மிதுனத்துக்கு நீச்சபங்க ராஜயோகம்.. சுக்கிரன் உச்சத்தால் அதிர்ஷ்டம் கொட்டப் போகுது

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி: சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சியாகிறார். மார்ச் மாதத்தில் மிதுன ராசிக்கான பலன்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சனிப்பெயர்ச்சியானது மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீன ராசியில் இருக்கப் போகிறார். பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருப்பது சனி தான்.

March month rasi palan Midhunam sani peyarchi

சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும். அதனால் மக்கள் சனிப்பெயர்ச்சியை அதிகளவு உற்று கவனிப்பார்கள்.

அந்த வகையில், இந்த மார்ச் மாதத்தில் மிதுன ராசிக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசிக்காரர்களுக்கு ராசி நாதன் மார்ச் மாதம் முழுவதும் ராசிநாதன் நீச்சம் அடையவுள்ளார். ராசிநாதன் நீச்சமடைந்தால் தடை அமைப்புகள் ஏற்படும். மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களுக்கு நீச்சம், நீச்சவக்கிரம் அமைப்பிலேயே ராசி நாதன் இருப்பார். 2, 3 மாதங்களுக்கு பெரிய நன்மைகள் எதுவும் ஏற்படாத அமைப்பாக இருக்கும்.

புதன் நீச்சத்தில் இருந்தாலும், ராகுவுடன் இணைந்தாலும், நீச்சபங்க ராஜ யோகத்தால் சுக்கிரனை வைத்திருப்பதால் உங்களுக்கு ஒரு பெரிய யோக அமைப்பாகும். இந்த மாதம் 15 ஆம் தேதி வரை உங்களுக்கு பாதையில் பெரிய தடை இருக்கும் நிலை இருக்கும். வியாபாரம், தொழில், வேலை, விவசாயம் போன்ற அனைத்து துறைகளிலும் முதலில் கஷ்டம் இருந்தாலும் 15 நாட்களுக்குப் பிறகு நிவர்த்தி ஏற்படும். வேலையே போனாலும் புதனின் நீச்சபங்க யோகத்தாலும், சுக்கிரன் வலுவாக இருப்பதாலும் நல்ல வேலை அமைப்புகள் உண்டாகும்.

சுக்கிரன் உச்சமாக இருப்பதால் பெண் வழி உறவுகளால் நன்மை ஏற்படும். மனைவி நன்றாக இருப்பார். அலுவலகத்தில் உள்ள சக பெண் ஊழியர்களால் நன்மைகள் உண்டாகும். கடந்த காலத்தில் 2020, 2021, 2022 அஷ்டமசனி நேரத்தில் வந்த கஷ்ட நஷ்டங்கள் போன்ற பாதிப்பு உண்டாகக்கூடாது. ராசி பலவீனமாக இருந்தாலும் உங்களுக்கு யோக பலன்கள் கிடைக்கப் போகின்றன.

மே மாதத்தில் 14 ஆம் தேதி முதல் ராசியில் குரு வந்து அமரப் போகிறார். அதனால், ராசிக்கு சுபத்துவம் அதிக அளவில் கிடைக்கும். தொழில் ரீதியான முன்னேற்றங்கள், ஐடியாக்கள் உங்களுக்கு வந்து சேரும். மே மாதத்திற்குப் பிறகு நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். அதிர்ஷ்டங்களை அள்ளித் தரும் காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+