Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு சத்தமே இல்லாம நடக்க போகும் தரமான சம்பவம்

Subscribe to Oneindia Tamil

மார்கழி மாத பலன்கள்: மாதங்களில் சிறந்தது மார்கழி என்பார்கள். அந்த மார்கழி மாதம் விரைவில் பிறக்கவுள்ளது. 2025 ஆம் வருடத்தின் இறுதி, 2026 ஆம் வருடத்தின் தொடக்கம் ஆகிய இரண்டு முக்கிய நிகழ்வுகளும் மார்கழி மாதத்தில் நிகழ உள்ளது. மார்கழியை தெய்வங்களின் மாதம் என்பார்கள். அந்தளவுக்கு ஆன்மிக ரீதியாக முக்கியத்துவம் பெற்றது. இதில் கிரக நிலைகளில் பல்வேறு மாற்றங்கள், சில முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் ரிஷபம் ராசி பெறப்போகும் பலன்களை காணலாம்.

மார்கழி மாதம் 16.12.2025 தொடங்கி 14.1.2026 வரை இருக்கிறது. குரு பகவான் மிதுன ராசியில் வக்ர கதியில் உள்ளார். கேது பகவான் சிம்ம ராசியில் இருக்கிறார். புதன் - சுக்கிரன் விருச்சிக ராசியிலும், சூரியன் - செவ்வாய் தனுசு ராசியிலும் இருக்கிறார்கள். சனி - ராகு கும்ப ராசியில் உள்ளனர். 21.12.2025 ஆம் தேதி குரு பகவான் வக்ர நிலையில் புனர்பூசம் நான்காம் பாதத்தில் இருந்து, புனர்பூசம் மூன்றாம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகவுள்ளார்.

margazhi-month-rasi-palan-rishabam-rasi-people-to-get-good-benefits-during-this-margazhi-month

மார்கழி மாத பலன்கள்

22.12.2025 சுக்கிரன் பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதேபோல 25.12.2025 அன்று புதன் பகவான் விருச்சிகத்தில் இருந்து தனுசுக்கு பெயர்ச்சி ஆகவுள்ளனர். 11.1.2026 புதன் தனுசு ராசியில் இருந்து மகரத்துக்கும், செவ்வாய் பகவான் 14.1.2026 தேதி தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சி ஆகவுள்ளனர்.

நிகழ்வுகள்

19.12.2025 அன்று அனுமன் ஜெயந்தி, 20.12.2025 அமாவாசை நிகழ்வுகள் இருக்கின்றன. 30.12.2025 அன்றைய தினம் வைகுண்ட ஏகாதசி, 3.1.2026 ஆருத்ரா பெளர்ணமி, 14.1.2026 போகி பண்டிகை ஆகிய நிகழ்வுகள் உள்ளன. அதற்கு அடுத்த நாள் சூரிய பகவான் மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். பொதுவாகவே மார்கழி மாதம் முழுவதுமே விசேஷம் தான். இந்த வருடம் இது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் ரிஷபம் ராசி பெற போகும் பலன்களை காணலாம்.

ரிஷபம்

ரிஷபம் ராசி மற்றும் லக்னத்தினருக்கு இந்த மார்கழி மாதம் பல மாற்றங்களை நிகழ்த்த போகிறது. உங்கள் ராசிநாதனான சுக்கிரன் எட்டாம் இடத்தில் இருப்பதை திடீர் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அங்கு அவர் 12 ஆம் வீட்டு அதிபதியுடன் அமர்ந்திருப்பது விபரீத ராஜயோகத்தை கொடுக்கும். எட்டாம் இடத்தில் நான்கு கிரகங்களின் சேர்க்கை உள்ளது. இதனால் நிச்சயம் மாற்றம் ஏற்படும்.

பெயர் புகழ் கிடைக்கும்

உங்களின் பெயர், புகழ், அந்தஸ்து உயரப் போகிறது. தடைபட்ட காரியங்கள் நிறைவேறும். வீடு, நிலம் வாங்க நினைத்தவர்களுக்கு இந்த மாதம் அதற்கான வழி பிறக்கும். சொத்துகளில் இருந்த தடைகள் தீரும். சத்தமே இல்லாமல் பல நல்ல பலன்கள் அடுத்தடுத்து வீட்டு வாசல் கதவை தட்டும். 11 ஆம் இடமான லாப ஸ்தானத்தில் சனி பகவான் வக்ர நிவரத்தி அடைந்துள்ளார். அதனால் உத்யோகம், தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

தன்னம்பிக்கை அதிகரிக்கும்

மனதில் தன்னம்பிக்கை, தைரியம் பல மடங்கு அதிகரிக்கும். எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் சகஜமாக சமாளிப்பீர்கள். வீட்டில் இட மாற்றம் நிச்சயம் உண்டு. நீண்ட காலமாக திட்டமிட்ட வீடு புனரமைப்பு பணி செய்வீர்கள். தொட்டது எல்லாமே துலங்கும். புதிய கடன் தொடக்கம். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. முதலீடுகளில் லாபம் பல மடங்கு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கவனம்

டிசம்பர் 20 ஆம் தேதி முதல் ஜனவரி 5 ஆம் தேதி வரை மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். வேலைப்பளு அதிகரிக்கும். உங்களின் வார்த்தையை வைத்தே உங்களை மடக்கி பிடிப்பார்கள். அதனால் வார்த்தையில் கவனமாக இருக்க வேண்டும். கடன் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எதிலும் ரகசியம் கடைபிடிப்பது மிகவும் முக்கியம். வீட்டு அருகில் உள்ள முருகன் கோயில் சென்று வழிபடுவது நற்பலன்களை கொடுக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+