மாசி மாத பலன்: கடக ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனமா இருங்க
Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம் என்பது மாசி மாதம் ஆகும். கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல் மார்ச் 14 ஆம் தேதி வரையிலான இந்த மாதத்தில் நிறைய விசேஷங்கள் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 15 ஆம் தேதி மகா சிவராத்திரி நடைபெறுகிறது. 4 கால பூஜைக்கு தரிசனம் செய்வது, பசு நெய், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது, அன்னதானத்திற்கு உதவி செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

சனிப்பெயர்ச்சி
வாக்கியப்படி மார்ச் 6 ஆம் தேதி காலை 8.26 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. பிப்ரவரி 17 ஆம் தேதி மயானக் கொள்ளை நடைபெறும். மார்ச் 3 ஆம் தேதி சந்திரகிரகணம் மாலை 3.30 மணி முதல் 6.47 வரை கிரகணம் நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில் விரதம், வழிபாடு செய்வது நன்மையைத் தரும். இதைத்தொடர்ந்து, மாசி மகம் நடைபெறவுள்ளது. கும்பத்தில் சூரியன் இருந்து தன் சொந்த வீட்டைப் பார்ப்பார். இந்த மாதத்தில் நடக்கப்போகும் விஷயங்கள் குறித்து பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த மாசி மாதத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்துப் பார்க்கலாம்.
கடகம் ராசி பலன்
கடக ராசிக்காரர்களுக்கு மாசி மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அஷ்டமத்தில் சூரியன், ராகு, 2 இல் கேது இருப்பதால் தேவையில்லாமல் உங்களை குறிவைத்து டார்ச்சர் செய்வார்கள். வாகனத்தில் செல்லக் கூடியவர்கள் வேகத்தைக் கட்டுப்படுத்தி, விதிமுறைகளைக் கடைப்பிடித்து வாகனத்தை ஓட்டுவது நன்மை பயக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம் என அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.
பிரச்சனைகள்
தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பது நல்லது. ஆவேசப்படுவது, கோபப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் நல்ல உறவுகள், நண்பர்கள் விட்டுப் போகும் சூழல் ஏற்படும். கணக்கு வழக்குகள், ஆவணங்களை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். இழுபறியாக இருந்த விஷயங்கள் எல்லாம் தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
கோபம் வேண்டாம்
சிறிதாக கோபப்படுவது, உணர்ச்சிவசப்படுவது கூட பிரச்சனைகள், பாதிப்பைக் கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பேப்பர் போடுவது, மேலதிகாரிகளை பகைத்துக் கொள்வது போன்றவற்றை செய்யாமல் இருப்பது நன்மை பயக்கும். வாகனத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தம், மனக் குழப்பங்களில் இருந்து கொண்டே இருக்கும்.
பெண்கள் கவனம்
மன அழுத்தத்திற்கு மருந்துகள் உட்கொண்டு வருபவர்கள் தவறாமல் எடுத்துக் கொள்வது நல்லது. பெண்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். செய்யாத தவறுக்காக தண்டனை அனுபவிக்க நேரிடும். உங்கள் கூட இருப்பவர்களே உங்களை பிரச்சைகளில் சிக்க வைக்கும் சூழல் உள்ளதால் கவனம் தேவை. கணபதி, அனுமன் வழிபாடு நன்மை பயக்கும்.
வழிபாடு
வயிறு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. மாசி மாதத்தில் எல்லா காரியங்களிலும் தடை ஏற்படும் என்பதால் திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. கணபதி வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். கோயில்களில் பொங்கல் செய்து ஏழைகளுக்கு தானமாகக் கொடுப்பது நல்லது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications