செவ்வாய் பகவானின் ராசி மாற்றம்.. படாத பாடு படப்போகும் 3 ராசியினர்.. எச்சரிக்கை தேவை
செவ்வாய் ராசி பலன்: செவ்வாய் பகவான் கடக ராசியில் இருந்து கீழ் நோக்கி நகருவதால் சில ராசியினரின் வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். செவ்வாயின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும். செவ்வாய் கிரகம் கடகத்தில் இருந்து கீழ்நோக்கி நகர்வதால் சில ராசியினரின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

குறிப்பாக, 3 ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் மிகுந்த சவால்களும், பிரச்சனைகளும் ஏற்படும் காலமாக இருக்கும். பணம் சார்ந்த விஷயங்களில் இழப்பு, குடும்பத்தில் நிம்மதியின்மை, மன உளைச்சல், தொழில் பாதிப்பு போன்ற பிரச்சனைகளைச் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படும்.
செவ்வாய் பகவான் வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி பிற்பகல் 1:56 மணி முதல் சந்திரனின் ராசியான கடக ராசிக்கு தனது இடத்தை மாற்றுகிறார். அந்த ராசியில் இருந்து கீழ்நோக்கி நகர்ந்து செல்கிறார்.
செவ்வாய் கிரகம் கீழ்நோக்கி நகர்வதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மூன்று ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்: மேஷ ராசிக்கு அதிபதியாக செவ்வாய் பகவான் இருக்கிறார். செவ்வாய் பகவானின் இந்த இடப்பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். உத்தியோக்தில் தடைகள் ஏற்படும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றில் தாமதம் ஏற்படும். வியாபாரிகள், தொழில் செய்பவர்களுக்கு கஷ்டமான காலமாக இருக்கும். பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
குடும்ப உறவுகளுடன் பிரச்சனைகள் அதிகரிக்கும். தலைவலி, ரத்த அழுத்தம், வயிறு பிரச்சனைகள் போன்ற உடல்நலக் கோளாறுள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கோபம் மற்றும் எரிச்சலைக் கட்டுப்படுத்துவது நல்லது. இதனால், குடும்ப உறவுகளில் விரிசல்கள் ஏற்படுவதற்கான சூழல் உருவாகும்.
கடகம்: கடக ராசியில் செவ்வாய் பகவான் செல்வதால் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மன அழுத்தம் அதிகரிக்கும். சின்ன விஷயங்களில் கூட பிரச்சனைகளில் முடிய வாய்ப்புள்ளது. பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகளை சந்திக்கும் சூழல் ஏற்படும். பணப் பற்றாக்குறையால் சில சவால்களை சந்திப்பீர்கள். தேவையற்ற செலவுகள் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. சக ஊழியர்களால் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதனால், எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குடும்ப வாழ்க்கையில் குழப்பங்கள் உண்டாவதற்கான வாய்ப்புகள் உண்டு. தாயுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் சூழல் ஏற்படும். அஜீரணம், வயிறு பிரச்சனை, தூக்கமின்மை, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளால் பாதிப்பு ஏற்படும். கோபத்தை தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய் ஆட்சி செய்யும் ராசி என்பதால் பெரிய பிரச்சனைகளையும், சவால்களையும் சந்திக்க நேரிடும். தொடர் செலவுகளால் அவதிக்குள்ளாவீர்கள். முதலீடு விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. வியாபாரிகள் முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டும். உரிய ஆலோசனையில்லாமல் மேற்கொள்ளும் முதலீடுகளால் நஷ்டத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படும்.
திருமண வாழக்கை, குடும்பத்தில் சில மன இறுக்கம் உண்டாகும். வழக்கு தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. ரத்தம், காயம், அறுவை சிகிச்சை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு.
பரிகாரம் - செவ்வாயின் இந்த கிரக மாற்றத்தால் பிரச்சனைகளை சந்திக்கும் மேஷம், கடகம், விருச்சிக ராசியினர் அனுமானை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். அதன் மூலம் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வியாழக்கிழமை தோறும் அனுமன் மந்திரம் கூறி வழிபடலாம்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications