சிவராத்திரியன்று சிவனின் அருளைப் பெற.. தனுசு முதல் மீனம் வரை செய்ய வேண்டிய வழிபாடுகள், பரிகாரங்கள்?

Subscribe to Oneindia Tamil

மஹா சிவராத்திரி: மஹா சிவராத்திரி பிப்ரவரி 26 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படவுள்ளது. மாலை முதல் காலை வரை நான்கு கால பூஜைகளுடன் ஒவ்வொரு சிவாலயங்களிலும் மஹா சிவாராத்திரி விழா கொண்டாடப்படும். இந்த நன்னாளில் தனுசு முதல் மீனம் வரை ஒவ்வொரு ராசியினரும் சிவபெருமானை வழிபடும் முறை குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

மாதம்தோறும் சிவராத்திரி வருகின்றது. ஆனாலும், மாசி மாதம் வரும் மஹா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். சிவனடியார்கள் எல்லோரும் சதுர்தசியிலும் விரதம் இருந்து சிவனை வழிபாடுவார்கள். ஆண்டு முழுவதும் வரும் சதுர்தசியில் வழிபடவில்லை என்றாலும் மாசி மாதம் வரும் சிவராத்திரி அன்று வழிபடுவதால் அனைத்து விதமான பலன்களையும் பெற்று விடலாம் என்பது நம்பிக்கை.

2025 Maha sivarathri Astrology Rasi palan

144 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா கொண்டாடப்பட்டு வருகிறது. கும்பத்தில் சூரியனும், ரிஷபத்தில் குருவும் இருக்கக்கூடிய காலகட்டத்தில்தான் கும்பமேளாக்கள் நடத்தப்படும். பெரும்பாலும், அனைத்து கிரகங்களும் நேர்க்கோட்டில் அமைந்திருக்கும். இதேபோன்ற அமைப்பு 144 ஆண்டுகளுக்கு முன்பாகததான் அமைந்தது. அதனால்தான் இது மகா கும்பமேளா என்று அழைக்கப்படுகிறது.

மகா கும்பமேளாவையொட்டி, மகா சிவராத்திரி நாளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். இந்த நாளில் அனைவரும் கண் விழித்திருந்து சிவபூஜை செய்வது நல்லது. நான்கு கால பூஜைகள் நடைபெறும். அதில் அனைவருமே கலந்துகொள்வது நல்ல பலன்களைத் தரும். ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கு பரிகார வழிபாடுகள், வழிபாட்டு முறைகள், சமர்ப்பணங்கள் உள்ளன. இந்த முறைகளை கடைப்பிடிப்பதால் மக்களுக்கு சிறப்பான பலன்களும் கிடைக்கும்.

தனுசு: குருவின் ஆதிக்கத்தில் வரக்கூடிய ராசிக்காரர்கள். தனுசு ராசியினர் எல்லோருமே குரு பகவானுக்குப் பிரியமான சமர்ப்பணங்களை செய்ய வேண்டும். சிவன் அபிஷேக பிரியர் என்பதால் இரண்டாவது காலத்தில் தட்சிணாமூர்த்தியாகத்தான் தரிசனம் செய்வோம். இரண்டாம் கால பூஜைக்கு அபிஷேக திரவியங்களை வாங்கிக் கொடுப்பது நல்ல வளங்களைத் தரும். இளநீர், பால், தயிர், சந்தனம் போன்றவற்றை தானமாக கொடுக்கலாம்.

தனுசு ராசிக்கு 4 ஆம் இடத்தில் சனி வருவதாலும், 6 இல் குரு மறைகிறார். இரண்டு மாதங்கள் கழித்து 7 ஆம் இடத்துக்கு வரப்போகிறார். கெடு பலன்கள் குறைந்து குரு பார்வை பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்றால் அபிஷேக திரவியங்களை தானமாக கொடுத்து, அந்த அபிஷேகங்களை கண்டு வழிபடுவது சகலவிதமான நன்மைகளைத் தரும்.

மகரம்: மகர ராசிக்காரர்கள் கடந்த ஆண்டுகளில் மிகுந்த சிரமங்களை சந்தித்திருப்பீர்கள். அந்த சிரமங்கள் அனைத்தும் விடுபடும். இந்த ஆண்டு பல்வேறு நல்ல விஷயங்கள் வரத் தொடங்கும். அடுத்த இரண்டு மாதங்கள் கழித்து சனி பகவான் விலகுவதால் அனைத்து விதமான நல்ல பலன்களைப் பெறுவீர்கள். சனி பகவான் விலகுகிறார். சனி பகவான் தற்போது மூன்றாம் இடத்தில் இருப்பதால் அவரால் தீமைகள் எதுவும் இனி உங்களுக்கு ஏற்பட வாய்ப்பில்லை. இருப்பினும் சிவாலயங்களில் நல்லெண்ணெயில் விளக்கேற்றி வழிபடுவது பரிபூரணமான பலன்களைத் தரும். ஒளிமயமான எதிர்காலம் உண்டாகும்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்களைப் பொருத்தவரை இப்போதைக்கு ஜென்ம ராசியில் சனி பகவான் இருக்கிறார். 4 ஆம் இடத்தில் குரு பகவான் இருக்கிறார். கடுமையான காலகட்டத்தில் கும்ப ராசியினர் சிக்கி இருப்பார்கள். இப்போது 2 ஆம் இடத்தில் 3 கிரகங்கள் உள்ளது. ராகு புதன் சுக்கிரன் கிரகம் இருப்பதால், மற்ற கிரகங்களின் பலனை பெற்று இந்த கடினமான காலத்தை கடக்க வேண்டும்.

சனி பகவான் 2 மாதங்கள் கழித்து இரண்டாம் இடத்துக்குப் போகிறார். குரு பகவான் 5 ஆம் இடத்துக்குப் போய்விடுவார். இந்த காலகட்டம் அற்புதமான காலகட்டமாக இருக்கும். சிவராத்திரியில் வில்வ மாலையை வாங்கி சிவபெருமானுக்கு சமர்ப்பணம் செய்வது, விபூதி அபிஷேகத்தை கண்ணால் காண்பது, விபூதி தானம் செய்வது, முல்லை மலர் சாற்றுவது நல்ல பலன்களைத் தரும். கிரகங்கள் தரும் தொல்லைகள் அனைத்தும் நீங்கும்.

மீனம்: குருவின் ஆதிக்கத்தில் வரும் ராசிக்காரர்கள். சனி பகவானே குருவின் வீட்டுக்கு வந்தாலும் பிரச்சனை இல்லை. குரு பகவானை திருப்திபடுத்தினாலே சனி பகவானால் ஏற்படும் தொல்லைகள் அனைத்தும் நீங்கும். சிவராத்தியன்று இரவு முழுவதும் சிவபெருமானை வழிபடுவது, நான்கு காலை பூஜைகளை பார்த்தாலே வினைகள் அனைத்தும் நீங்கிவிடும். அன்னதானம் செய்வது உங்களுக்கு சிறந்த பரிகாரமாக இருக்கும். 6 கால பூஜைக்குத் தேவையான அனைத்து பொருள்களையும் வாங்கி கொடுக்கலாம். எண்ணெய், திரி, வஸ்திரம் போன்ற எதை வேண்டுமானாலும் வாங்கி கொடுக்கலாம். இந்த வழிபாட்டை செய்தால் அனைத்து விதமான செல்வ செழிப்பும் உங்களுக்கு உண்டாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+