Rasi Palan This Week: மாஸ் காட்டும் மகர ராசி.. இந்த வாரத்தில் காத்திருக்கும் அதிர்ஷ்டம்
வார ராசி பலன்: அக்டோபர் 1 முதல் 5 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 15 முதல் 19 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நவராத்திரி ஆரம்பித்துள்ளது. அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமி வரை நவராத்திரி விசேஷம் நடைபெறும். செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பு, நிலம் என அனைத்து விஷயங்களிலும் ஏற்றம் காணப்படும். ரத்த பந்த உறவுகளுக்கும், உங்களுக்கும் இருந்த கஷ்டங்கள் தீரும். பெற்றோர், பெரியவர்களின் தேக ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கழுத்து, அடிவயிற்றில் சிறிய பிரச்சனைகள் மற்றும் பரம்பரையாக இருக்கும் விஷயங்களிலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சுப விரைய பிராப்தம் உண்டாகும்.
அதிர்ஷ்டம்
வீடு, நிலம், முதலீடுகளுக்கு எந்தவிதக் குறையும் இருக்காது. எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும் யோகம் உண்டு. நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாகனத்தில் அதிக நன்மை, மாற்றம் உண்டாகும். யோக பலன்களை அதிக அளவில் பெறும் காலகட்டம். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.
முன்னேற்றம்
தொழிலில் இருந்து வந்த பாதிப்புகள், இழுபறியாக இருந்து வந்த விஷயங்கள் எல்லாம் நீங்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் டக்கென நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல முன்னேற்றத்தையும், அனுகூலத்தையும் ஏற்படுத்தும். துணைக்கும், உங்களுக்கும் இருந்த அந்நியோன்ய குறைபாடுகள் நீங்கும். குடும்பத்தில் புது வரவுகள் வரக்கூடிய பிராப்தம் உண்டு.
யோக பலன்
அற்புதமான முன்னேற்றங்கள் ஏற்படும். மனதில் இருந்து வந்த பாரங்கள் படிப்படியாக குறையும். எல்லா விஷயங்களையும் சமாளிக்கலாம் என்கிற நம்பிக்கை ஏற்படும். யோக பலன் அதிகளவில் கிடைக்கும். குருவின் பார்வை தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் தொழில், வியாபாரம், படிப்பு, உத்தியோகம், கூட்டுத் தொழிலில் பெரிய அளவில் அனுகூலம் காணப்படும்.
வழிபாடு
வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனத்துடன் செல்வது நன்மை பயக்கும். புதன்கிழமை தோறும் பெருமாள் வழிபாடு, விநாயகர், தாயார் வழிபாடு செய்வது நல்ல மாற்றத்தையும், ஏற்றத்தையும் ஏற்படுத்தும். புதன்கிழமை மதிய வேளைகளில் சாப்பாடு மற்றும் எலுமிச்சை ஊறுகாய் தானமாகக் கொடுப்பது குடும்பத்தில் இருக்கும் பெற்றோர், பெரியோர் மற்றும் அக்கம்பக்கத்தினருடன் இருந்து வந்த மனத் தாங்கல்கள் அனைத்தும் நீங்கும்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications