணப்படும்.

ஆரோக்கியம்

ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை. வண்டி, வாகனங்களை இயக்கும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தர்க்கம் செய்யாமல் பொறுமையாக செல்வது நல்லது. மேலதிகாரிகளிடம் பதவி உயர்வு, சம்பள உயர்வில்லை என்று புகார் கூறுவது, சக ஊழியர்களிடம் கோபப்படுவது, கடுமையான சொற்களைப் பேசுவது சிக்கலை ஏற்படுத்தி விடும் வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை.

குரு பார்வை

மூன்று குரங்கு பொம்மைகளை நியாபகத்தில் வைத்துக் கொண்டு அனைத்து காரியங்களையும் செய்வது நல்லது. வாகனங்களில் வித்தைகளைத் தவிர்த்துக் கொள்வது நல்லது, குருவின் பார்வை 12 ஆம் இடத்தைப் பார்ப்பதால் சுப விரையம் ஏற்படும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக்கூடிய இனிமையான சூழல் ஏற்படும். தொழில் ரீதியாக அனுகூங்கள் பெரிய பலத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும்.

தொழில் யோகம்

புதிய தொழில் தொடங்குவதற்கு அற்புதமான காலகட்டம். புதிய தொழில்களைத் தொடங்கினால் நல்ல முன்னேற்றம் வருவதற்கான அதிர்ஷ்டமான காலகட்டமாகும். அஷ்டமத்தில் சூரியனும், கேதுவும் இருப்பதால் படபடப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள், நரம்பு, மன அழுத்தம் சம்பந்தப்பட்ட உபத்திரவங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.

வழிபாடு

குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் காணப்படும். விநாயகர் வழிபாடு, அனுமன் வழிபாடு, நரசிம்மர் வழிபாடு ஆகிய மூன்று வழிபாடு செய்வது, மந்திரங்களைக் கேட்பது அற்புதத்தை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+