மார்ச் மாத பலன்: ஜென்ம சனியில் சிக்கப் போகும் மீனம்.. வச்சு செய்யும்.. என்னவெல்லாம் நடக்கப் போகுதோ
மார்ச் மாத பலன்: சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சியாகிறார். மார்ச் மாதத்தில் மீன ராசிக்கான பலன்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சனிப்பெயர்ச்சியானது மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீன ராசியில் இருக்கப் போகிறார். பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருப்பது சனி தான்.

சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும். அதனால் மக்கள் சனிப்பெயர்ச்சியை அதிகளவு உற்று கவனிப்பார்கள்.
அந்த வகையில், இந்த மார்ச் மாதத்தில் மீன ராசிக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.
மீன ராசிக்காரர்களுக்கு நல்லவைகள் நடக்கும் காலமாக இருக்கும். பெரிய கஷ்டங்கள் இருக்காது. ராசி நாதன் வலுவாக இருக்கிறார். பரிவர்த்தனையாக இருக்கிறார். 9 ஆம் அதிபதியோடு தொடர்பு கொள்கிறார். 10 ஆம் அதிபதி, 9 ஆம் அதிபதி ஒருவருடைய வீட்டை இன்னொருவர் தொடர்பு கொள்வது தொழில் அமைப்புகளில் சிக்கல்களையும் ஏற்படாத அமைப்பாக இருக்கும்.
மன கஷ்டங்கள் எல்லாம் நீங்கி சுறுசுறுப்பாக இருப்பீர்கள். பணப் போக்குவரத்து உண்டாகும். மார்ச் 29 ஆம் தேதி உங்களுக்கு ஜென்ம சனி ஆரம்பிக்கப் போகிறது. 50 வயதுக்கு மேற்பட்ட மீன ராசிக்காரர்களுக்கு பெரிய அளவிலான பாதிப்பு இருக்காது. 20, 30 வயதில் இருக்கக்கூடியவர்களுக்கு அவ்வளவு நன்றாக இருக்காது. கல்வியில் தடை ஏற்படும். தொழில் நன்றாக இருக்காது. வேலையில் மன அழுத்தம் உண்டாகும். இரவுப் பணி உண்டாகும். பெற்றோர்களுடன் பிரச்சனை உண்டாகும்.
பெற்றோர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். குடும்பத்தில் புரிந்து கொள்ளாத தன்மை ஏற்படும். உறவுகளிடையே ஏமாற்றம் உண்டாகும். நண்பர்கள் ஒதுக்கும் சூழ்நிலை ஏற்படும். இளைய பருவத்தினர் ஒரு மாதிரியாக பற்றற்ற நிலை உண்டாகும். சோம்பல் தன்மை ஆரம்பமாகும் மாதமாக இருக்கும். சுறுசுறுப்பாக இருப்பது நல்லது.












Click it and Unblock the Notifications