மகரசங்கராந்தி பலன் 2023..இந்த 6 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராஜயோகம்..யாருக்கு லாபம்
சென்னை: ஸ்ரீஸ்வஸ்திஸ்ரீ மங்களகரமான சுபகிருது வருடம் மார்கழி மாதம் 30ஆம் தேதி ஜனவரி 14, 2023ஆம் ஆண்டு சனிக்கிழமை கிருஷ்ணபட்சம், அஷ்டமி திதி சித்திரை நட்சத்திரம், சுகர்ம நாமயோகம் பாலவ கரணத்தில் இரவு 8.45 மணிக்கு சூர்ய உதயாதி 35.17 நாழிகை அளவில் சிம்ம லக்னம் மிதுன நவாம்சையில் சங்கராந்தி பகவான் மகர ராசியில் பிரவேசிக்கிறார். மகரசங்கராந்தியின் சஞ்சாரத்தினால் 2023 ஜனவரி 14ஆம்தேதி தொடங்கி 2024 ஜனவரி 14ஆம் தேதி வரை என்ன பலன்கள் நடைபெறும் என்பதை தனது லட்சணங்களினால் உணர்த்துகிறார்.எந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராஜ யோகமும் வெகுமானமும் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சூரியன், தனது பயணத்தை தைமாத பிறப்பன்று வடக்கு திசையை நோக்கி தொடங்குகிறார். இதை உத்திராயண புண்ணியகாலம் என்பர். உத்திராயணம் என்றால் வடக்குப்புறமான வழி என்று பொருள். இக்காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாகும்.
தை மாதத்தில் சூரியனுக்கு பகன் என்று பெயர். தை மாதம் சூரியனை வழிபட்டவர்களுக்கு எல்லா வளங்களும், பால்பாக்கியமும் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஆண்டுதோறும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரையுள்ள ஆறு மாதங்கள் உத்தராயணம் என்றும் ஆடி முதல் மார்கழி வரையுள்ள மாதங்கள் தட்சிணாயணம் என்றும் கூறப்படுகிறது. தெற்கு திசையில் பயணித்து வந்த இதில் தை மாதம் முதல் வட திசையில் பயணத்தை தொடங்குவார். இந்த நாளை தமிழகத்தில் தைப் பொங்கல் என்று கொண்டாடுகிறோம். மகர சங்கராந்தி என்று ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொண்டாடுகின்றனர்
மகரசங்கராந்தி தேவதையின் பெயர், தோற்றம், உடை, வாகனம், உணவு, அணிந்திருக்கும் ஆபரணம், புஷ்பம் போன்றவற்றுக்குத் தக்கபடி தேசத்தின் அப்போதைய நன்மை தீமைகளுக்குப் பலன் கூறுவார்கள். இந்த ஆண்டு மகரசங்கராந்தி தேவதை எப்படி எதன் மீதேறி வருகிறார் அதற்கான பலன்கள் எப்படி என்று பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

மகர சங்கராந்தியின் பிரவேசத்தினால் ஹஸ்தம்,சித்திரை,சுவாதி ஆகிய 3 நாட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தன நாசமும், விசாகம், அனுசம், கேட்டை,மூலம்,பூராடம், உத்திராடம், ஆகிய 6 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஸ்தான லாபமும் உண்டாகும்.
திருவோணம், அவிட்டம்,சதயம் ஆகிய 3 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஸ்தான நாசமும் பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி,அசுவினி,பரணி,கிருத்திகை, ஆகிய 6 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஸ்தான லாபமும் ஏற்படும்.
ரோகிணி,மிருகஷீரிடம்,திருவாதிரை,ஆகிய 3 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராஜகோபமும், புனர்பூசம்,பூசம்,ஆயில்யம்,மகம்,பூரம்,உத்திரம் ஆகிய 6 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராஜ வெகுமானமும் கிடைக்கும் என பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டுக்கும் சங்கராந்தி தேவதைக்கு ஒரு பெயர் உண்டு. 60 வருடங்களுக்கு தனித்தனிப் பெயருடைய சங்கராந்தி தேவதைகள் உள்ளன. இந்த ஆண்டு தேவதையின் பெயர், வாகனம், உடை பற்றி பஞ்சாங்கத்தில் என்ன பலன் சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
மகரசங்கராந்தி தேவதையின் பெயர்: ராக்ஷஸீ - யுத்தம்
வாகனம்: புலி - மிருக பயம்
வஸ்திரம் : சிகப்பு - பயம் கணக்கர்களுக்கு பீடை
ஆபரணம்: வைடூரியம் - கலகம், ரோக பயம்
அபிஷேகம் : கங்கா தீர்த்தம்- ஆறுகளில் வெள்ளம்
ஆயுதம் : கட்கம் - யுத்தம்
கந்தம் : குங்குமம் - சௌபாக்கியம்,பிராமணர்களுக்கு பயம்
புஷ்பம் : சிறு செண்பகம் - பிராமணர்களுக்கு சௌக்கியம்
சத்திரம் (குடை) : ரவுப்பியம் - இரும்பு விலை ஏற்றம்
சாமரம் ( விசிறி) : நீலம் - பயிர் நாசம்
வாத்தியம்: மகாபேரி - யுத்தம்
பாத்திரம்: தாமிரம் - விருஷ்டி, சுபிட்சம்
போஜனம்: பாயாசம்- வியாதி,பீடை
முகபலன் : குரோதமுகம் - தானிய விருத்தி
ஜாதி : துவி ஜென்மம் - மிலேச்சர்களுக்கு பீடை
திக்கு: தெற்கு - பிராமணர், சத்ரியர்களுக்கு சௌபாக்கியம்,வைசியர்களுக்கு பீடை
பட்சம் : கிருஷ்ணபட்சம் - வியாதி
வாரம் : சனிக்கிழமை - வியாதிபயம்
காலம் : ராத்திரி காலம் - கோபாலர்களுக்கு பீடை
லக்கினம் : ஸ்திர லக்கினம் - தானிய குறைவு
சிம்ம லக்கினம் - ஜெகத் சுகம்,புழுக்கம்
பஞ்சாங்கத்தில் கூறியுள்ளபடி மகர சங்கராந்தியினால் பாதிப்பு ஏற்படும் என்று அறிந்தவர்கள் தினசரியும் சூரிய நமஸ்காரம் செய்ய பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications