கடகத்துக்கு அஷ்டம சனி விலகல்.. நல்ல நேரம் ஆரம்பமாக போகுது.. பணம், புகழ், அதிர்ஷ்டம் இனி உங்க பக்கம்
சனிப்பெயர்ச்சி: சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சியாகிறார். மார்ச் மாதத்தில் கடக ராசிக்கான பலன்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சனிப்பெயர்ச்சியானது மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீன ராசியில் இருக்கப் போகிறார். பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருப்பது சனி தான்.

சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும். அதனால் மக்கள் சனிப்பெயர்ச்சியை அதிகளவு உற்று கவனிப்பார்கள்.
அந்த வகையில், இந்த மார்ச் மாதத்தில் கடக ராசிக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.
கடக ராசிக்காரர்களுக்கு ஒரு பெரிய நற்செய்தி கிடைக்கப் போகிறது. மார்ச் மாதம் 29 ஆம் தேதி அஷ்டம சனி உங்களுக்கு முடியப் போகிறது. இனி உங்களுக்கு நல்ல காலம் ஆரம்பிக்கப் போகுது. கடுமையான தொல்லைகளை அஷ்டம சனியால் சந்தித்து வந்திருப்பீர்கள். கடகத்தில் 10 சதவீதம் பேர் மட்டுமே பாதிக்காமல் இருந்திருப்பார்கள்.
கடகத்தில் சந்திரன் ஆட்சியாளராவார். இருப்பினும் வளர்பிறை அமைப்பில் சந்திரன் இருக்கப் பிறந்தவர்கள், பெளர்ணமிக்கு முன் பின் பிறந்தவர்கள், சந்திரனை குரு பார்க்க, சுக்கிரன் சேர்ந்திருக்கும் அமைப்பில் பிறந்தவர்கள் மட்டும்தான் பாதிக்கப்படாமல் இருந்திருப்பீர்கள். 90 சதவீத பாதிப்பைச் சந்தித்திருப்பீர்கள். உங்களுக்கெல்லாம் மார்ச் மாத இறுதியில் இருந்து உங்களுக்கு கிடைக்கப் போகிறது. இரண்டரை வருடம் கொடுத்த கஷ்டமெல்லாம் பறந்து போகும்.
நல்ல வாழ்க்கைக்கான அமைப்பினை சனி பகவான் கொடுத்துக் கொண்டு போவார். பெரிய சோதனைகள் எதுவும் இல்லாத நல்ல மாதமாக உங்களுக்கு இருக்கும். பிரிவுகள், இழப்புகள், துயரங்கள், துக்கம் அனைத்தும் விலகிப் போகும். குடும்பத்தில் அமைதி பெருகும். தூக்கமின்மை சரியாகும். கடக ராசியில் தேய்பிறை, அமாவாசை சமயத்தில் பிறந்தவர்கள் கடும் துன்பத்தைதான் அனுபவத்திருப்பீர்கள்.
இளைய பருவத்தினருக்கு காதல் தோல்வியால் மன அழுத்தத்தை சந்தித்திருப்பீர்கள். வேலை இழப்பு, வேலை இல்லை, பணம் இல்லாத சூழ்நிலை, வியாபாரம் இல்லாத அமைப்பு, தேக்க நிலை அனைத்தும் சரியாகும். இந்த மாதம் உங்களுக்கு விடிவுகாலம் தரக்கூடியதாக இருக்கும். 10 முதல் 15 வரை தெளிவான அமைப்புடன் இருக்கப் போகிறார்கள்.
உடலால், மனதால் உறவுகளைப் பிரிந்தவர்கள், அவமானத்தை சந்தித்தவர்களுக்கு இனி யோக காலமாக இருக்கும். பணம் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். அதிர்ஷ்டம் மற்றும் நல்ல நேரத்தை ஆரம்பமாகும் காலமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications